Saturday, May 1, 2010

KPL - கோட்டை பிரிமியர் லீக், A/C busல் வெத்து சீன்

~

IPL கிரிக்கெட்டில் கோடியா கோடியா பணம் எப்படி கிடைக்குது..நான் கேபிள் பணம் கட்டி டிவில மேட்ச் பார்க்கிறேன்..இதுல இவனுங்களுக்கு எங்கிருந்து பணம் போகுது
என்னதான் விளம்பரம் வந்தாலும் 8000 கோடிக்கு மேலேயா...? உள்ளடி வேலை எதோ நடக்குது !
நானும் எங்க ஊர்ல KPL ஆரம்பிக்கலாம் இருக்கேன். KPL - Kottai Premier League..நான் தான் கமிஷனர்..அப்பதானே பொண்னுங்க பக்கத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கலாம்.. ஒரு தெருவுக்கு ஒரு டீம்..ஒவ்வொரு டீமுக்கு ஒரு பாரின் பிளேயர்..எல்லா பயலும் வெட்டியாதானே இந்தியாவில் எவனாவது கூப்பிடுவானானு சுத்திகிட்டு இருக்கானுங்க ! ..hayden,lara, fleming..இந்த மாதிரி சின்ன் பசங்க்ளை கூப்பிட்டு போடலாம்னு இருக்கோம்..இந்தியன் பிளேயர்சுக்கு காசு கொடுத்து கட்டுபடி ஆகாது என்பதால் இந்த ஏற்பாடு !
cheer leaders க்கு தெருவுக்கு கரகாட்டத்தை கூப்பிட்டுக்களாம்..அவங்களுக்கு காசு போனாலும் புண்ணியம்..சும்மா இந்த வெள்ளைகாரிங்க வந்து ஜிம்னாஷ்டிக் பண்ணிட்டு காசை பிடிங்கிட்டு போறதுக்கு..நம்ம ஊர் கலைஞர்கள் வளருட்டும் ! ஆனால் ஒளிபரப்பு உரிமை கலைஞ்ர் டீவிக்குதான் தரனுமாம் மேலிடத்து உத்தரவு..அப்பதான் KPLக்கு வரிவிலக்காம். அது மட்டுமில்லை கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கனுமாம் ( (அவருக்கேன்டா பாராட்டு விழா அப்படி எல்லாம் கேட்ககூடாது..அது கலைஞர் டீவியோட business tactics..அதனால் அதைபத்தி பேச கூடாதுனு KPL governing committe உத்தரவு ) . சசி தரூர் வேற ஏல ரேட்டை வேற முன்னாடியே கேட்டுயிருக்கிறார்...அது பரவாயில்லிங்க சின்ன மேட்டர் பண்ணிக்கலாம்..ஆனா இந்த தெருவுக்கு ஒரு டீம் வேணும்னு ஒத்த கால நிக்கிறாராம்...என்ன பண்றது. களத்ததில் இறங்கனுதுக்கு அப்புறம் இந்தமாதிரி சின்ன சின்ன அரசியல் எல்லம் சாதாரணம..எங்கள் ஏலத்தில் கண்டிப்பா Transperancy இருக்கும் ...ஏலம் எடுக்கனும்னுனா kottai நோக்கி அலைகடலென் திரண்டு வாருங்கள். பினாமிஷ் please execuse :):)

சன் டீவியின் அராஜகம் தாங்கலை என்னதான் நித்தி தப்பு பண்னிருந்தால் அந்த நீல படத்தை டீவியிலயே ஓட்டுவாங்கே
ஒருத்தரோட அந்தரங்கத்தை ரகசியமாய் படம் எடுத்து வெளியிடுறதல/பார்க்கிறதல மக்களுக்கு எவ்வளோ சந்தோசம் !
என்னதான் இருந்தாலும் இதை படம் போட்டு உலகுக்கே காட்டமால் புகைப்படத்தோடவது நிப்பாட்டிட்டு படத்தை காவல்துறையினடிடம் கொடுத்து இருக்கலாம்.
ரஞ்சிதாவோட குடும்பம் ரொம்ப அவமானம் பட்டுஇருக்கும்..அவரோட கணவர் பாவமோ பாவம்..
ஆனா நித்தி போட்டார் பாடுங்க ஒரு போடு ..நான் ஆம்பிள்ளை இல்லேங்கனு.. " இப்ப என்ன பண்னுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க" என வினுசக்கரவர்த்தி மாதிரி ! :)

A/C busla நம்ம மக்கள் பண்ற அல்லு தாங்க முடியல ! பின்னாடி எவ்வளுதான் இடம் இருந்தாலும் நகருதில்லை படியில் எத்தனை பேர் தொங்கினாலும் ஒரு கூட்டம் அதை கண்டுகாதமாதிரி பின்னாடி நகராமால்/.a/c .காத்து வர்ற இடத்தில நின்னுட்டு பின்னாடி இடமே இல்லாதமாதிரி சிக்னல் பண்றது.. இன்னும் சில பேர் இருக்கான் எதுக்கு சார் இவ்வளவு பேரை வண்டியில் ஏத்து இருக்கீங்க..comfort-அ இடம் இல்லாட்டி வண்டிய நிறுத்தாமல் போகவேண்டிதுதானேனு சண்டை போடுவான்..இவனோட stopல ஒரு நாள் நிக்காம போனால் அவ்வளுவுதான் அர்ச்சனை பண்ணிடுவான்..சுய நலத்தின் வெளிபாடு..ஒரு பேருந்தில் சற்று நம்ம comfortness-இ விட்டு கொடுத்து adjust பண்ண முடியல..வாழ்க்கையில் எப்படி விட்டுகொடுத்து வாழ போரும்... ..என்னதான் F.M போட்டாலும் ,நிறைய பேர் அபபடியே பிறக்கும் போதே ipod-ட பிறந்தமாதிரி மாட்டிக்கிட்டு..கண்டக்கர் சில்லறை சில்லரைனு கத்துனாலும் 100ரூபாய் நோட்டை நீட்டுவான்....தமிழே தெரிந்தாலும் கண்டக்கர் கிட்ட, பக்கதுல நிக்கிறவன் கிட்ட english தான் பேசுவானுங்க..ஏண்டா இந்த வெத்து சீனு! :)


~

இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் - வைரமுத்து !

~

இரைதேட பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் கூடு
மக்கா நாமெல்லாம் ஒரு கூடு
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம் !
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்து நிக்கும்
தாய் தந்த அன்பையும் தந்தையின் நல் பண்பையும் நாம்
கொண்டால் பூமாலை காத்திருக்கும்

நெல்லும் விதை போடாமல் நெல்லும்வருமா ?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா ?

வெள்ளைமன இளம் சிட்டுகள் வெற்றி கொடு கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத்தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக்கண்ணீரால் அபிஷேகம் தாய் செய்தால்
அதைவிட இன்பம் எதுவுமில்லை!

~