Saturday, September 10, 2011

நகரம் - கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம் நூலிருந்து !

~
அவசர மனிதர்கள் கடுகடுத்த முகங்கள்
பேரிரைச்சலாய் எழுந்து பேரிரைச்சலில் அடங்கும் நகரம்

மரியாதை நிமித்தங்களுக்கு நேரமற்ற மொழி.
இருபது வருடம் கழித்து பார்ட்டியில் பார்த்து
என் பக்கத்து வீடா நீங்கள் என வினவும் வாழ்க்கை.
Waiting List டிக்கெட் confirm - ஆனதில் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியை அடையும் மக்கள்.இதில் வேரறுத்து ஓடிவிடும் கனவோடு நாட்களை நகர்த்தும் மனிதர்கள்.

இந்த அழுக்கிலும் சந்தடியிலும் கரைந்து போகிறது கடந்த காலங்கள்
மாமாவின் மதமாற்றம், தாயின் ஜாதி, தாத்தாவின் சிறைவாசம், தந்தை அறியா பிள்ளை,
செல்போனில் முகம் தொலைத்த மனிதர்களின் ஜோதியில் சரித்திரங்கள் கரைந்தன.
சென்றவாரம் வீட்டிற்கு வந்தவனும் இன்று சினிமாவில் பார்த்தவனும் ஒன்றா சிந்திக்க நேரமில்லை.

சரவணபவனுக்கும் பீட்ஸா கார்னருக்கும் விருது நகருக்கும் இடையே
பிசிறில்லாமல் ஊடாடும் வாழ்வில், இதமாய் ஏந்தும் இந்த சந்தடி மிகுந்த கான்கிரீட் நகரத்துள்
தொலைந்து போகிறேன் கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்.

~

No comments:

Post a Comment