Friday, August 3, 2012

அவள் அப்படி ஒரு அழகு

(அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - நா . முத்துகுமாரின்  எழுத்தின் மூலம் என் எண்ணம் என்னவளுக்கு !)

அவள் அப்படி ஒரு அழகு
ஆனால் அவள் அப்படி நினைப்பதில்லை
அவள் அப்படி ஒரு  கலர்
ஆனால் அதை அவள் நிறையாய் நினைப்பதில்லை
அவள் பெரிதாய் தான் படித்திருக்கிறாள்
ஆனாலும் அதை குறைவாய் மதிப்பிடுகிறாள்.

அவள் உடுத்தும் உடைகள் பிடித்திருக்கும்
இருந்தும் எனக்காக மாற்ற மறுப்பதில்லை
அவள் மீன் குஞ்சுகள் மீது அன்பாய் இருக்கிறாள்
நான் அவைகள் மீது பொறாமை படுகிறேன்
நான் பொம்மைகள் அணைத்து உறங்குகிறேன்
பொம்மைகளுக்கு அவள் பெயரை சூட்டியதால்
அவள் கூந்தல் ஒன்னும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை.

என் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
ஆனாலும் அவளுக்கு என் கைப்பிடிக்கும் ஆசைகள் நீங்கவில்லை
அம்மாவுக்கு பின் அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுபுடவைகள் என்றும் விரும்பவில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கறை போல வேறுஇல்லை
அவள் கூந்தலில்லாத  பூக்களுக்கு வாசமில்லை
அவள் இல்லாமல் இனி என் சுவாசமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை!!!

-முரு

~~

Monday, May 21, 2012

வாழ்க்கையின் பாதையிலே - N. Ganeshan

வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே! - N. Ganeshan