Tuesday, February 17, 2009

தமிழ் வழி ! - பகுதி 1

.

விவசாயமும் ,விவசாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்த ஒரு வளர்ந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாய் உள்ள ஓட்டு வீட்டில் ஆட்டுக் கல்லில் மாவாட்டிக் கொண்டுருந்தால் கஸ்தூரி !
அந்த சமயம் மின்சாரம் துண்டிக்க பட்டிருந்ததால் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அப்போது பள்ளி முடிந்து ,வீட்டிற்கு பாசமாய் "அம்மா" என்று அழைத்த படி உள்ளே நுழைந்தான் பாரதி. "கொல்லை புறத்தில் மாவாட்டிட்டு இருக்கேன்..கை கால் கழுவிட்டு பின் பக்கம் வாயா " என்றாள் கஸ்தூரி.சொன்னபடி வீட்டின் முகப்பில் இருந்த சிமெண்ட் தொட்டில் தண்ணீரில் முகம்,கை கால் கழுவி விட்டு தனது அரையாண்டு தகுதி பட்டியலை எடுத்துகிட்டு அம்மாவிடம் சென்றான் பாரதி.பாரதி வழக்கம் முதல் ரேங்க் வாங்கி இருப்பதை அந்த சிம்ளி வெளிச்சத்தில் சந்தோசமாய் பார்த்தாள் கஸ்தூரி.பிறகு பாரதிக்கு தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்திட்டு அருகில் அமர செய்துவிட்டு , தனது மாவரைக்கும் பணியை செய்து கொண்டே பள்ளியில் நடந்ததை பற்றி பேச ஆரம்பித்தால் , "ஆமா நம்ம கதிர் எத்தனையாவது ரேங்க் அய்யா ? ." ரெண்டாவது ரேங்க் மா.அவன் விட நான் 5 மார்க அதிகம்மா.. அப்புறம் எங்க Class Teacher எங்கள் ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேர சொல்றாருமா..அடுத்த வருசம் 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் எங்களை சேர்க்க சொல்லி அப்பா கிட்ட சொல்ல சொன்னாரு..ENGLISH மீடியத்தில் படித்தால் தான் பின்னாடி வேலை கிடைக்குமாம்.." எனறான் பாரதி. "அப்படியா அப்பா மில்லில் இருந்து வரட்டும் சொல்றேன்..உங்க அத்த மக கூட ENGLISH மீடியத்தில் தான் படிக்கிறா போல..அது பெரிய ஸ்கூல்னு உங்க அத்த சொல்லிட்டு இருந்தா..சரி..தங்கச்சி தூங்கிட்டா..நீனும் போய் பக்கத்தில படுத்துகோடா ! அவளை எழுப்பிடாத! " என்றாள் கஸ்தூரி.

நேரம் கடந்தது.அரிசி ஆலையில் இன்றைய கணக்கு வேலைகளை முடித்து முதலாளி கிட்ட கொடுத்துட்டு வீட்டிற்கு வந்தார் தனபால். கஸ்தூரி பள்ளியில் நடந்ததை சொல்லிகிட்டே தன்பாலுக்கு சாப்பாடு போட்டாள். " ENGLISH மீடியத்தில் சேரணும்னா நிறையா பணம் கட்டனும்டி..ப்ரியாவிக்கு என் தங்கச்சி 2 மாசத்துக்கு ஒரு தரவை பணம் கட்றா..நம்ம வசதிக்கு அதெல்லாம் முடியுமா..ஒரு பொட்ட புள்ள வேற இருக்கு..நம்ம பாரதிதான் நல்லா படிக்கிறானே ..அப்புறம் என்ன..நல்ல படித்தா தமிழ் மீடியம் இருந்தா என்ன ENGLISH மீடியமா இருந்தா என்ன அதெல்லாம் வேலை கிடைக்கும்..நான் நாளைக்கு போய் வாத்தியாரை பார்த்துட்டு விவரத்தை சொல்றேன்..." என்றான் தன்பால்.கஸ்தூரி சரினு ஒரு விதமான சோகத்துடன் சொல்லிட்டு பாத்திரங்கள் எல்லாம் கழுவி வச்சிட்டு மீதி இருந்த பழைய சோற சாப்பிட்டு கதிரின் பக்கத்தில் படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் தன்பால் பாரதியின் பள்ளிக்கு சென்றிருந்தார்.கதிரின் அப்பாவும் வந்திருந்தார். வகுப்பாசிரியர் அவர்களிடம் "பாரதியும்,கதிரும் நல்லா படிக்கிறாங்க..அவங்க ரெண்டு பேரையும் ENGLISH மீடியத்தில் சேருங்க ! அப்பாதான் பின்னாடி நல்ல வேலைக்கு போகலாம்.." .என்றார். கதிரின் அப்பா தன் பிள்ளையை கண்டிப்பா 6 வகுப்புல ENGLISH மீடியத்தில் சேர்ப்பதாக உறுதி அளித்தார்..தனபாலோ தன் நிதி நிலைமையை எடுத்து கூறி , தன்னால் இயலாது என்றும் விளக்கினான். அப்புறம் பாரதியை தன் தங்கச்சி வீட்டு விசேஸத்திற்கு கூட்டி கிட்டு போறாதா சொல்லிட்டு பாரதியை தன் சைக்கிளில் ஏற்றிகிட்டு தன் தங்கச்சி வீடு இருக்கும் பக்கத்து டவுனை நோக்கி பயணிக்க தொடங்கினார்..போகும் வழியில் பிரியா படிக்கும் அந்த பெரிய பள்ளியை காண்பித்தார் பாரதிக்கு.அப்போது ப்ரியாவை அவரது அப்பா தன் ஸ்கூட்டரில் கூட்டி கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தார்.பாரதி அந்த பள்ளியை ஏக்கமாக பார்த்தான்..உள்ளே மாணாக்கர்கள் எல்லாம் டென்னிஸ் , BASKAT Ball-னு வித விதமான விளையாட்டுகளை விளையாடி கொண்டிருந்தனர்..சங்கீத வகுப்பில் இருந்து பிள்ளைகளின் சங்கீதம் கணமாக ஒலித்து கொண்டிருந்தது.பாரதி ப்ரியா வைத்திருந்த டென்னிஸ் பேட்டை ஆர்வமாய் தொட்டு பார்த்து."இது எப்படி விளையாடுவது " என்றான்..இதெல்லாம் விலை அதிகம் நீ எடுத்து உடைத்தடாதடா !..என்று பரியா அதை பிடுங்க ! "மாப்ளா அதை அவ கிட்ட கொடுத்திருங்க அழ போறா..இதெல்லாம் பணக்கார வீட்டு பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு..உங்களுக்கு வேணாம்" என்று நக்கலாக தனக்கே உரிய பாணியில் சொன்னார் பணக்கார ப்ரியாவின் அப்பா. அப்புறம் அப்படியே தனபாலும், ப்ரியாவின் அப்பாவும் பேசிகிட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்தனர்.பாரதி வீடு வரைக்கும் அந்த டென்னிஸ் பேட்டை பார்த்தபடியே வந்தான்..ப்ரியாவோ அதை இறுக்க பிடித்த படி வந்தாள்.
விசேஸம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது "நான் எப்போ அப்பா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவது..சங்கீதம் படிப்பது" என்றான் பாரதி..அதற்கு தனபால்..சிரித்து கொண்டே ! "கண்ணு அப்பா ஏழைடா கண்ணு ...அதனால் அப்பாவால உன்னை படிக்கதான் வைக்க முடியும்..நீ நல்லா படித்து வேலைக்கு போய் அப்புறம் விளையாடு..உன் பிள்ளைகளுக்கு இந்த வசதியெல்லாம் பண்ணி கொடு..." எனறான்.

நாட்கள் நகர்ந்தன. பாரதியும் ,கதிரும் +2 தேர்ச்சி அடைந்தனர். இருவரும் எல்லா படத்திலும் , நுழைவு தேர்வுலும் ஒரே மாதிரியான் மதிப்பெண் பெற்றிருந்தனர்..ஆங்கிலம் தவிர.ஆங்கிலத்தில் கதிர் அதிகம் எடுத்திருந்தான்.

கதிர்ன் அப்பா தன்பாலிடம் கதிரை இஞ்சினியரிங்க் சேர்க்க போவதாகவும், பாரதியையும் அங்கே சேருங்க..வங்கி கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.ஒரு வழியாக பாரதியும்,கதிரும் ஒரே பொறியியல் கல்லூரில் சேர்ந்தனர்..மிகப்பெரிய கல்லூரி, அதிக மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்.கல்லூரியில் முதல் நாள் வகுப்பு ஆர்வத்துடன் கதிரும், கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையுடனும் பாரதியும் வகுப்பிற்குள் அமர்ந்தனர்..தன் வகுப்பில் அழகு அழகான நாகரீகமான் உடைகளில் சக மாணவிகள் நுழையும் போது எல்லா மாணவர்களையும் போல இருவரும் தங்களை பார்த்து சிரித்து கொண்டனர்.அப்போது பாவாடை தாவணியில் அவர்கள் வகுப்பில் வந்தமர்ந்தாள் இளமதி.

-தொடரும்..



2 comments:

சரவண வடிவேல்.வே said...

ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள்.

வெற்றி said...

சரியான ஸ்பீட். அருமையாக உள்ளது. அடுத்த பாகத்தை எதிர்நோக்கி...

Post a Comment