Monday, February 23, 2009

தமிழ் வழி - பகுதி 2

.

தமிழ் வழி பகுதி - 1


இளமதி தமிழ் ஆசியரின் மகள்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவள்.தமிழ் கவிதைகளை விரும்பி படிப்பவள்.அவள் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள், ஆனால்அவளின் அம்மாவின் கட்டாயத்தால் பொறியியல் சேர நேர்ந்தது.பாவடை தாவணியில் இளமதி பார்த்தவுடன் நம்ம மட்டும் இல்ல ! நமக்கும் ஒரு பட்டிக்காடு company-க்கு இருக்கு என்று மனதில் நினைத்துகொண்டான் பாரதி.வகுப்புகள் தொடங்கின..நாட்கள் நகர்ந்தன.பாரதியும்,இளமதியும் தமிழ் மீடியத்தில் படித்ததால்,ஆங்கிலத்தில் பாடங்களை படிக்கவும்,ஆசிரியர் நடத்துவதை புரிந்து கொள்ளவும் சிரமப்பட்டனர்.அதே அவர்களிடையே நட்பு வளர காரணமாயிருந்தது.இருவரும் தமிழ் ,தமிழ் சார்ந்த புத்தகங்களை பற்றியே அதிகம் பேசிக்கொண்டனர்.

முதல் பருவத்தேர்வு வந்தது.ஆங்கில சிரமத்தால் சில பாடங்களில் இருவரும் தோல்வி கண்டனர்.அவர்கள் கல்வி வாழ்க்கையிலே முதல் தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதித்தது..ஆசிரியர் ,சக மாணவர்களும் சாதரணமாக பார்த்தாலும் ,அவர்கள் தங்களை கேலியாக பார்ப்பதாக உணர்ந்தனர்.பாரதி இந்த தோல்வியை தாங்க முடியாமல் விடுதியில் போய் தனியே அமர்ந்து அழுதான்.அருகில் கிடந்த செய்தித்தாளில் "ஆங்கிலத்தால் சரியாக படிக்க முடியாததால் மாணவர் தற்கொலை " என்று தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த செய்தி இருந்தது. தானும் அவ்வாறு செய்துகொள்ளலாம் என்று அவன் தனிமை அவனை தூண்டியது.அப்போது அவனை தேடி விடுதிக்கு வந்தான் கதிர்.பாரதி அழுவதை பார்த்து அவனுக்கு ஆறுதில் கூறி, அவனை வெளியில் கூட்டி சென்றான்.

இளமதி தன்னால் தொடர்ந்து படிக்க இயலாது, நான் discontinue பண்ணிட்டு தமிழ் படிக்க போவதாக அவள் அப்பாவிடம் சொன்னாள். Arrears வாங்கிறது எல்லாம் சகஜம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் தன் முடிவில் உறுதியாக் இருந்ததனால் வேறு வழியின்றி அவள் விரும்பிய வண்ணம் செய்தார் அவள் அப்பா.இளமதி எல்லா கல்லூரி தோழர்களிடம் விடை பெற்று சென்றாள். பாரதியிடம் மட்டும் தன் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்தாள்.மனதில் ஒரு வித பாரத்துடன் கல்லூரிய வகுப்பை விட்டு நகர்ந்தாள்.

கதிர் பாரதிக்கு தினமும், பாடங்களை சொல்லி கொடுத்தான்..பாரதியும் இரவு, பகலாக படித்தான் கதிரின் துணையோடு. நான்கு ஆண்டுகள் உருண்டோடின. பாரதியின் உழைப்பு அவனை எல்லா தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்தது.அவன் கல்லூரியின் CAMBUS Interviews வந்தது.. எல்லா company Interviewஸ் யிலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், ஆங்கில பேச சிரமபட்டதால் ,அவனால் group discussion, direct interivew யில் செலக்ட் ஆக முடியவில்லை.கதிர் ஒரு companyயில் செலக்ட் ஆனான்.

கல்லூரி வாழ்க்கையும் முடிவடைந்தது.கதிரும், பாரதியும் ஊருக்கு சென்றனர்.தனபாலும் ,கஸ்தூரியும் பாரதி வந்த சந்தோசத்தில் இருந்தாலும் பாரதி மட்டும் வேலை தேடும் நினைப்பாகவே ,கிடைக்குமோ கிடைக்காதோ என்று சோகத்துடனே இருந்தான். கடைசி தேர்வின் முடிவுகள் வந்தன.பாரதி தான் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததை அவர்களிடம் சொன்னான்.அவர்கள் பூரித்து போனார்கள்.கஸ்தூரியின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.தங்கை கவிதா ஒடி வந்து வாழ்த்து சொன்னாள். அண்ணே பாசாயிடுச்சு இனிமே நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திருமா...இந்த வருசம் தீவாபளிக்கு எனக்கு நல்ல சுடிதார் வாங்கி கொடுக்கணும் என அவள் ஆசையெல்லாம் கோரிக்கையெல்லாம் அடுக்க ஆரம்பித்தாள்..பாரதி கண்டிப்பா இவ ஆசையெல்லாம்..நிரைவேற்றனும்.நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கனும்னு மனதில் நினைத்து கொண்டான்.

நாட்கள் கடந்தன.Interviews callsக்காக wait பண்ணி சோர்வடைந்த பாரதி அம்மாவிடம் தான் சென்னைக்கு வேலை தேட செல்ல இருப்பதாக கூறினான்.அதை கஸ்தூரி தனபாலிடம் கூற, தன்பால் பாரதியை கூப்பிட்டு "ஏன்யா எங்கிட்ட சொல்லமாட்டுற ! அப்பா இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் வருத்தபட கூடாதடா.".என்று கண்கள் கலங்க, தன்னுடைய தீவாபவளி போனஸ் பணத்தை எல்லாம் எடுத்து பாரதிக்கு செலவுக்கு கொடுத்தான்.பாரதிஅதை கணத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டான்.சென்னையில் combus Interviewல் செலக்ட் ஆகாமல் போன சக தோழர்களுடன் தங்கி வேலை தேட தொடங்கினான்.எல்லா இடத்திலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் ,அரை குரை ஆங்கில பேச்சால் எதிர்பார்த்த வேலையை பெற முடியவில்லை.

ஒரு நாள் வேலையை பற்றியே நினைத்து கொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான்..பின்னால் இருந்து ஏதோ ஒரு பெண் குரல் அவனை கூப்பிடுவது போல் இருந்தது. நல்ல பரீட்சதனமான் முகம். "பாரதி எப்படி இருக்கே...என்றது அந்த குரல்..கிட்ட வந்தவுடன் தான் பாரதியால் அடையாளம் காண முடிந்தது...."ஹே.......இளமதி...நீயா நான் எதிர்பார்க்கவே இல்லை...நான் நலம்..நீ எப்படி இருக்கே.." என்று ஆரம்பித்த உரையாடல் பழைய நினைவுகளில் தொடங்கி இன்றைய கதை வரை தொடர்ந்தது..

இளமதி தான் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பதாக கூறினாள்.அப்படியே பேசிகொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை அரசியல் மேடை ஒலி பெருக்கியின் சத்தம் இடைமறித்தது.அந்த அரசியல்வாதி தமிழ் வழி கல்வியை பத்தி பேசிகொண்டிருந்தார்."மக்கள் தன் குழந்தைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும்..." அவரின் பேச்சு பாரதியின் விரக்திக்கு தூபம் போட்டது.அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே சென்று "உன் பையன் எங்கடா படிக்கிறான் கான்வென்ட்ல தானே ..உன் பொண்ணை எங்கடா கல்யாண பண்ணி கொடுத்திறக்கிற அமெரிக்காவில்தானே !..ஏண்டா தமிழில படி தமிழல படினு சொல்லி தமிழல படிச்சவனக்கெல்லாம் வேலை கொடுக்காம சாவடிக்கிறீங்க! தமிழ் படித்தவனுக்கெல்லாம் வேலை கிடைத்தா..தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை..தானா வளரும்" எனறு கத்தனும் போல இருந்தது பாரதிக்கு.

-தொடரும்...


.

Friday, February 20, 2009

அம்மா - ரகசிவ் ஞானியார்.....








என்னை கவர்ந்த கவிதை ! என் மனதில் உள்ளதை அப்படியே சொன்ன கவிதை ..நன்றி ரகசிவ்

பி.கு : எங்கம்மா கிட்ட இந்த கவிதைய பற்றி சொன்னபோது..அவங்க சொன்னது "எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிதாண்டா சொல்வீங்க " :)
.

Tuesday, February 17, 2009

தமிழ் வழி ! - பகுதி 1

.

விவசாயமும் ,விவசாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்த ஒரு வளர்ந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள ஓட்டு வீட்டில் ஆட்டுக் கல்லில் மாவாட்டிக் கொண்டுருந்தால் கஸ்தூரி !
அந்த சமயம் மின்சாரம் துண்டிக்க பட்டிருந்ததால் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அப்போது பள்ளி முடிந்து ,வீட்டிற்கு பாசமாய் "அம்மா" என்று அழைத்த படி உள்ளே நுழைந்தான் பாரதி. "கொல்லை புறத்தில் மாவாட்டிட்டு இருக்கேன்..கை கால் கழுவிட்டு பின் பக்கம் வாயா " என்றாள் கஸ்தூரி.சொன்னபடி வீட்டின் முகப்பில் இருந்த சிமெண்ட் தொட்டில் தண்ணீரில் முகம்,கை கால் கழுவி விட்டு தனது அரையாண்டு தகுதி பட்டியலை எடுத்துகிட்டு அம்மாவிடம் சென்றான் பாரதி.பாரதி வழக்கம் முதல் ரேங்க் வாங்கி இருப்பதை அந்த சிம்ளி வெளிச்சத்தில் சந்தோசமாய் பார்த்தாள் கஸ்தூரி.பிறகு பாரதிக்கு தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்திட்டு அருகில் அமர செய்துவிட்டு , தனது மாவரைக்கும் பணியை செய்து கொண்டே பள்ளியில் நடந்ததை பற்றி பேச ஆரம்பித்தால் , "ஆமா நம்ம கதிர் எத்தனையாவது ரேங்க் அய்யா ? ." ரெண்டாவது ரேங்க் மா.அவன் விட நான் 5 மார்க அதிகம்மா.. அப்புறம் எங்க Class Teacher எங்கள் ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேர சொல்றாருமா..அடுத்த வருசம் 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் எங்களை சேர்க்க சொல்லி அப்பா கிட்ட சொல்ல சொன்னாரு..ENGLISH மீடியத்தில் படித்தால் தான் பின்னாடி வேலை கிடைக்குமாம்.." எனறான் பாரதி. "அப்படியா அப்பா மில்லில் இருந்து வரட்டும் சொல்றேன்..உங்க அத்த மக கூட ENGLISH மீடியத்தில் தான் படிக்கிறா போல..அது பெரிய ஸ்கூல்னு உங்க அத்த சொல்லிட்டு இருந்தா..சரி..தங்கச்சி தூங்கிட்டா..நீனும் போய் பக்கத்தில படுத்துகோடா ! அவளை எழுப்பிடாத! " என்றாள் கஸ்தூரி.

நேரம் கடந்தது.அரிசி ஆலையில் இன்றைய கணக்கு வேலைகளை முடித்து முதலாளி கிட்ட கொடுத்துட்டு வீட்டிற்கு வந்தார் தனபால். கஸ்தூரி பள்ளியில் நடந்ததை சொல்லிகிட்டே தன்பாலுக்கு சாப்பாடு போட்டாள். " ENGLISH மீடியத்தில் சேரணும்னா நிறையா பணம் கட்டனும்டி..ப்ரியாவிக்கு என் தங்கச்சி 2 மாசத்துக்கு ஒரு தரவை பணம் கட்றா..நம்ம வசதிக்கு அதெல்லாம் முடியுமா..ஒரு பொட்ட புள்ள வேற இருக்கு..நம்ம பாரதிதான் நல்லா படிக்கிறானே ..அப்புறம் என்ன..நல்ல படித்தா தமிழ் மீடியம் இருந்தா என்ன ENGLISH மீடியமா இருந்தா என்ன அதெல்லாம் வேலை கிடைக்கும்..நான் நாளைக்கு போய் வாத்தியாரை பார்த்துட்டு விவரத்தை சொல்றேன்..." என்றான் தன்பால்.கஸ்தூரி சரினு ஒரு விதமான சோகத்துடன் சொல்லிட்டு பாத்திரங்கள் எல்லாம் கழுவி வச்சிட்டு மீதி இருந்த பழைய சோற சாப்பிட்டு கதிரின் பக்கத்தில் படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் தன்பால் பாரதியின் பள்ளிக்கு சென்றிருந்தார்.கதிரின் அப்பாவும் வந்திருந்தார். வகுப்பாசிரியர் அவர்களிடம் "பாரதியும்,கதிரும் நல்லா படிக்கிறாங்க..அவங்க ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேருங்க ! அப்பாதான் பின்னாடி நல்ல வேலைக்கு போகலாம்.." .என்றார். கதிரின் அப்பா தன் பிள்ளையை கண்டிப்பா 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் சேர்ப்பதாக உறுதி அளித்தார்..தனபாலோ தன் நிதி நிலைமையை எடுத்து கூறி , தன்னால் இயலாது என்றும் விளக்கினான். அப்புறம் பாரதியை தன் தங்கச்சி வீட்டு விசேஸத்திற்கு கூட்டி கிட்டு போறாதா சொல்லிட்டு பாரதியை தன் சைக்கிளில் ஏற்றிகிட்டு தன் தங்கச்சி வீடு இருக்கும் பக்கத்து டவுனை நோக்கி பயணிக்க தொடங்கினார்..போகும் வழியில் பிரியா படிக்கும் அந்த பெரிய பள்ளியை காண்பித்தார் பாரதிக்கு.அப்போது ப்ரியாவை அவரது அப்பா தன் ஸ்கூட்டரில் கூட்டி கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தார்.பாரதி அந்த பள்ளியை ஏக்கமாக பார்த்தான்..உள்ளே மாணாக்கர்கள் எல்லாம் டென்னிஸ் , BASKAT Ball-னு வித விதமான விளையாட்டுகளை விளையாடி கொண்டிருந்தனர்..சங்கீத வகுப்பில் இருந்து பிள்ளைகளின் சங்கீதம் கணமாக ஒலித்து கொண்டிருந்தது.பாரதி ப்ரியா வைத்திருந்த டென்னிஸ் பேட்டை ஆர்வமாய் தொட்டு பார்த்து."இது எப்படி விளையாடுவது " என்றான்..இதெல்லாம் விலை அதிகம் நீ எடுத்து உடைத்தடாதடா !..என்று பரியா அதை பிடுங்க ! "மாப்ளா அதை அவ கிட்ட கொடுத்திருங்க அழ போறா..இதெல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு..உங்களுக்கு வேணாம்" என்று நக்கலாக தனக்கே உரிய பாணியில் சொன்னார் பணக்கார ப்ரியாவின் அப்பா. அப்புறம் அப்படியே தனபாலும், ப்ரியாவின் அப்பாவும் பேசிகிட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்தனர்.பாரதி வீடு வரைக்கும் அந்த டென்னிஸ் பேட்டை பார்த்தபடியே வந்தான்..ப்ரியாவோ அதை இறுக்க பிடித்த படி வந்தாள்.
விசேஸம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது "நான் எப்போ அப்பா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவது..சங்கீதம் படிப்பது" என்றான் பாரதி..அதற்கு தனபால்..சிரித்து கொண்டே ! "கண்ணு அப்பா ஏழைடா கண்ணு ...அதனால் அப்பாவால உன்னை படிக்கதான் வைக்க முடியும்..நீ நல்லா படித்து வேலைக்கு போய் அப்புறம் விளையாடு..உன் பிள்ளைகளுக்கு இந்த வசதியெல்லாம் பண்ணி கொடு..." எனறான்.

நாட்கள் நகர்ந்தன. பாரதியும் ,கதிரும் +2 தேர்ச்சி அடைந்தனர். இருவரும் எல்லா படத்திலும் , நுழைவு தேர்வுலும் ஒரே மாதிரியான் மதிப்பெண் பெற்றிருந்தனர்..ஆங்கிலம் தவிர.ஆங்கிலத்தில் கதிர் அதிகம் எடுத்திருந்தான்.

கதிர்ன் அப்பா தன்பாலிடம் கதிரை இஞ்சினியரிங்க் சேர்க்க போவதாகவும், பாரதியையும் அங்கே சேருங்க..வங்கி கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.ஒரு வழியாக பாரதியும்,கதிரும் ஒரே பொறியியல் கல்லூரில் சேர்ந்தனர்..மிகப்பெரிய கல்லூரி, அதிக மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்.கல்லூரியில் முதல் நாள் வகுப்பு ஆர்வத்துடன் கதிரும், கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையுடனும் பாரதியும் வகுப்பிற்குள் அமர்ந்தனர்..தன் வகுப்பில் அழகு அழகான நாகரீகமான் உடைகளில் சக மாணவிகள் நுழையும் போது எல்லா மாணவர்களையும் போல இருவரும் தங்களை பார்த்து சிரித்து கொண்டனர்.அப்போது பாவாடை தாவணியில் அவர்கள் வகுப்பில் வந்தமர்ந்தாள் இளமதி.

-தொடரும்..



Saturday, February 14, 2009

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)





நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா ! :)










இதுவும் எனக்கு வந்த Email தாங்க ! Image மேல click பண்ணுங்க பெரிதாக்க !



காதலர் தின் special- எனக்கு வந்த நகைச்சுவையான email

காதலர் தின் special - எனக்கு வந்த நகைச்சுவையான email... யாரு அந்த எழுத்தாளர்னு தெரியலை.. செம கலாட்டா !


அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ' ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ' அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். "

"தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு, இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.

வாழ்க வளமுடன்

Sunday, February 8, 2009

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...

ரஜினி..ஒரு நல்ல நடிகர் , உழைப்பால் சாதாரண நிலையில் இருந்து பிரபலமான நிலைக்கு உயர்ந்தவர் , ஊடகங்களில் இவர் புகழ் பாட வைத்தவர், சினிமாவில் அதிகம் சம்பாதித்தவர், அவரை வைத்து சிலர் சம்பாதிக்க உதவியவர்..மற்ற படி அவர் சாதாரண எல்லாரையும் போல சுய நல மனிதர் தான்..

அவர் அவர் அரசியலக்கு வர வேண்டும் , என்று சொல்லும் so called ரசிகர்கள் , அவரை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களே ! ஒரு சின்ன உதாரணம் .ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் "நாங்கள் வேற கட்சிகளில் சேர்ந்திருந்தால் எங்கள் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் ரஜினியை நம்மியதால் இப்படி இருக்கிறோம் ". இதில் இருந்து தெரியல..இவங்க ரஜினிய அரசியலக்கு வர வேண்டும் என்று சொல்லுவது , இவங்க நிலைமை மாறுவதற்கு , மக்களுக்கு சேவை செய்ய இல்லைனு....

ரஜினி சிறந்த வியாபாரிங்க , இவங்களுக்கு இப்ப வறேன் அப்ப வறேன்னு தூபம் போட்டு நல்ல தன் படங்களை வியாபாரம் பண்ணுகிறார். .. பாபா படம்னு நினைக்கிறேன்.. ஜெயா மேடம் சினிமா டிக்கேட் விலை எவ்வளவு வேணாம்னு இருக்கலாம்னு ஒரு சட்ட தளர்ச்சி கொண்டு வந்தாங்க ! அது வரைக்கும் ஜெயா மேடத்திற்கிட்ட பனிப்போரில் இருந்த வரு...உடனே பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்னாரு....ஏன்னா ,தன் படம் ரிலீஸ் ஆகுது...ஒரே வாரத்துல தமிழ் நாடு so called ரசிகர்கள் பணத்தை லம்பா அள்ளிட்டு இமய மலைக்கு போயிடலாம் தான். .டிக்கெட்டுக்கு எவ்வளவு வேணா செலவு பண்ணி வாங்க இந்த இழித்தவாயர்கள் இருக்கும் போது தனக்கென்ன..என்ற தைரியம் தான்..

இது தெரியாம இந்த இழித்தவாயர்கள் 400,500 என்று டிக்கெட்டுக்கு செலவு பண்ணி அந்த மொக்கை படத்தை பார்த்தானுங்க ! ரஜினி உண்மையிலே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருந்தால் தான் படத்துக்கு சாதரண ரேட்டிலே,அது கூட வேண்டாம் ஒரு reasonable ரேட்டில் ஆவது தன் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கலாமே ..அவரை பொறுத்த வரை துட்டு தான் முதல்ல அப்புறம் தான் எல்லாம்...எங்க பக்கத்து டீக் கடையில் வேலை பார்த்த பையன் தன் 10 நாள் சம்பளத்தை சேர்த்து வைத்து 2.5 மணி நேரம் ரஜினி படம் பார்த்தான் 400 ரூபாய் கொடுத்து..அடுத்த நாள் அவன் கிட்ட காசு இல்லாததால் அவன் உடல் நிலை சரி இல்லாத அம்மாவுக்கு என் நண்பன் தான் மருந்து வாங்கி கொடுத்தான். இதே மாதிரி எத்தனை பசங்க அவங்க சம்பாதியத்தை கொடுத்தார்களே....

சிவாஜி பட வெளியீடப்ப ..ரஜினிய வைத்து english TV channels -உம் சம்பாதித்து கொண்டனர்.....அதில ஒருவர் பேட்டி.."நான் flight புடுச்சி வந்து1000 Rs ticket டிக்கெட்டு எடுத்தென் .."எனக்கு அது உண்மையா..இல்லை build up - ஆனு எனக்கு சந்தேகம் இருக்கு. உண்மையா இருந்த அவன் சத்தியமாய் On-Duty la வந்து இருப்பான்...தான் ஏமாறுவது தெரியாமல் பெருமையா பேட்டி வேற ! இழிச்சவாயன்.

அந்த சிவாஜி படம் so called கதை கருப்பு பணத்தை பத்தி...- ஆனா இந்த படத்தை வைத்து, இதில் சம்பந்த பட்டவர்கள் (ரஜினியும் சேர்த்துதான்) எவ்வளவு கருப்பு பணம் சம்பாதித்தார்களோ ! முதல்வர் வேற முதல் வேலையா preview பார்த்துட்டு பக்காவா பேட்டி கொடுப்பாரு..ரசிகர்களின் ஓட்டுக்காக ! 55 வயது நடிகருக்கு 16 வயதிலோ அல்லது உலக அழகி தான் கதா நாயகியாக வேணும்...எந்த நடிகைய போட்டாலும் இவரை சுத்தி சுத்தி காதல் பண்ண போறாங்க..யாரைப் போட்ட என்ன ! இவரோட படத்தில் பொண்ணுங்க அப்படி இருக்கனும்னு இப்படி இருக்கனும்னு ஆணாதிக்க வசனங்கள் நிறைய இருக்கும்....ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் எந்த பத்திரிக்கையும் விமர்சிக்காது.அவர் படம் நாளே அதிகபடியாக விமர்சனங்கள் எழுதும்...இல்லைனா அவங்க பத்திரிக்கை விற்காதே ! .ரசிகர்கள் இவர் கட் அவுட்ல பாலை ஊத்தி பூஜை பண்ணுவாங்க அவங்களை பொறுத்த வரை அது நாளைய அரசியலுக்கு investment. இவருக்கு இதில் உடன்பாடு இல்லைனா பால் ஊத்தும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்க வேண்டியதுதானே ! அது எப்படி இவரொட வியாபாரம் பாதிக்குமே ..இதை முன்மாதிரியா வைச்சு..இப்ப எல்லா ரசிகர்களும் பால் ஊத்துறான்..(சில் நடிகர்கள் இதுக்குனே ஒரு budget போடுறாங்க ! ).

இந்த ஊடகங்கள் ரஜினி பத்தி கொஞ்ச நாள் எந்த செய்தியும் வரலையா ,உடனே எதாவது ஒரு கட்டம் கட்டிஇதோ வரப்போறாரு அதோ வரப்போறானு செய்தி போட்டு ரசிகர்கள் பணத்தை சம்பாதித்து கொள்கின்றன.அவர் புத்திசாலியோ இல்லையோ அவரை சுற்றி உள்ள கூட்டம் புத்திசாலி..அதனால் அவர் கடைசி பட வெளியீடு வரை பிலிம் காட்டிட்டு தான் இருப்பார்..

அப்புறம் நம்ம பாலச்சந்தர் சோத்துக்கு வழியில்லாம போயிட்டாறாம், அதனால் அவருக்கு ரஜினி ஒரு படம் எடுத்து தன் இழித்தவாய் ரசிகர்கள் பணத்தை புடுங்கி கொடுத்தாராம்....கடைத் தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு கொடுத்த மாதிரி தான்..இதுல என்ன காமெடினா இவர் கொளரவ வேடத்தில் தான் படத்தில வர மாதிரி கதையாம்..ஆனா அதை இயக்குனர் வெளியில சொல்ல வேண்டாம்னாராம்..இவரும் ஒகே சொல்லிட்டாறாரம்..so ரெண்டு பேறும் சேர்ந்து யாரை ஏமாத்தீனீங்க ! நம்ம இழித்தவாயர்களைத்தான் ...இதுல இன்னொரு விசயம் ..இந்த படம் கர்னாடகாவில் ஓடனும் கிரத்துக்காக மன்னிப்பெல்லாம் கேட்டாரு இந்த வாய் சொல் வீரர்...என்னை கேட்டா அவர் பேசிய விதம் தவறு தான். அதற்கு அன்றே அவர் வருத்தம் தெரிவித்திருக்கலாம்..அப்ப பம்மாத்து காட்டியவர்..காசு போகப்போது என்று தெரிந்த உடன் காலில் விழுந்தார்...

ரஜினியை வைத்து ஒரு பொண்ணு latest-a oru book எழுதியிருக்கு அவர் நல்லவரு/ வல்லவருனு ...அவர் ரஜினி எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று தெரியவில்லை..சும்மாவே அடிச்சு விடுவது..புகழுக்காக !

அடுத்து அவுங்க பொண்ணு கிளம்மி இருக்கு இப்ப ரஜினி பேரை சொல்லி சம்பாதிக்க...அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்...english தான் பேட்டி கொடுக்கிறாங்க...நம்ம இழித்தவாயர்கள் சிலர் மொழிபெயர்த்து சொல்ல சொல்லி torture பண்ணியாதக என் நண்பர் சொன்னாரு. அவங்க தான் படித்த Animation-ya சோதித்து பார்க்க நினைத்தது...உடனே அப்பாவோட இழித்தவாயர்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை என்று நினைத்து ரஜினியை வைத்து Animation படம் எடக்குது..நம்மாளுங்க கண்டிப்பா அதை வெற்றி படம் ஆக்கிடுவாங்க..அப்புறம் என்ன அவங்க காட்டில மழை தான் !

ஆனா ரஜினியையும் , ரஜினியின் பேர சொல்லி சம்பாதிக்கும் கூட்டத்தையும் , ரஜினி அரசியலக்கு வருவார் சம்பாதிக்கலாம்னு invest பண்ற கூட்டத்தையும் அப்பாவி ரசிகர்களும், மக்களும் அடையாளம் காணும் தூரம் வெகு தொலைவில் இல்லை..

Friday, February 6, 2009

I-T கம்பெனி எதிரே உள்ள டீ கடை

I-T கம்பெனி எதிரே உள்ள டீக்கடை ! ( மீள் பதிவு )

எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்த டீக்கடையில் இன்று மயான அமைதி...டீக்கடை ஊழியர்/உரிமையாளருமான நம்ம அண்ணாச்சி , அந்த டீக்கடை பென்ச்சில் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ்...அது தவிர வேர ஆள் இல்லை ....அப்ப அந்த டீக்கடைக்கு வந்தார் ஒரு பெரியவர்..

பெரியவர் : தம்பி ஒரு டீ போடுப்பா !

அண்ணாச்சி : ரமேஷ் (ஆட்டோ ஓட்டுனர்) உனக்கு !

ரமேஷ் : சரி போடுங்க !

பெரியவர்: ஏம்பா...இந்த அமெரிக்காவில் பிரச்சனைனால ஆடிக்கிட்டுருந்த I-T பசங்களுக்கு எல்லாம் வேலை காலியாமே..எங்க வீட்ல குடித்தனம் இருந்த பசங்க கூட காலி பண்ணிட்டு முன்பணத்தை கேட்றாங்க...என்னமா ஆட்டம் போட்டாங்க்..1 தேதி வாடகை குடுக்கிறோம்னு திமிரல வீட்ல அது சரி இல்லை இது சரி இல்லை அப்படினுபாங்க..ஒரு நாளைக்கு தண்ணி வரலனா கூட ரொம்ப பேசுவாங்கே! வாடகைக்கு பில் கேட்பாங்கே.. EB பில்லுல வழக்கமா நம்ம ஏரியாவில வாங்கிற மாதிரி மீட்டருக்கு 2 ரூபாய் அதிக வாங்கிட்டு இருந்தேன்..இவனுங்க வந்து அதான் வாடகை அதிகமா தர்றோம்லா அப்புறம் எதுக்கு EB பில்லுலனு தினாவெட்ட பேசினாங்கே ..இன்னைக்கு வச்சாம் பாரு அமெரிக்காவலா..

அண்ணாச்சி : ஆமாங்க..இங்க கூட அப்படி தான். டீ ,வடைய கும்பலா சாப்பிட்டு 100 ரூபா நோட்டா எடுத்தி நீட்டி நான் நீனு போட்டி போட்டிகிட்டு அலம்பல் பண்ணுவாங்கே..சில நேரம் சில்லறை கூட வாங்க மாட்டுனுங்க ...சம்பாதிக்கிற திமிரு..நான் ஒரு சின்ன பையனை நல்ல சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருந்தேன்..அதுக்கு போய் குழந்தை தொழிலாளி அது இதுனு சொல்லி அந்த பையனை ஸ்கூல சேர்ந்து விட்டுட்டாங்கே ....அவங்க கேண்டீனல எல்லாம் அதிக விலை விற்கிறானுங்க...அதனால அதிக சம்பளம் கொடுத்து பெரிய ஆளை வைக்கிறாங்க நம்ம அப்படி பண்ண முடியுமா....

ரமேஷ் : ஆமா அண்ணாச்சி..ஆட்டோவிலும் அப்படிதான் சில பேரு மீட்டர போட சொல்லி தினாவட்ட பேசுவானுங்கே...நம்மகிட்ட அதெல்லாம் நடக்குமா..அப்புறம் பொண்ணுங்க ,பசங்களும் வித்யாசம இல்லாம ஆட்டோவில் உட்கார்த்துட்டு இவனுங்க. அடிக்கிற லூட்டி இருக்கே ! இனிமே ஆடுவானுங்களா ..ஹா ஹா

பெரியவர் : ஆமாங்க அன்னைக்கு அப்படித்தான்..ஒரு பையன் சிக்னல்ல வெள்ளை கோட்ட தாண்டி நின்றுக்கான்..நம்ம ராம்சாமி (போக்குவரத்துத்துறை காவலர்..) பிடித்து அபராதம் கட்டு இலலை கவனிச்சிட்டு போ அப்படினுக்கிறாரு.." அதுக்கு அவன் கையூட்டு எல்லாம் குடுக்க முடியாது...அபராதம் கட்டுறேனு 500 ரூபாய கட்டுட்டு பில்லு வாங்கிட்டு போயிருக்கான்..எல்லாம் உட்காத்துகிட்டே சம்பாதிக்கிற திமிறு....

அண்ணாச்சி : எல்லாரும் இப்ப தான் அடங்கிறானுங்க...எதித்தாப்ல உள்ள கம்பெனியிலா கூட நிரைய பேர தூக்கிட்டானுங்கலாம்...
பெரியவர் : சரி வேலை கிடக்கு..இந்த காசு..50 பைசா கம்மியா இருக்கு ..அப்புறம் தாரேன்..இந்த பசங்க வேற வாடகை குடுக்காம அட்வான்சில் கழிக்க சொல்லிட்டாங்களா.. கையில காசுப் புழக்கமே நின்னுடுச்சுப்பா....( அட்வான்சை வைத்து Computer eng படிக்கிற பையன் கல்லூரி கடைசிவருட fees கட்டியாச்சு..இவனுங்களுக்கு வேற அட்வான்சை ரெடி பண்ணணும்..என்று முனகிய வாறே பெரியவர் நகருகிறார்..)


ரமேஷ் : அண்ணாச்சி காசு அப்புறம் தாரேன்..காலைலேர்ந்து ஒரு சவாரியும் வரலை...இனனைக்கு -T கம்பேனி லீவ் இல்ல அதனால்..

அண்ணாச்சி : ம்ம்ம்..

என்று சலித்து கொண்டே ..பெரியவர் கொடுத்த காசை கல்லாவில் போட்டுட்டு (.கல்லாவில் அதுதான் முதல் காசு...) பால் சட்டியை திறந்தார்..எப்பொதும் இந்த நேரத்தில் பால் முக்கால் வாசி விற்று இருக்கும்.ஆனால் இன்னைக்கு அப்படியே இருக்கு...அமைதியாய் இருந்தது அமெரிக்காவின் labour day க்காக விடுமுறை விடப்பட்ட எதிரே இருந்த I-T கம்பெனி வளாகம்.