Saturday, November 19, 2011

கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19

 ~

லோக்பால்  - சட்டம் ஊழலை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
லோகபாலால் ஊழல் ஒழிக்கப்படும் என்று நம்புகிறவர்களுக்கு இதோ பட்டுக்கோட்டையின் பாட்டு. "சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்கிறது, ஆனால் திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டே இருக்கிது" .லோக்பால் லஞ்சத்தை பண்ணி என்ன சொல்லுது தெரியல.. லஞ்சம் என்பது வேற ஊழல் என்பது வேற .ஊழலையாவது  ஒழிக்க லோக்பால்  - சட்டம் உதவும் என்று நம்பபடுகிறது. ஆனால் லஞ்சத்தை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதுக்கு e-governance வந்தால் மட்டுமே முடியும்.

வேலாயுதம், ஏழாம் அறிவு - ஏழாம் அறிவு எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது. இன்னும் என்ன தோழா ஏழாம் அறிவின் ஒரு பாடல் போதும் படம்பிடிக்க காரணம். வேலாயுதம் ஒரு மொக்கை. சந்தானம் காமெடி தவிர. ஏழாம் அறிவு உதயநிதி தயாரிப்பால், அதுக்கு எதிரா எவ்வளவு பரப்புரைகள் தூற்றல்கள் கேள்விகள். வேலாயுதம் என்ற அருத பழசான மசாலா சீன்களின் தொகுப்பை தமிழ் நாட்டில் வெற்றிபடமாக்கிவிட எவ்வளவு முனைப்புகள்.  அரசியலிலும் சரி, சினிமாவில் சரி.  மொத்தத்தில் தழிழர்கள் மசாலா பட ரசிகனாகவே வைத்திருக்க வேண்டும்,சிந்தித்துவிட கூடாது என்றஒரு  கூட்டம் இயங்கி கொண்டே இருக்குது.காலம் மாறும் காட்சிகள் கண்டிப்பாக மாறும்.

கூடங்குளம் அணுமின் நிலை விவகாரத்தில் மக்கள் போராட்ட குழுவாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றபடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு கண்டிப்பாக எதோ ஒரு சக்தி பின்னால் இயக்குகிறது. பூகம்பம் வந்தா என்னாகும் , பூமீ  இரண்டா பிளந்தா என்னாகும் என்ரறெல்லாம் கேட்கிறார்கள். ஜெர்மனியில் மூடிட்டாங்க அப்படினு மேற்கோள் காட்றாங்க.ஜெர்மனியா நம்ம? சோத்துக்கே வழியில்லாம நாம கிடக்கோம்.. உலகில் 165 அணு உலைகள் இயங்குதே அப்ப அவன் எல்லாம் என்ன கேனப்பயலா.அவ்வளவு ஏன் கல்பாக்கம் அணுமின் நிலையும் இருக்கே, அங்க பூகம்பம் வந்தா மட்டும் நமக்கு பாதிப்பு இருக்காதே. ஊகங்களை கேள்வியாக்கி புரட்டி பண்றோம் போராட்டம் பண்றோம்னு ஒரு நல்ல திட்டத்தை முடக்க இவ்வளவு தீவிரம் ஏன்? . அரசாங்கம் மக்களிடம் இருந்து இடங்களை பிடுங்கிகிட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்த மாதிரி தெரியல. அப்துல்கலாம் தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த சில திட்டங்களை சொல்லி இருக்கிறார். அதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.விரைவில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.

~

Saturday, September 10, 2011

நகரம் - கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம் நூலிருந்து !

~
அவசர மனிதர்கள் கடுகடுத்த முகங்கள்
பேரிரைச்சலாய் எழுந்து பேரிரைச்சலில் அடங்கும் நகரம்

மரியாதை நிமித்தங்களுக்கு நேரமற்ற மொழி.
இருபது வருடம் கழித்து பார்ட்டியில் பார்த்து
என் பக்கத்து வீடா நீங்கள் என வினவும் வாழ்க்கை.
Waiting List டிக்கெட் confirm - ஆனதில் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியை அடையும் மக்கள்.இதில் வேரறுத்து ஓடிவிடும் கனவோடு நாட்களை நகர்த்தும் மனிதர்கள்.

இந்த அழுக்கிலும் சந்தடியிலும் கரைந்து போகிறது கடந்த காலங்கள்
மாமாவின் மதமாற்றம், தாயின் ஜாதி, தாத்தாவின் சிறைவாசம், தந்தை அறியா பிள்ளை,
செல்போனில் முகம் தொலைத்த மனிதர்களின் ஜோதியில் சரித்திரங்கள் கரைந்தன.
சென்றவாரம் வீட்டிற்கு வந்தவனும் இன்று சினிமாவில் பார்த்தவனும் ஒன்றா சிந்திக்க நேரமில்லை.

சரவணபவனுக்கும் பீட்ஸா கார்னருக்கும் விருது நகருக்கும் இடையே
பிசிறில்லாமல் ஊடாடும் வாழ்வில், இதமாய் ஏந்தும் இந்த சந்தடி மிகுந்த கான்கிரீட் நகரத்துள்
தொலைந்து போகிறேன் கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்.

~

Monday, July 25, 2011

காதல் - எனக்கு பிடித்த வரையரைகள் (Definitions)

~

காதல் என்பது உடலா உணர்வா
காதல் என்பது பரிவா பாசமா
உடல் மட்டுமே காதல் எனில் வினை முடிக்க ஒரு விலைமகள் போதும்
உணர்வு மட்டுமே காதல் எனில் காதல் கொள்ள ஒரு கடவுள் போதும்
பரிவு மட்டுமே காதல் எனில் பழுத்து நரைத்த பாட்டியே போதும்
பாசம் மட்டுமே காதல் எனில் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும்
உடல் கொஞ்சம் உணர்வு கொஞ்சம் பாசம் கொஞ்சம் பரிவு கொஞ்சம்
கொஞ்சம் பகுத்தறிவு நிறைய மூட நம்பிக்கை எல்லா வஸ்தும் ஒன்று திரட்டி
இதயம் என்ற மிக்சியில் அரைப்பது காதல்  -வைரமுத்து

காதல் என்பது என்ன..-  உடலா உள்ளமா?
உடல் மட்டுமே காதல் என்றால் ஒரு விலைமகள் போதும் காதலிக்க
உள்ளம் மட்டுமே காதல் என்றால் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும் காதலிக்க
உடலும் உள்ளமும் எந்த ஒரு புள்ளியில் சந்திக்கிறதோ அதுதான் காதல் ! - வைரமுத்து !

24 வயதில் இது தான் உலகம் என்று நினைத்த ஒன்று,
42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்
அதுதான் காதல் - பத்மஸ்ரீ கமல்ஹாசன்

~

Monday, July 18, 2011

நதியும் பெண்ணும் - வைரமுத்து !

~

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !

காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவோம் கோடையிலே

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு!

மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அதுவே நங்கையின் குணமே!

தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !

பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்


~

Sunday, June 26, 2011

நிம்மதி சூழ்க! - Vairamuthu

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

Tuesday, June 7, 2011

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - வைரமுத்து !

~


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எண்டை புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா

தலைவருக்கு 6 வது தேசிய விருது பெற்று கொடுத்த பாடல்.பாட்டை முதலில் கேட்ட அன்று தூக்கமே வரல..எங்கும் திரும்பினாலும் என் அம்மா....


~

Saturday, May 21, 2011

ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?

ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?

ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒருவரின் மதிப்பை கொலைசெய்துவிட முடியும் என்ற நிலைமையில் தான் இப்போது இருக்கிறோம். மக்களின் மீது ஊடகங்களின் கருத்து திணிக்கப்ப்டுகிறது .நீதிபதிகள் தீர்ப்பை கூட ஊடகத்தின் அனுமானங்களின் சக்தி ஆட்டிவைக்கிறது. ஒரு விசயத்தை தன் வார்த்தை தோரணத்தால் நல்லவிசயமாகவும், தனக்கு பிடிக்காதவர் என்றால் கெட்டவிசயமாகவும் ஊடகங்களால் பிரச்சாரம் செய்ய முடிகிறது.கட்சி சார்ந்த ஊடகங்களை விட்டுவிடுவோம்.அவைகளை மக்கள் பெரியவிசயமாக எடுத்து கொள்வதாக நான் கருதவில்லை.ஆனால் நடு நிலை என்ற போர்வையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மூட நம்பிக்கைகளையும், தான் சொந்த இன,மொழி,மத வெறுப்புகளை விதைக்கும் ஊடகங்களை பற்றியதுதான் என் கவலை.உதராணங்கள் பல.

எந்த ஒரு அடித்தள உண்மையும் இல்லாமல் இவர்களால் ஒரு தலைப்பு செய்தியை போட முடிகிறது..இட்டுகட்டி எழுதமுடிகிறது..இந்த பொய் செய்திகளால் உணமை எது பொய் எது என்ற தெரியாமால் ஆமாம் எல்லாரும் இப்படிதான் என்ற எதிர்மறை சிந்தனை மக்களுக்கு மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த நாட்டில் இறந்த தலைவர்களை தவிர தனக்கு பிடிக்காத ,அல்லது அவர்கள் வியாபரத்துக்கு உதவாத எவரையும் இந்த ஊடங்கங்கள் விட்டு வைப்பதில்லை. வியாபாரத்து உதவி என்பது தற்போதைய சூழ் நிலையில் மக்களுக்கு எது பிடிக்கும் ..அதை பெரிதாக்கி (செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதல்லாம் தகுதி கிடையாது). உதாரணத்துக்கு இப்ப ஒருவன் 50% கெட்டவனு வைச்சுக்கங்க.. அவனை பத்தி அவன் செய்யாததையும் எழுதி 200% கெட்டவன் போல சித்தரிக்கிறது..50% உண்மை 150% நம்ம கற்பனை (உதராணம் கருணாநிதி)....இதே இவர்களுக்கு பிடித்தவராக இருந்தால் போதும் 25% நல்லவனாக இருந்தால் கூட போதும் அப்படியே உல்ட்டவாக ஆபத்தாண்டவனாக போல சித்தரிக்கப்படுவார் (உதராணம் ரஜினி). எதை நோக்கிசெல்கிறது இந்த பயணம் ?. ஊடங்கங்களுக்கு ஒரு accountablityயும் கிடையாது..ஒரு பக்க பெரியளவில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாள் ஒரு மூலையில் கண்ணுக்கு படாத இடத்தில் மறுப்பு வெளியிட்டால் போதும்..என்ன ஒரு தர்மம் ?. தன் சட்டப்பை சுடும் வரை யாரும் பற்றி எரியும் தீயை பற்றி கவலைபடுவதில்லை . பர்கா தட் போன்ற பத்திரிக்கையாளர்கள் தனக்கெதிராக ஒரு சர்ச்சை வந்தவுடன் அதை வெளியிட்ட பத்திரிக்கைய சாடிய அதே கோபம் மற்றவர்களுக்கும் வரும் என உணராத்து ஏன்..?

எண்ணில் அடங்கா உதாரண்த்தை என்னால் எடுத்துரைக்க முடியும் ..அதில் சில ஊடங்கங்கள் எனக்குபிடித்த ஊடங்கள் இந்த குறை பாட்டை தவிர..

NDTV இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தென்னிந்தியாவை பற்றியோ, அதில் நடக்கும் நல்ல விசயங்களை பற்றியோ ஒளி பரப்பியதே இல்லை..அவர்கள் எல்லாத்திலும் கருணாநிதி குடும்பத்தையே பார்பார்கள் வேற யாரும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது..அவர்கள் பொறுத்தவரை தமிழ் நாடு என்றால் ராஜா,கருணா நிதி குடும்பம், சோ,சுசாமி,ஜெயா,ரஜினி,சென்னை அவ்வளவுதான். ஆனால் உண்மையில் இவர்கள் தமிழ் நாட்டின் பிரதி நிதிகள் அல்ல . பிரபலமானவ்ர்கள் அவ்வளவுதான். தென்னிந்தியா மீதான் வெறுப்பை அல்லது காழ்ப்புணர்ச்சியை கக்கினால்தான் அவர்களின் வட இந்தியா வாசகர்காள் ரசிக்கிறார்கள் போலும். சமீபத்தில் ஒரு சொல்லாடல். yesterday- free rice- karunanidhi freebee. today free rice- jaya's welfare scheme. அது எப்படி ஒருத்த செஞ்சா அது தப்பு..இன்னொருத்தர் செஞ்சா அது சரி?

தினமலர் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூட நம்பிக்கையை சப்போர்ட்டுக்கு பயன்படுத்துவது..மக்களின் மீது அதே மூட நம்பிக்கையில் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவது..சமீபத்திய உதாரணம்கள் சாய்பாபா தன் சாவின் நாள் குறித்து சொன்னதை பல்வேறு கணக்குகளை வைத்து உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.. என் பல உதாரணங்களை சொல்லலாம்.

தமிழ் நாட்டின் பொருளாதாரம் கிராமத்து பள்ளிகளின் எதிரே பத்து ரூபாய் முதலீட்டில் மாங்காய் கீறி விற்கும் கிழவியில் ஆரம்பித்து, வயல்காட்டு உடல் உழைப்பில பயணித்து, திருப்பூர்,கோவை தொழில்சாலைகளில் கசக்கிபிழிப்பட்டு சென்னை தகவல் தொழில் நுட்பம், ஆட்டோ மொபைலில் ஜொலிக்கிறது.மேலும் எத்தனையோ தொழில்கள் இருக்கிறது..ஆனால் ஊடங்கள் சினிமா தொழில்தான் அதிக முக்குவத்தும் பெறுகிறது..அல்லது முன்னெடுத்து சொல்லபடுகிறது..அதிலும் கூட கிசுகிசுகள், அவ்ரகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள்தான் அதிகம்.

எத்தனையோ நல்ல சம்பங்கள் நடந்தாலும், கள்ளக்காதல் இல்லாத பத்திரிக்கை ஒரு நாளும் வெளிவருதில்லை.எந்து நடுத்தர வயது பெண் கொலை செய்யபட்டாலும் அது களளக்காதல் என்பது இவர்களின் கற்பனை..

இந்த ஊடங்களன் முகத்திரையை கிழிப்பதற்கென்றே ஒரு தனி ஊடகம் தொடங்க வேண்டும்..

Monday, March 14, 2011

நட்பு நட்புதான் ! காதல் காதல்தான் !

~

நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து.
நட்பு நட்புதான் காதல் காதல்தான். காதல் மாறலாம் நட்பு மாறுமா?

ஆணும் பெண்ணும் பழகிகிட்டா காதல் ஆகுமா ?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை. காதல் இன்றி மனிதனும் இல்லை.
நண்பர்களும் காதலாராக மாறிய பின் சொல்லிய உண்மை.

நீயும் நானும் பழகிறோமே அது காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நீயும் நானும் வெகு நேரம் மனம்விட்டு பேசி சிரித்தாலும் பிரியும் போது
சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி பிரிதலே காதலை சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான் நட்பின் வழிலே காதல் வளருமே !

பிரிந்துபோன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும்

ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துகலாம்.

~

Monday, February 14, 2011

உந்தன் சொந்த தேசத்தின் குரல் - வைரமுத்து !

~

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..
சொந்தவீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!

அந்த நாட்களை நினை ! அவை நீங்குமா உனை !
நிழல் போல் வராதா?
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்
உந்தன் உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?

கங்கை உன்னை அழைக்கிறது யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது பல சம்யம் உன்னை அழைக்கிறது
கண்ணாமமூச்சி ஆட்டம் அழைக்க சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னத்தோப்பு துரவுகள் அழைக்க கட்ட காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ன நிலாச்சோறு அழைக்க

உந்தன் சொந்த தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ செவியில் விழாதா..

பால் போல வெண்ணிலவு உற்று பார்த்தாலும் சிறு கறை இருக்கும்
மலர்போல உள்ள தாய் நாட்டில் மாறா சிலவலி இருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் வளரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புதாயின் மடி உன்னை அழைக்குதே

உந்தன் சொந்த தேசத்தின் குரல்

~

Monday, February 7, 2011

அந்த அந்த வயதில் - வைரமுத்து !

~

இருபதுகளில் எழு. உன் கால்களுக்கு சுயமாய் நிற்க சொல்லிக்கொடு.
ஜன்னல்களை திற்ந்து வை.படி எதையும் படி !
வாத்யாசனம் கூட காமம் அல்ல கல்விதான் படி.
பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பின்னால் எரிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைபொத்தான், கடிகாரம், காதல், சிற்றுண்டி, சிற்றின்பம்
எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்.
ஏவாத ஏவுகணையேனும் அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனிதமுகங்களை மனசுக்குள் பதிவுசெய். சப்தங்கள படி.சூழ்ச்சிகள் அறி.
திருடு திருப்பிகொடு. பூமியில் நின்று வானத்தை பார் வானத்தில் நின்று பூமியை பார்.
உன் திசையை தெரிவுசெய். நுரைக்க நுரைக்க காதலி.காதலை சுகி. காதலில் அழு.
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி.
பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு.
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்.
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து !
இன்னும் இன்னும் சூரியகதிர்கள் விலமுடியாத ஆழத்தில்!.

முப்பதுகளில் சுறுசுறுப்பில் தேனியாய் இரு..நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு . உழை . நித்தம் கலவிகொல்.
உட்காரமுடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்,கைப்பற்று.
ஆயதம் தயாரி பயன்படுத்தாதே. எதிரிகளை பேசவிடு ,சிறு நீர் கழிக்கயில் சிரி.
வேர்களை இடி பிழக்காத ஆழ்த்துக்கு அனுப்பு .
கிளைகளை சூரியனுக்கு நிழல் கொடுக்கும் உயரத்துக்கு பரப்பு .
நிலைகொள்..

நாற்பதுகளில் இனிமேல் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
செல்வத்தின் பாதியை ,அறிவின் முழுமையை செலவழி.
எதிரிகளை ஒழி ஆயதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு.
ஒருவனை புதைக்க இன்னொருவனை குழிவெட்ட சொல், அதில் இருவரையும் புதை..
பொருள் சேர். இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு.பகல் தூக்கம் போடு.
கவனம் இன்னொரு காதல் வரும் புன்னகைவரை போ..புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே உனக்கு இலக்கு, இனிமேல் லட்சியத்துக்கு நீதான் இலக்கு.

ஜம்பதுகளில் வாழ்க்கை வழுக்கை இரண்டையும் ரசி. கொழுப்பை குறை.
முட்டையின் வெண்கரு காய்கறி கீரை கொள். கணக்கு பார்.நீ மனிதனா என வாழ்க்கையை கேள்.லட்சியத்தை தொடு . வெற்றியில் மகிழாதே. விழா எடுக்காதே

அறுபதுகளில் இதுவரை வாழ்கைதானே உன்னை வாழ்ந்தது..இனியெனும் வாழ்க்கையை நீ வாழ்ந்துபார்.விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு ..மனிதர்கள் போதும் முயல் வளர்த்துபார்.நாயோடு தூங்கு கிளியோடு பேசு மனைவிக்கு பேன் பார்.
பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது.

எழுபதுகளில் இந்தியாவில் இது உபரி..சுடுகாடு வரை நடந்துபோக சத்து இருக்கும்போதே செத்து போ .ஜண கண மண !

~

Saturday, January 29, 2011

ஒலிப்பான் தவிர்ப்போம்

~




இந்த பெண்ணோட courage-ஐ நம்ம கண்டிப்பா பாராட்டனும்.. நம்ம எல்லாம் (பெரும்பான்மை) சும்மா குறை சொல்லிட்டுதான் இருப்போம ஒழிய களத்தில இறங்கி போராடமாட்டோம்.. எவனும் கேட்க மாட்டானும் தெரிஞ்சும் போராடுட இந்த மாதிரி சிலபேரால் தான் பாரத வளர்ச்சியின் மீதான நம்பிக்கை இன்னும் கூடுது.இளைய சமுதாயம் எல்லாம் தண்ணி அடிப்பதையும், சினிமா ரசிகனாகவே காட்டும் இந்த மீடியாக்கள் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை ஏனோ !

~

Monday, January 24, 2011

அம்மா மேல் கோவம் !

~

உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது
மரியாதைக்குறைவா என்ன ? இல்லை அதீத உரிமை !
என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்
ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்
உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்
பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..
இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது
வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்
என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்
பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்

8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு "
நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இங்கே காப்பி வேண்டாம்
அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.
நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.

எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும்,
கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா
என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma !

சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !

Wednesday, January 5, 2011

நித்தம் ஒரு வானம் வேண்டும் - வைரமுத்து !

~

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூவேளை
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வரவிடு

யுத்தமில்லாத பூமி ஒரு சத்தமில்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்கவேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழவேண்டும்
போனவை அட போகட்டும் வந்தவை இனிவாழட்டும்
தேசத்தின் எல்லைகோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில் வந்து வாழட்டும்

~