Sunday, December 20, 2009

சென்னையில் இடம் வேண்டுமா ? கலைஞருக்கு பாராட்டு விழா எடுங்கள் !

~
அவன் அவன் வயித்தை கட்டி வாயை கட்டி ஒரு இடத்தை வாங்கிறதுக்குள்ளே வாயில் நுரை தள்ளி போகுது..
இவர் என்னனா அரசாங்க இடத்தை அதுவும் சென்னையில், இவருக்கு பாராட்டு விழா எடுத்தால் குறைந்த விலைக்கு கூட இல்லை இலவசமா கொடுக்கிறார்...அதுவும் யாருக்கு சினி தொழிலாளர்களுக்கு.. ஏன்னா இவங்க ரொம்ப கஷ்டபடுறாங்களாம்..அப்ப சென்னையில் வேற எவனும் கஷ்ட படுறதில்லை .....விழாவில் நம்ம கஷ்டபடுகிற தொழிளாலர்களுக்காக குத்தாட்ட நடிகைகள் காசு வாங்கிட்டு ஆட்டம் போடுவாங்க. இந்த கஷ்ட படுற தொழிலாளர்களுக்காக அவர்கள் உழைப்பில் கோடி கோடியாக சம்பாதித்த ஸ்டார் நடிகர்கள் மைக்கை பிடித்து இரண்டுவார்த்தை பேசுவாங்கே ! உடனே உடன் பேசவரும் அல்லக்கைகள் ஸ்டார் நடிகர்கள் வந்ததற்காக அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்வார்கள். என்னா அந்த பாராட்டுவிழாவை கலைஞர் டீவியில் போட்டு காசு பார்ப்பாங்கே. நாம வாயில விரல் சப்பிட்டி அதை பார்த்துட்டு இருப்போம். அங்க ஒரு 116 ஏக்கர் இலவசமா அலட்டாம கொல்லாம வாங்கிட்டு போயிட்டானுங்க! பகல் கொள்ளை முதல் அமைச்சர் தாராள மனதுடன். கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த மாதிரி.... இதை எதிர்த்து வழக்கு போடமுடியாதா ?

இதைவிட கொடுமை நம்ம MLAக்கள் மக்களுக்காகவே உழைத்து ரொம்ப கஷ்ட படுறாங்களாம்..அவங்களுக்கும் பாவம் ஒரு பங்களா கட்டிக்கொள்ள (ஏற்கனவே இருக்கிறதெல்லாம் பினாமி பேர்ல இருக்கும் போல ) சென்னையில் இடம் இலவசமா கொடுக்கனும்னு நம்ம மக்கள் தொண்டன் வேலூர் ஞானசேகரன் போராடுறார்..அதுவும் சோழிங்க நல்லூரில்தான் வேணுமாம்.. (அங்க தான் இப்ப இடம் ஹாட் விலை )..பாவம் இவருடைய நியாயமான மக்களுக்கான கோரிக்கை ஏற்று தலைவர் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார். எப்படியும் தலைவருக்கும் ஒரு இடம் உண்டு அவரும் MLA தானே. அதுக்கு இன்னும் பாராட்டுவிழா நடத்தல..நடத்தியுடனே கொடுத்துடுவார்.. ஏற்கனவே இருக்கிற 3 star MLA hostel பழான லாட்ஜ் ரேஞ்ச்சுக்குதான் பயன் படுது. அங்க MLA வின் அல்லகைகள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியல.

பதிவுலக மக்களே நம்மளும் பாராட்டு விழா எடுத்து குறைந்தது ஒரு 5 ஏக்கருக்கு ஏற்பாடு பண்ணலாம் வாங்க. கூட்டத்துக்கு ஒரு 3000 பேரு தலைக்கு 300 வீதம் பேசி கூப்பிட்டுகளாம்..இந்த குத்தாட்டத்திற்கு சினிமாவில் வாய்ப்பு தேடிட்டு இருக்கவங்களாய் குறைந்தவிலைக்கு பேசிக்கலாம்..அரங்கம் அப்படி இப்படினு ஒரு 10 லட்சம் செலவு பண்னா எப்படி ஒரு மினிமம் 5 கோடி இடம் கேரண்டி என்ன சொல்றீங்க ?

~

Sunday, December 6, 2009

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

~

பேரழகி எதிர்ப்பார்பில்லை - என் முகத்தை
தினமும் கண்ணாடியில் பார்பதுண்டு !
செக்க சிவப்பு தேவையில்லை -
நான் தமிழன் ! தமிழச்சியின் நிறம் போதும் !

நீங்கா புன்னகை போதும் , பொன்னகைகள் தேவையில்லை !
தனிமை பிடிக்காது எனக்கு ! எப்போதும் உன் அருகிலே இருப்பேன்
இம்சை தான் ! பதிலுக்கு நீயும் அதையே செய்யலாம் !

நேசமிகுந்தவர்களின் மீது கோபம் வந்தால் மெளன ஆயுதம் ஏந்தி கொள்வேன்
மெளன ஆயுதம் தாங்கும் மெளன கேடயம் இருந்தால் போதும் உன்னிடம்
சமாளித்துவிடலாம் என் கோபத்தை !

புத்தகப் பிரியன் நான் அதனால் சில நேர செய்திகள் தவிர தொலைகாட்சியை நீயே கையாளலாம் !
வருமானம் பரவாயில்லை கைவசம் கணிப்பொறி வேலை !
வேலை போனாலும் உழைப்பாளிகளுக்கு அடுத்த வேலை கிடைக்க அதிக நாள் ஆகாது
அதனால் உன்னை பசிக்க விடமாட்டேன் !

காதல் எனக்கு வாய்பளிக்கவில்லை வாய்ப்பு உருவாகும் சந்தர்ப்பங்களை என் விருப்பத்திற்கு மாறாக நானே தவிர்த்ததுண்டு !
நீண்ட நாட்களாக காதல் என்னுள் சிறைப்பட்டு கிடக்கிறது ..நீ வந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கும் ~

திருமணத்துக்கு முன்போ/பின்போ நடந்த / நடக்கும் நிகழ்வுகளில் என்னிடம் சொல்ல நினைப்பதை ம்ட்டுமே கேட்க எனக்கு ஆவல்.
தவிர்கக நினைப்பதில் முழு சுதந்திரம் உண்டு உனக்கு !
உன குடும்ப மகிழ்/துக்க தாக்கத்திற்கு மதிப்பளிப்பேன்! உன்னிடம் அதையே எதிர்பாப்பேன் !

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

ஒன்று !
மூட நம்பிக்கைகளில் , பஞ்சாங்க நேரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை !
ஆனாலும் பெற்றோர் எனக்குள் ஏற்படுத்திய இந்த நம்பிக்கைகள் மீதான் உளவியல் தாக்குதல்
எப்போதாவது எட்டி பார்க்கும் அதை தவிர்க்கவே நினைக்கிறேன்..
கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும்

இரண்டு !
ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் என் பெற்றோர் மனம் கலங்கி விடக்கூடாது !
வாழும் இன்னும் சில் வருடங்கள் மகிழ்வோடு வாழவேண்டும் அவர்கள் !
அதற்கான உன் கோபங்களை / சங்கடங்களை பொழிய உனக்கு தடையில்லை நான் இருக்கிறேன் அதற்காக !

~
Note:- கவிஞர் யுகபாரதியின் ஒரு கவிதையை படித்த பாதிப்பில் என் உணர்வுகள் அதே சாயலில் !

~