Tuesday, March 3, 2009

கிராமத்து பூங்குயிலோ !

~

கிராமத்து பூங்குயிலோ ! நகர்புறத்து ரெட்டை சடையோ !
மாநகர நவநாகரீக பெண்ணோ !
தாவணியோ ! சுடிதாரோ ! மாடர்ன் டிரஸ்ஸோ !

பத்தாம் வகுப்பு தாண்டியிருப்பாளோ ! இல்லை பெயருக்கு ஒரு பட்டம் வாங்கி இருப்பாளோ !
பழ்கலைகழக முதல் மாணவியோ ! இல்லை என்னை போல் பத்தோடு பதினொன்னோ !

பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ ! இல்லை அதிர்ந்த பேசவே அஞ்சுபவளோ !
அமெரிக்கா போய்வந்தவளோ ! இல்லை அடுத்த தெருவை தாண்டாதவளோ !

களை எடுப்பவளோ! நாத்து நடுபவளோ !
பாடம் சொல்லும் ஆசிரியையோ ! கடமை தவறா அரசு அலுவலரோ !
கண்ணியம் காக்கும் காவல்துறை அதிகாரியோ ! வழக்குகளில் ஜொலிக்கும் வழக்கறிஞறோ !
மருந்து எழுதும் மருத்துவரோ ! மருந்து கொடுக்கும் செவிலியோ !
மென்பொருளாலியோ ! பத்திரிக்கைகாரியோ ! தனியார் துறை ஊழியரோ !
இல்லை வேலைக்கு அனுப்பாத வீட்டின் செல்லப் பொண்ணோ !

வெட்டிகதை பேசும் வீட்டு சோம்பேறியோ ! இல்லை குடும்பம் காக்கும் குலமகளோ !
உலக அறிவு அறிந்தவளோ ! இல்லை உள்ளூர் கதை மட்டும் தெரிந்தவளோ !

சமையல் அறிவாளோ ! இல்லை சமையல் புத்தகம் வாங்கிவருவாளோ !
வீட்டு வேலை பாதியாவது செய்வாளோ ! இல்லை ரெண்டு வேலைக்காரி கேட்பாளோ !
சிக்கன் சாப்பிடுவாளோ இல்லை சுத்த சைவம் என்பாளோ !

நல்ல தமிழ் கதைப்பாளோ ! இல்லை தமிங்கிலிஸ் பேசுவாளோ !
சீரியலுக்கு அடிமையோ ! இல்லை Fashin Tv பார்பவளோ !
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்பாளோ ! இல்லை மானாட மயிலாட மட்டும் தானோ !
NDTV , சன் நியுஸ் கேட்பாளோ ,இல்லை செய்திவாசிக்கிறவ நெக்லஸ் நல்லாயிருக்கு என்பாளோ !

விளையாட்டு வீராங்கணையோ ! இல்லை பல்லாங்குழி நல்லா விளையாடுவேன் என்பாளோ ! !
கிரிக்கெட்டு பார்பாளோ ! இல்லை அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பாளோ !

தமிழ் சினிமா ரசிப்பாளோ ! "மிரட்டல் அடி" ரசிகையோ !
இல்லை டாம் குர்ஸ், ஹிருத்திக் ரோசன் தான் என் hero என்பாளோ !
பாலா, ராதாமோகன் பிடிக்குமோ ! இல்லை ஸ்டிபன் spel burg என்பாளோ !
இளையராஜா ,ரஹ்மான் இசைப்பிரியரோ ! இல்லை britney spears தான் என் favortie என்பாளோ !

முகத்துக்கு பயித்த மாவு, உடம்புக்கு மஞ்சள் என்பாளோ !
இல்லை பியூட்டி பார்லர் போவாளோ !
தங்க நகை அடிக்கடி வேண்டும் என்பாளோ ! இல்லை என் புன்னகை மட்டும் போதும் என்பாளோ !

கம்யூட்டர் அறிந்தவளோ ! இல்லை இதில் சன் tv வரும்மானு கேட்பவளோ !
பிரபல பதிவரோ ! பின்னோட்டம் போடுபவளோ ! இல்லை பதிவென்றால் என்ன என்பாளோ !
புத்தகப் புழுவோ ! இல்லை புத்தகம் வாங்கி ஏன் செலவு செய்கிறீங்க என்பாளோ !
குமுதம்,விகடனோ ! இல்லை femina , outlook படிப்பவளோ !

சிகரட்டு பிடிப்பாளோ ! சீட்டி அடிப்பாளோ !
நானும் குடிகாரன்னு சீன் போட நண்பன் பார்ட்டிக்கு coke குடிக்க நான் செல்ல
எனக்கு ஒரு ஃபுல் வேணும்பாளோ !

மாமியார் மருமகள் சண்டையிலே என்னை அம்பயர் ஆக்கி
அம்மாவுக்கு அவுட் குடுக்க சொல்லுவாளோ !

நான் அவளுக்கு பிடித்த மாதிரி மாறுவேனா ? !
இல்லை அவள் எனக்கு பிடித்த மாதிரி மாறுவாளா ?
இல்லை இருவருக்கு பிடித்ததும் ஒன்றாக இருக்குமோ ? !

அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..
ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !
அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?

என்று நான் கனவுகளில் நனைந்து கொண்டிருக்கும் போது ....கணீரெண்று என்கிருந்தோ ஒலித்தது ஒரு குரல் !

" அதிக கற்பனை வேண்டாம் மகனே ! கொஞ்சம் அடக்கி வாசி ! :) "


~

1 comment:

Divyapriya said...

//அகம், புறம் இதில் ஒன்று அழகாயிருந்தால் அழகி ..
ரெண்டுமே அழகாய் இருந்தால் பேரழகி !
அவள் அழகியோ இல்லை பேரழகியோ ?//

கலக்கல் வரிகள்...:)

Post a Comment