Monday, February 23, 2009

தமிழ் வழி - பகுதி 2

.

தமிழ் வழி பகுதி - 1


இளமதி தமிழ் ஆசியரின் மகள்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவள்.தமிழ் கவிதைகளை விரும்பி படிப்பவள்.அவள் தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள், ஆனால்அவளின் அம்மாவின் கட்டாயத்தால் பொறியியல் சேர நேர்ந்தது.பாவடை தாவணியில் இளமதி பார்த்தவுடன் நம்ம மட்டும் இல்ல ! நமக்கும் ஒரு பட்டிக்காடு company-க்கு இருக்கு என்று மனதில் நினைத்துகொண்டான் பாரதி.வகுப்புகள் தொடங்கின..நாட்கள் நகர்ந்தன.பாரதியும்,இளமதியும் தமிழ் மீடியத்தில் படித்ததால்,ஆங்கிலத்தில் பாடங்களை படிக்கவும்,ஆசிரியர் நடத்துவதை புரிந்து கொள்ளவும் சிரமப்பட்டனர்.அதே அவர்களிடையே நட்பு வளர காரணமாயிருந்தது.இருவரும் தமிழ் ,தமிழ் சார்ந்த புத்தகங்களை பற்றியே அதிகம் பேசிக்கொண்டனர்.

முதல் பருவத்தேர்வு வந்தது.ஆங்கில சிரமத்தால் சில பாடங்களில் இருவரும் தோல்வி கண்டனர்.அவர்கள் கல்வி வாழ்க்கையிலே முதல் தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதித்தது..ஆசிரியர் ,சக மாணவர்களும் சாதரணமாக பார்த்தாலும் ,அவர்கள் தங்களை கேலியாக பார்ப்பதாக உணர்ந்தனர்.பாரதி இந்த தோல்வியை தாங்க முடியாமல் விடுதியில் போய் தனியே அமர்ந்து அழுதான்.அருகில் கிடந்த செய்தித்தாளில் "ஆங்கிலத்தால் சரியாக படிக்க முடியாததால் மாணவர் தற்கொலை " என்று தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த செய்தி இருந்தது. தானும் அவ்வாறு செய்துகொள்ளலாம் என்று அவன் தனிமை அவனை தூண்டியது.அப்போது அவனை தேடி விடுதிக்கு வந்தான் கதிர்.பாரதி அழுவதை பார்த்து அவனுக்கு ஆறுதில் கூறி, அவனை வெளியில் கூட்டி சென்றான்.

இளமதி தன்னால் தொடர்ந்து படிக்க இயலாது, நான் discontinue பண்ணிட்டு தமிழ் படிக்க போவதாக அவள் அப்பாவிடம் சொன்னாள். Arrears வாங்கிறது எல்லாம் சகஜம் என்று எவ்வளவோ எடுத்து கூறியும் தன் முடிவில் உறுதியாக் இருந்ததனால் வேறு வழியின்றி அவள் விரும்பிய வண்ணம் செய்தார் அவள் அப்பா.இளமதி எல்லா கல்லூரி தோழர்களிடம் விடை பெற்று சென்றாள். பாரதியிடம் மட்டும் தன் வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்தாள்.மனதில் ஒரு வித பாரத்துடன் கல்லூரிய வகுப்பை விட்டு நகர்ந்தாள்.

கதிர் பாரதிக்கு தினமும், பாடங்களை சொல்லி கொடுத்தான்..பாரதியும் இரவு, பகலாக படித்தான் கதிரின் துணையோடு. நான்கு ஆண்டுகள் உருண்டோடின. பாரதியின் உழைப்பு அவனை எல்லா தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்தது.அவன் கல்லூரியின் CAMBUS Interviews வந்தது.. எல்லா company Interviewஸ் யிலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும், ஆங்கில பேச சிரமபட்டதால் ,அவனால் group discussion, direct interivew யில் செலக்ட் ஆக முடியவில்லை.கதிர் ஒரு companyயில் செலக்ட் ஆனான்.

கல்லூரி வாழ்க்கையும் முடிவடைந்தது.கதிரும், பாரதியும் ஊருக்கு சென்றனர்.தனபாலும் ,கஸ்தூரியும் பாரதி வந்த சந்தோசத்தில் இருந்தாலும் பாரதி மட்டும் வேலை தேடும் நினைப்பாகவே ,கிடைக்குமோ கிடைக்காதோ என்று சோகத்துடனே இருந்தான். கடைசி தேர்வின் முடிவுகள் வந்தன.பாரதி தான் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததை அவர்களிடம் சொன்னான்.அவர்கள் பூரித்து போனார்கள்.கஸ்தூரியின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.தங்கை கவிதா ஒடி வந்து வாழ்த்து சொன்னாள். அண்ணே பாசாயிடுச்சு இனிமே நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்திருமா...இந்த வருசம் தீவாபளிக்கு எனக்கு நல்ல சுடிதார் வாங்கி கொடுக்கணும் என அவள் ஆசையெல்லாம் கோரிக்கையெல்லாம் அடுக்க ஆரம்பித்தாள்..பாரதி கண்டிப்பா இவ ஆசையெல்லாம்..நிரைவேற்றனும்.நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கனும்னு மனதில் நினைத்து கொண்டான்.

நாட்கள் கடந்தன.Interviews callsக்காக wait பண்ணி சோர்வடைந்த பாரதி அம்மாவிடம் தான் சென்னைக்கு வேலை தேட செல்ல இருப்பதாக கூறினான்.அதை கஸ்தூரி தனபாலிடம் கூற, தன்பால் பாரதியை கூப்பிட்டு "ஏன்யா எங்கிட்ட சொல்லமாட்டுற ! அப்பா இருக்கிற வரைக்கும் நீ எதுக்கும் வருத்தபட கூடாதடா.".என்று கண்கள் கலங்க, தன்னுடைய தீவாபவளி போனஸ் பணத்தை எல்லாம் எடுத்து பாரதிக்கு செலவுக்கு கொடுத்தான்.பாரதிஅதை கணத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டான்.சென்னையில் combus Interviewல் செலக்ட் ஆகாமல் போன சக தோழர்களுடன் தங்கி வேலை தேட தொடங்கினான்.எல்லா இடத்திலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் ,அரை குரை ஆங்கில பேச்சால் எதிர்பார்த்த வேலையை பெற முடியவில்லை.

ஒரு நாள் வேலையை பற்றியே நினைத்து கொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான்..பின்னால் இருந்து ஏதோ ஒரு பெண் குரல் அவனை கூப்பிடுவது போல் இருந்தது. நல்ல பரீட்சதனமான் முகம். "பாரதி எப்படி இருக்கே...என்றது அந்த குரல்..கிட்ட வந்தவுடன் தான் பாரதியால் அடையாளம் காண முடிந்தது...."ஹே.......இளமதி...நீயா நான் எதிர்பார்க்கவே இல்லை...நான் நலம்..நீ எப்படி இருக்கே.." என்று ஆரம்பித்த உரையாடல் பழைய நினைவுகளில் தொடங்கி இன்றைய கதை வரை தொடர்ந்தது..

இளமதி தான் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பதாக கூறினாள்.அப்படியே பேசிகொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.அவர்களின் பேச்சை அரசியல் மேடை ஒலி பெருக்கியின் சத்தம் இடைமறித்தது.அந்த அரசியல்வாதி தமிழ் வழி கல்வியை பத்தி பேசிகொண்டிருந்தார்."மக்கள் தன் குழந்தைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும்..." அவரின் பேச்சு பாரதியின் விரக்திக்கு தூபம் போட்டது.அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே சென்று "உன் பையன் எங்கடா படிக்கிறான் கான்வென்ட்ல தானே ..உன் பொண்ணை எங்கடா கல்யாண பண்ணி கொடுத்திறக்கிற அமெரிக்காவில்தானே !..ஏண்டா தமிழில படி தமிழல படினு சொல்லி தமிழல படிச்சவனக்கெல்லாம் வேலை கொடுக்காம சாவடிக்கிறீங்க! தமிழ் படித்தவனுக்கெல்லாம் வேலை கிடைத்தா..தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை..தானா வளரும்" எனறு கத்தனும் போல இருந்தது பாரதிக்கு.

-தொடரும்...


.

2 comments:

Divyapriya said...

அருமையா போகுது கதை. தொடருங்க...கதை narration அதிகப்படியா இல்லாம, இடையிடயே வசனங்களும் வந்தா படிக்க இன்னும் சுவாரசியாமாவும் சுலபமாவும் இருக்குங்கறது என்னோட கருத்து...

mvalarpirai said...

நன்றி திவ்யப்ரியா ! அடுத்த பகுதியில் narration குறைக்க முயற்சி பண்றேன் !

Post a Comment