Friday, February 6, 2009

I-T கம்பெனி எதிரே உள்ள டீ கடை

I-T கம்பெனி எதிரே உள்ள டீக்கடை ! ( மீள் பதிவு )

எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்த டீக்கடையில் இன்று மயான அமைதி...டீக்கடை ஊழியர்/உரிமையாளருமான நம்ம அண்ணாச்சி , அந்த டீக்கடை பென்ச்சில் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ்...அது தவிர வேர ஆள் இல்லை ....அப்ப அந்த டீக்கடைக்கு வந்தார் ஒரு பெரியவர்..

பெரியவர் : தம்பி ஒரு டீ போடுப்பா !

அண்ணாச்சி : ரமேஷ் (ஆட்டோ ஓட்டுனர்) உனக்கு !

ரமேஷ் : சரி போடுங்க !

பெரியவர்: ஏம்பா...இந்த அமெரிக்காவில் பிரச்சனைனால ஆடிக்கிட்டுருந்த I-T பசங்களுக்கு எல்லாம் வேலை காலியாமே..எங்க வீட்ல குடித்தனம் இருந்த பசங்க கூட காலி பண்ணிட்டு முன்பணத்தை கேட்றாங்க...என்னமா ஆட்டம் போட்டாங்க்..1 தேதி வாடகை குடுக்கிறோம்னு திமிரல வீட்ல அது சரி இல்லை இது சரி இல்லை அப்படினுபாங்க..ஒரு நாளைக்கு தண்ணி வரலனா கூட ரொம்ப பேசுவாங்கே! வாடகைக்கு பில் கேட்பாங்கே.. EB பில்லுல வழக்கமா நம்ம ஏரியாவில வாங்கிற மாதிரி மீட்டருக்கு 2 ரூபாய் அதிக வாங்கிட்டு இருந்தேன்..இவனுங்க வந்து அதான் வாடகை அதிகமா தர்றோம்லா அப்புறம் எதுக்கு EB பில்லுலனு தினாவெட்ட பேசினாங்கே ..இன்னைக்கு வச்சாம் பாரு அமெரிக்காவலா..

அண்ணாச்சி : ஆமாங்க..இங்க கூட அப்படி தான். டீ ,வடைய கும்பலா சாப்பிட்டு 100 ரூபா நோட்டா எடுத்தி நீட்டி நான் நீனு போட்டி போட்டிகிட்டு அலம்பல் பண்ணுவாங்கே..சில நேரம் சில்லறை கூட வாங்க மாட்டுனுங்க ...சம்பாதிக்கிற திமிரு..நான் ஒரு சின்ன பையனை நல்ல சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருந்தேன்..அதுக்கு போய் குழந்தை தொழிலாளி அது இதுனு சொல்லி அந்த பையனை ஸ்கூல சேர்ந்து விட்டுட்டாங்கே ....அவங்க கேண்டீனல எல்லாம் அதிக விலை விற்கிறானுங்க...அதனால அதிக சம்பளம் கொடுத்து பெரிய ஆளை வைக்கிறாங்க நம்ம அப்படி பண்ண முடியுமா....

ரமேஷ் : ஆமா அண்ணாச்சி..ஆட்டோவிலும் அப்படிதான் சில பேரு மீட்டர போட சொல்லி தினாவட்ட பேசுவானுங்கே...நம்மகிட்ட அதெல்லாம் நடக்குமா..அப்புறம் பொண்ணுங்க ,பசங்களும் வித்யாசம இல்லாம ஆட்டோவில் உட்கார்த்துட்டு இவனுங்க. அடிக்கிற லூட்டி இருக்கே ! இனிமே ஆடுவானுங்களா ..ஹா ஹா

பெரியவர் : ஆமாங்க அன்னைக்கு அப்படித்தான்..ஒரு பையன் சிக்னல்ல வெள்ளை கோட்ட தாண்டி நின்றுக்கான்..நம்ம ராம்சாமி (போக்குவரத்துத்துறை காவலர்..) பிடித்து அபராதம் கட்டு இலலை கவனிச்சிட்டு போ அப்படினுக்கிறாரு.." அதுக்கு அவன் கையூட்டு எல்லாம் குடுக்க முடியாது...அபராதம் கட்டுறேனு 500 ரூபாய கட்டுட்டு பில்லு வாங்கிட்டு போயிருக்கான்..எல்லாம் உட்காத்துகிட்டே சம்பாதிக்கிற திமிறு....

அண்ணாச்சி : எல்லாரும் இப்ப தான் அடங்கிறானுங்க...எதித்தாப்ல உள்ள கம்பெனியிலா கூட நிரைய பேர தூக்கிட்டானுங்கலாம்...
பெரியவர் : சரி வேலை கிடக்கு..இந்த காசு..50 பைசா கம்மியா இருக்கு ..அப்புறம் தாரேன்..இந்த பசங்க வேற வாடகை குடுக்காம அட்வான்சில் கழிக்க சொல்லிட்டாங்களா.. கையில காசுப் புழக்கமே நின்னுடுச்சுப்பா....( அட்வான்சை வைத்து Computer eng படிக்கிற பையன் கல்லூரி கடைசிவருட fees கட்டியாச்சு..இவனுங்களுக்கு வேற அட்வான்சை ரெடி பண்ணணும்..என்று முனகிய வாறே பெரியவர் நகருகிறார்..)


ரமேஷ் : அண்ணாச்சி காசு அப்புறம் தாரேன்..காலைலேர்ந்து ஒரு சவாரியும் வரலை...இனனைக்கு -T கம்பேனி லீவ் இல்ல அதனால்..

அண்ணாச்சி : ம்ம்ம்..

என்று சலித்து கொண்டே ..பெரியவர் கொடுத்த காசை கல்லாவில் போட்டுட்டு (.கல்லாவில் அதுதான் முதல் காசு...) பால் சட்டியை திறந்தார்..எப்பொதும் இந்த நேரத்தில் பால் முக்கால் வாசி விற்று இருக்கும்.ஆனால் இன்னைக்கு அப்படியே இருக்கு...அமைதியாய் இருந்தது அமெரிக்காவின் labour day க்காக விடுமுறை விடப்பட்ட எதிரே இருந்த I-T கம்பெனி வளாகம்.4 comments:

மதன் said...

சிறுகதை முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்ல கருத்தாக்கம்..!

Divyapriya said...

நல்லா சொன்னீங்க! இப்படி பேசுறவங்க அவங்களும் பாதிக்க படறாங்கன்னு தெரியாம தான் பேசிட்டு இருக்காங்க!

Rajmohan said...

good da... short stories.... unakula ipadi oru theramya?

Chandru said...

nice story

Post a Comment