Tuesday, May 19, 2009

வெள்ளை பூக்கள் மலரட்டும் ...

இனிமேலாவது அமைதிப்பூக்கள் மலரட்டும்..

இப்போது சாந்தியா ராஜிவ் குடும்பம் மற்றும் காங்கிரஸ்காரர்களே, சுப்பிரமணிசாமி மற்றும் வட நாட்டு தொலைகாட்சி குழுமங்களே..இப்போது சாந்தியா?

தன் மகனை முதலவராக்கலாமா, பிரதமராக்கலாமா என்பவர்களிம் ம்த்தியில் தன் மகனை மாவீரனாக்கிய தலைவன்.

புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஒரே காரணத்திற்காக நடந்த இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த உலக தலைவர்க்ளே., இந்திய வல்லரசின் ஆட்சியாளர்களே ...இதோ உங்கள் கண்ணோட்டத்தில் தீவிரவாதிகள் மாவீரர்களாகிவிட்டார்கள்..இனி காரணம் என்று தேடாமல் தமிழர் வாழ்வு சிறக்க உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.

தமிழினத்தலைவரே! இனியாவது தமிழ் மக்களுக்காக் குரல் கொடுங்கள். இனியாரும் உங்கள் ஆட்சியை விடுதலைப்புலிகள் பேரை சொல்லி கலைக்க முடியாது. நீங்களும் அவர்களுக்காக ராஜினாமா செய்ய தேவையில்லை.
நீங்கள் தவற இழைத்தாக நான் கூறதேவையிலை.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.இனிமேலாவது அதற்கு பிரச்சாயித்தம் தேடுங்கள்.

நடந்தவைகளை மறப்போம். வரலாறு நமக்கு வாழ்வழிக்காது சொந்தங்களே ! நடப்பவைகளை எண்ணுங்கள்.
இன்னும் 33 ஆண்டுகள் வேண்டாம் சொந்தங்களே. மாவீரர்கள் ஆனது போதும். இனிமேல் நம் குழந்தைகள் சமாதானமான் உலகத்தில் வாழட்டும்.

மாவீரர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வெள்ளை பூக்கள் மலரட்டும் ..

வாழ்க தமிழினம் !

Wednesday, May 6, 2009

நானும் , சென்னை விமான நிலையமும் !

~


சிறு வயதிலிருந்தே மீனம்பாக்கம் போகனும், விமானங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசை.. அது 2003ல் தான் நிறைவேறிச்சு.நான் அப்ப சென்னையில் வேலை தேடிகொண்டுருந்தேன்
. எங்க அண்ணன் சிங்கைலிருந்து வரும் அவங்க நண்பரை வரவேறக ஊரில் இருந்து வந்தது. நானும் அண்ணணோடு விமான நிலையத்திற்கு சென்றேன்.

முதல்முறையா கலர் கலரான ஆடைகளில் விமான பணிப்பெண்களை பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது.. " சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் " என்ற பாட்டில் வரும் கொளதமிக்கு அப்புறம் முழுகாலுறை அணிந்த பெண்களை அப்போதுதான் பார்த்தேன்..அதென்னமோ தெரியல வெளி நாட்டு விமான பணிப்பெண்கள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தார்கள் ! :

அந்த நேரத்தில் ஒரு குவைத் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியில் வந்து கொண்டுருந்தார்கள் ..சொந்தமண்ணுக்கு வரும்போது முகத்தில் வருது பாருங்க ஒரு பூரிப்பு அப்ப அப்ப அது தனி ரகம்..ஒவ்வொருத்தர் மூஞ்சிலும் அவ்வளு சந்தோசம்..அவங்க சொந்தங்களை கண்டதும். ஒரு அம்மா தன் கைகுழந்தையோட நின்னுகிட்டு இருந்தாங்க.காதல் திருமணம்னு நினைக்கிறேன்.அவங்க மட்டும்தான் வந்திருந்தாங்க வேறயாரும் வரலை.அவங்க புருசன் வந்தவுடன் "என்னங்க. " .என்றவர் அதற்கு மேல் பேச்சு வரல..அந்த கைகுழந்தைய..வாங்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் அவர் அப்படியே அணைத்து கொண்டார்.இருவர் கண்ணிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் ! பாசப்பிணைப்பு..எனக்கு மறபடியும் உடம்பு சிலிர்த்த்து..

அப்புறம் என்பக்கத்தில் ஒரு வயதான பெற்றோர் நின்றனர்..அவர்களில் பெரியவர்." உன் பிள்ளை 5 வருசம் கழித்து வரான்..அவன் இப்ப எப்படி இருக்கானோ எதாவது அடையாளம் சொன்னானா? " அதற்கு அந்த அம்மா " அடப்போங்க எத்தனை வருசம் ஆனாலும் என் பிள்ளை எனக்கு தெரியாதா ! " என்றாள் . அதே மாதிரி கொஞ்ச தூரத்தில் வரும் போதே.."அதோ வந்துட்டான்..தம்பி...ராசா..." என்று ஆனந்த கண்ணீரொடு சத்தம் போட ஆரம்பித்து விட்டார். பெரியவர்.."சும்மா இரு அது வேறயாராவுது இருக்க போவுது.." என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையன் ஓடி வந்து "அம்மா" னு அவங்களை கட்டிபிடித்து கொண்டார்....இப்படி நிறைய பாசப் சந்திப்புகள் நடந்து கொண்டுருந்தன....சிங்கை விமானம் தாமதமானதால் நாங்க விமான நிலையத்தை சுத்தி கொண்டுருந்தோம்..

புறப்படும் மையத்திற்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டுருந்தேன்.. நான் சோகமான முகபாவம், சந்தோசமான் முகபாவம் பார்த்திருக்கேன்..முதன் முதல சோகம் கலந்த சந்தோசமான முகங்களை அங்கே தான் பார்த்தேன்..குறிப்பா ஒரு பொண்ணுகிட்டே..அந்த பொண்ணு கல்யாண ஆன புதுப்பெண்..அவங்களோட கணவரோட சிங்கைக்கு போறாங்க..அவங்களுக்கு முதல் விமான பயணம்னு நினைக்கிறேன்..அவங்க உறவினர்கள் எல்லாம் கிட்டதட்ட அழறாங்க..அந்த பொண்ணு முகத்தில முதல் முறை விமான பயணம், தனியா தன் புது கணவரோட என்ற சந்தோசமும்,உறவுகளை பிரியும் சோகமும்..அப்பப்பா சான்ஸே இல்லை...

அப்புறம் கொஞ்ச நேரத்தில் நாங்க திரும்ப வருகைக்கான மையத்திற்கு வந்தோம்..அப்ப ஒரு அழுகுரல் கேட்டிச்சு..என்னானு திரும்பி பார்த்தா ஒரு 35 வயது மதிக்க தக்க வாலிபர்.." போச்சே போச்சே இவ்வளு நாள் நாயா உழைத்த எல்லாம் போச்சே...." என்று பரிதாபமாக அழுது கிண்டுருந்தார்..என்னனு போய் விசாரிச்சா..அவர் குவைத்யிலிருந்து அவங்க தங்கை கல்யாணத்திற்காக நகை கொண்டு வைந்திருக்கார் அதை காணோமாம்..பெட்டியிலதான் வந்திருந்தாராம் . எங்க யார் எடுத்தானே தெரியலயாம்..அவங்க குடும்பத்தினர் அவரை சமாதான படுத்திறாங்க..இருந்தாலும் மனம் ஆறாமல் தொடர்ந்து அழுது கிட்டே இருந்தார்.."கல்யாணம் நின்னாலும் பரவாயில்லைனே நீதான் வந்திட்டீல" என்றது ஒரு குரல்..அது அவரது தங்கை என்று நினைக்கிறேன்.. அது வரை விமான நிலையம், பலதரப்பட்ட மக்களின் பாச சந்திப்புகள், பிரிவுகள்னு பார்த்து சந்தோசமாய் இருந்த நான் இந்த நிகழ்வை பார்த்தலிருந்து கிட்ட தட்ட அழுதிட்டேன்..

நம்மாளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்திற்காக ( பெரும்பான்மை குடும்ப காரணங்களுக்காக) வெளி நாட்டில் போய் எவ்வளவு கஸ்ட படுறாங்க ..இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலம் வருமோ !

( அடுத்த முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு சென்றது என் முதல் வெளி நாடு பயணத்திற்காக ..அந்த அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதிறேன் ! )~~~