Saturday, May 21, 2011

ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?

ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?

ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒருவரின் மதிப்பை கொலைசெய்துவிட முடியும் என்ற நிலைமையில் தான் இப்போது இருக்கிறோம். மக்களின் மீது ஊடகங்களின் கருத்து திணிக்கப்ப்டுகிறது .நீதிபதிகள் தீர்ப்பை கூட ஊடகத்தின் அனுமானங்களின் சக்தி ஆட்டிவைக்கிறது. ஒரு விசயத்தை தன் வார்த்தை தோரணத்தால் நல்லவிசயமாகவும், தனக்கு பிடிக்காதவர் என்றால் கெட்டவிசயமாகவும் ஊடகங்களால் பிரச்சாரம் செய்ய முடிகிறது.கட்சி சார்ந்த ஊடகங்களை விட்டுவிடுவோம்.அவைகளை மக்கள் பெரியவிசயமாக எடுத்து கொள்வதாக நான் கருதவில்லை.ஆனால் நடு நிலை என்ற போர்வையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மூட நம்பிக்கைகளையும், தான் சொந்த இன,மொழி,மத வெறுப்புகளை விதைக்கும் ஊடகங்களை பற்றியதுதான் என் கவலை.உதராணங்கள் பல.

எந்த ஒரு அடித்தள உண்மையும் இல்லாமல் இவர்களால் ஒரு தலைப்பு செய்தியை போட முடிகிறது..இட்டுகட்டி எழுதமுடிகிறது..இந்த பொய் செய்திகளால் உணமை எது பொய் எது என்ற தெரியாமால் ஆமாம் எல்லாரும் இப்படிதான் என்ற எதிர்மறை சிந்தனை மக்களுக்கு மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த நாட்டில் இறந்த தலைவர்களை தவிர தனக்கு பிடிக்காத ,அல்லது அவர்கள் வியாபரத்துக்கு உதவாத எவரையும் இந்த ஊடங்கங்கள் விட்டு வைப்பதில்லை. வியாபாரத்து உதவி என்பது தற்போதைய சூழ் நிலையில் மக்களுக்கு எது பிடிக்கும் ..அதை பெரிதாக்கி (செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதல்லாம் தகுதி கிடையாது). உதாரணத்துக்கு இப்ப ஒருவன் 50% கெட்டவனு வைச்சுக்கங்க.. அவனை பத்தி அவன் செய்யாததையும் எழுதி 200% கெட்டவன் போல சித்தரிக்கிறது..50% உண்மை 150% நம்ம கற்பனை (உதராணம் கருணாநிதி)....இதே இவர்களுக்கு பிடித்தவராக இருந்தால் போதும் 25% நல்லவனாக இருந்தால் கூட போதும் அப்படியே உல்ட்டவாக ஆபத்தாண்டவனாக போல சித்தரிக்கப்படுவார் (உதராணம் ரஜினி). எதை நோக்கிசெல்கிறது இந்த பயணம் ?. ஊடங்கங்களுக்கு ஒரு accountablityயும் கிடையாது..ஒரு பக்க பெரியளவில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாள் ஒரு மூலையில் கண்ணுக்கு படாத இடத்தில் மறுப்பு வெளியிட்டால் போதும்..என்ன ஒரு தர்மம் ?. தன் சட்டப்பை சுடும் வரை யாரும் பற்றி எரியும் தீயை பற்றி கவலைபடுவதில்லை . பர்கா தட் போன்ற பத்திரிக்கையாளர்கள் தனக்கெதிராக ஒரு சர்ச்சை வந்தவுடன் அதை வெளியிட்ட பத்திரிக்கைய சாடிய அதே கோபம் மற்றவர்களுக்கும் வரும் என உணராத்து ஏன்..?

எண்ணில் அடங்கா உதாரண்த்தை என்னால் எடுத்துரைக்க முடியும் ..அதில் சில ஊடங்கங்கள் எனக்குபிடித்த ஊடங்கள் இந்த குறை பாட்டை தவிர..

NDTV இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தென்னிந்தியாவை பற்றியோ, அதில் நடக்கும் நல்ல விசயங்களை பற்றியோ ஒளி பரப்பியதே இல்லை..அவர்கள் எல்லாத்திலும் கருணாநிதி குடும்பத்தையே பார்பார்கள் வேற யாரும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது..அவர்கள் பொறுத்தவரை தமிழ் நாடு என்றால் ராஜா,கருணா நிதி குடும்பம், சோ,சுசாமி,ஜெயா,ரஜினி,சென்னை அவ்வளவுதான். ஆனால் உண்மையில் இவர்கள் தமிழ் நாட்டின் பிரதி நிதிகள் அல்ல . பிரபலமானவ்ர்கள் அவ்வளவுதான். தென்னிந்தியா மீதான் வெறுப்பை அல்லது காழ்ப்புணர்ச்சியை கக்கினால்தான் அவர்களின் வட இந்தியா வாசகர்காள் ரசிக்கிறார்கள் போலும். சமீபத்தில் ஒரு சொல்லாடல். yesterday- free rice- karunanidhi freebee. today free rice- jaya's welfare scheme. அது எப்படி ஒருத்த செஞ்சா அது தப்பு..இன்னொருத்தர் செஞ்சா அது சரி?

தினமலர் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூட நம்பிக்கையை சப்போர்ட்டுக்கு பயன்படுத்துவது..மக்களின் மீது அதே மூட நம்பிக்கையில் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவது..சமீபத்திய உதாரணம்கள் சாய்பாபா தன் சாவின் நாள் குறித்து சொன்னதை பல்வேறு கணக்குகளை வைத்து உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.. என் பல உதாரணங்களை சொல்லலாம்.

தமிழ் நாட்டின் பொருளாதாரம் கிராமத்து பள்ளிகளின் எதிரே பத்து ரூபாய் முதலீட்டில் மாங்காய் கீறி விற்கும் கிழவியில் ஆரம்பித்து, வயல்காட்டு உடல் உழைப்பில பயணித்து, திருப்பூர்,கோவை தொழில்சாலைகளில் கசக்கிபிழிப்பட்டு சென்னை தகவல் தொழில் நுட்பம், ஆட்டோ மொபைலில் ஜொலிக்கிறது.மேலும் எத்தனையோ தொழில்கள் இருக்கிறது..ஆனால் ஊடங்கள் சினிமா தொழில்தான் அதிக முக்குவத்தும் பெறுகிறது..அல்லது முன்னெடுத்து சொல்லபடுகிறது..அதிலும் கூட கிசுகிசுகள், அவ்ரகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள்தான் அதிகம்.

எத்தனையோ நல்ல சம்பங்கள் நடந்தாலும், கள்ளக்காதல் இல்லாத பத்திரிக்கை ஒரு நாளும் வெளிவருதில்லை.எந்து நடுத்தர வயது பெண் கொலை செய்யபட்டாலும் அது களளக்காதல் என்பது இவர்களின் கற்பனை..

இந்த ஊடங்களன் முகத்திரையை கிழிப்பதற்கென்றே ஒரு தனி ஊடகம் தொடங்க வேண்டும்..

2 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த ஊடங்களன் முகத்திரையை கிழிப்பதற்கென்றே ஒரு தனி ஊடகம் தொடங்க வேண்டும்..//

மிக சரி.

Anonymous said...

mutrilum sari!

Post a Comment