Saturday, September 18, 2010

வெளி நாடு வாழ் மக்கள் புலம்பல்ஷ்- மக்களே why blood?

~

இன்று தினமலர் ஒரு செய்தி வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இல்லை என்ற தோனியில் வந்துள்ளது.செய்தி அரைப்பக்கம் தான். ஆனா புலம்பல்ஸ் ஒக்கா மக்கா 30 பாராவிற்கு மேலே.. மக்களே why blood? :):)

செய்தி:

அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.
தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83216

புலம்பல்ஸ்:

வாசகர் கருத்து (134) . எல்லாத்தையும் போட்டா இந்த பத்தாது..சில குறிப்பட்ட கருத்துகள் கிழே! எனக்கு பிடித்தது கடைசி 2 கருத்து!

AMMIYA - DENHELDER,நெதர்லாந்து

எல்லோரின் கருத்தும் உண்மையே.....பணம், பணம் என்று எத்தனை சொந்தம்,பந்தம் வீடு,என்று எல்லாத்தையும் இழந்து தான் இங்கு இருக்கிறோம். நமது ஊரில்,நல்லது, கெட்டது என்னும் போது, சொந்தங்கள், பந்தங்கள் ஒன்று கூடி ஊரோ, வீடோ களை கட்டும். ஆனால், இங்கே அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் வெளி வராத ஜனங்கள்,அதைவிட சொந்தங்கள் கூட,வேலையில் லீவு கிடைக்கவில்லை என்று ஒரு நொண்டிச்சாக்கு.கண்ட சுகம் ம்ம்ம்ம்ம்ம் இல்லவே இல்லை....

சுரேஷ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
IT துறையில் மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பேராசைக்காக அழித்து கொள்கிறார்கள்.. இந்தியாவில் மாதம் 75 ஆயிரம் ருபாய் 4 வருட பணியில் கிடைக்கிறது.. இதை வைத்துக்குகொண்டு மிகவும் நல்ல வாழ்வு வாழலாம்.. ஆனால் பேராசைக்காக பெற்ற தாய் தந்தையரை விட்டு விட்டு சொந்தங்களை விட்டு விட்டு ஒரு அனாதையை போல வெள்ளைகாரனுக்கு ஜால்ரா போட்டு விட்டு ஒரு போலி கவுரவத்துடன் வாழுகிறோம்.. இது போலி யான வாழ்கை என தெரிய வரும் போது பாதி கிழவனாகி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் வெளிநாட்டிலேயே தங்கி விட்டு இது போல புலம்புகிறோம்.. இளைஞகர்களே சிந்தித்து பாருங்கள்.. 15 வருடம் இந்தியாவில் கஷ்ட பட்டு வாங்கும் வீட்டில் இருக்கும் சுகம், 5 வருடம் அனைத்தையும் இழந்து வாங்கும் வீட்டில் கிடைக்காது... "கேட்டது எல்லாம் கிடைத்தது.. எல்லாம் உடனுக்குடன் தான் இப்போது.. ஆனால் எதைக்கொண்டு நிரப்புவது அம்மா இல்லாத வீட்டை?" குடும்ப சூழல் காரணமாக 1 வருடம் இங்கு வந்த நான் பேராசை காரணமாக தாயை இழந்து விட்டு தனிமையில் வாடி இப்போது துணைவி குழந்தைகளை பிரிந்து இன்னும் தனிமையில் தான் ஏங்கி கொண்டு இருக்கிறேன்.. போதும் என்ற மனமே நிம்மதி தரும்.....

zain - JEDDAH,இந்தியா
நான் சௌதியில் 18 வருட வாழ்க்கையை இளமையை தொலைத்து விட்டேன். அது திரும்ப கிடைக்குமா? நமக்குப்பின் நமது வருங்கால சந்ததிகளாவது நம் சொந்த நாட்டில் வேலைகள் கிடைக்கப்பெற்று சந்தோசமாக வாழட்டும். எல்லோரும் சொல்லக்கேட்டிருக்கிறேன், கூழோ கஞ்சோ குடித்தாலும் நாட்டில் மனைவி மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும். இது என்ன வாழ்க்கை என நொந்துகொள்ளும் மக்கள் நாடு திரும்ப நினைக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைகள் அதிகமாகி யோசிக்க வைத்து விடும் என்பதும் உண்மை. மேலும் நண்பர் கருப்பையா சொல்வதும மற்ற சகோதர்கள் சொல்வதும் ஆய்வறிக்கை சொல்வதும் உண்மையே...

பெயர் எதற்கு - bangalore,இந்தியா
இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மானம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் போவதற்கு பொருளாதார காரணங்கள். பெண்கள் போவதற்கு பாரம்பரிய பொறுப்புக்களை தவிர்த்து மனம் போல் வாழ. இஷ்டம் போல் எழுந்து இஷ்டம் போல் வாழ்ந்து யாரையும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ. என்றோ ஒரு நாள் பிறந்த மண்ணிற்கு வந்து நான் இவ்வளவு செல்வாக்குடன் இருக்கின்றேன் என்று காட்டிக்கொண்டு மீதி நாட்களில் மனகுமுறலுடனும் சரியான உணவில்லாமலும் அயல் நாட்டில் அன்றாடும் அவல வாழ்க்கை....

mannuchella - அரபுநாடு,இந்தியா
முற்றிலும் உண்மை. எனக்கு திருமணமான 3 வது மாதத்தில் நான் வெளிநாட்டுக்கு வந்து விட்டேன். பிறகு இங்கு தான் வாழ்க்கை.இப்பொழுது ஒரு குழந்தையும் இருக்கிறாள். அவளுக்கு அம்மா, அப்பா தவிர வேறு யாரையும் தெரியாது. விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை. பண்டிகைகள் சுவடே தெரியாத வண்ணம் உள்ளது. இனி வரும் எங்களது சந்ததியினர் தீபாவளி, பொங்கல் போன்ற எதையும் தெரியாமலே வாழ்கின்றனர். தாய்நாடு தாய்நாடு தான்...

மனசாட்சி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
நூற்றுக்கு நூறு உண்மை வெளிநாட்டில் சம்பாதிக்க வந்த யாரும் மன நிம்மதியுடன் இல்லை அனைவரும் எதோ ஒரு வகையில் நிம்மதியின்றி தவிப்பது ஊரறிந்த ரகசியம். விதியை நொந்துக்கொண்டு தான் அனைவரும் வாழ்கின்றனர்....

raaj - chennai,இந்தியா
வெறும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மட்டுமா ? வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று சொல்லிவிட முடியாது. பொறுப்புகளை நிறைவேற்ற தன கனவுகனை விற்கும் அவர்களுக்காக பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...

தக்பீர் அலி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
இருப்பவனுக்கோ தாய் நாட்டுக்கு வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை இதோ அயல் தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதல்!! எங்கள் உடம்பில் பூசிக்கொள்ளும் வாசனை திரவியத்தில் வேண்டுமானால் வாசனைகள் இருக்கலாம் ஆனால் வாழ்கையில்...??? ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது எங்கள் குடும்ப நட்பு. எவ்வளவு சம்பாதித்தும் என்ன எங்கள் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ. அன்புடன் அரபு பாலைவன தேசத்து ஏழை!!...

suganya - Leeds,யுனைடெட் கிங்டம்
அன்பான குடும்பம் , அரவணைக்க அம்மா இருந்தும் வெளிநாடு சென்று படிக்க ஆசை பட்டு இன்று அவதி படுகிறேன்... எனக்கே தெரியல என்னால இனிமேல் இந்தியா மண்ணுக்கு திரும்ப முடியுமான்னு..ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதிடுவேன்..எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் என் தாய் நாட்டுக்கு இணையாகுமா? வருஷத்துல ஒரு தடவ அவங்கள பார்த்துட்டு திரும்பும் போது என் அம்மா கூடவே இருக்க முடியாதான்னு தோணும்...அந்த வலி சாவ விட கொடுமையானது....எங்களுக்கு இந்தியால சரியான வேலை கெடைச்சா நாங்க என் இப்படி இருக்க போறோம்...கடவுள வேண்டுறேன் இனிமேல் வரபோற என் குழந்தைங்கலாவது இந்தியாவ விட்டு வெளிநாட்டுக்கு அனுப்புற நிலைமை வரக்கூடாது......

ஜெய் சங்கு - rak,ஐக்கிய அரபு நாடுகள்
ஆம்... மறந்து போனது என்னவோ சுவையான உணவு...சுதந்திர உணர்வு....அலாரம் (விழிப்பொலி) இல்லாத தூக்கம்...பற்று பாசம் பந்தமுள்ள வாழ்க்கை...தினமும் தொலைபேசியில் தன் அர்த்தமுள்ள வாழ்க்கையை பணத்திற்காக வயதையும் சேர்த்து தொலைத்து, தன் வீட்டில் சந்தோஷ ஒளி ஏற்றுவதற்காக தன் வாழ்க்கையை துறக்கும் மெழுகுவர்த்தியாய் இங்கே...!! தான் பெற்ற குழந்தைகளை பல வருடங்களாக பார்க்காதோர் பலரும் உண்டு, ஏன் ஒரு சிலர் கர்ப்பத்தொடு இருக்கும் மனைவியை விட்டு பிரிந்து பலவருடங்களாக இருக்கின்றனர், சிலர் தன் பெற்றோர் இறந்த செய்தியை காதால் மட்டும் கேட்டு திரும்ப முடியாதோரும் இருக்கின்றனர்...என்னதான் கைநிறைய பணம் சம்பாதித்தாலும் நம் நாட்டில் (வீட்டில்) கிடைக்கும் சந்தோசமும் அனுபவமும் தொலைத்த வயதும் திரும்ப கிடைக்காது... வாழ்க்கை வாழ்வதற்கே..!! பணத்திற்காக அல்ல...!! விரைவில் திரும்புவேன் என் தாய்மண் முகம் காண... நண்றி...!!...

kritcha - singapore,இந்தியா
உண்மைதான். நம் அதிகம் சம்பாதிக்கிறோம் ஆனால் அதைவிட ரொம்ப சந்தோசங்களை இழக்கிறோம் ....
தியாகு - லண்டன்,யுனைடெட் கிங்டம்
உண்மை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் நாட்டை விட்டு இங்கு நாங்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதில் நாங்கள் பலவற்றை இழந்து தான் பணம் சம்பதிக்கவேண்டி இருக்கிறது. குடும்பம், உறவினர், நண்பர்கள், இதர்க்கும் மேல் நாங்கள் இழப்பது எங்கள் மன நிம்மதி....

அமிர்த raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
உண்மை உண்மை நாங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது .பணம் சம்பாதித்தாலும் நிம்மதி என்பது இல்லவே இல்லை ,பெரும்பாலான ஆட்கள் மன வியாதி , தூக்கம் இன்மை , எப்போது நம் நாட்டுக்கு திரும்பி போவோம் என்று தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்...

சாம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
Really it is True, Money is the route devil. due to the money many of us struggling lot. Real Peace and Joy when we trust God for all things with our families. Even little earnings also can give more Joy. When i was earning 600 rupees per month that time i was very happy man in the world. now earning more but more commitments keep on rising for my families and relatives sides. I am happily suffering to lift family and relatives. God want to change our country Govt to ruling the rights. We all go back to our country, this will give more strength to our family and our country. let all pray for our political parties want to change to Do all fear of God. If One earth quake what is the state of all, Let us fear God and Do right way....

சாமி - திருப்பூர்,இந்தியா
எல்லாம் சரிதான், ஆனால் திறமைக்கும், பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுதானே. பணம் தேவைதான் எனில் அப்புறம் எதற்கு இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றும் சிலரும் மட்டும் பணத்தை சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏழைகளும், நடுதரவாசிகளும் வளர ஏதாவது செய்தார்களா எனில் உங்களுக்கே தெரியும். சொல்ல வேண்டியதில்லை. இலவசம் ஏந்தி நிற்கும் அவலநிலை. அனைவருக்கும் சொந்த ஊரு பிடிக்கும்தான். இல்லை என்று மறுக்க யாருமில்லை. அனால் திருந்தாத மேற்கண்டவர்கள் இருக்கும்வரை மகிழ்ச்சி இன்றி பணத்துடன் வாழ்தலே மேல்....

மீராஷா - london,யுனைடெட் கிங்டம்
பாருங்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் புலம்பலை இளைய சமுதாயமேய்.இனி வரும் காலங்களில் நமது நாட்டிலை இருந்து குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதோ என்னுடைய புலம்பல் விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்போது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் செண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் இப்படி சுவையான கெமிகளை இல்லாத சாப்படை சாப்பிட்டு விட்டு .சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு ரொட்டியும் குர்மாஉம்.நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதை கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போகவிண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை...

அருண் bashkar - qatar,இந்தியா
குடும்ப கடமைகளும்,சுமைகளும் , முன்னேற்றமும் எங்களை இந்த பிறவியில் தியாகியாக வாழ செய்கிறது ....

சரண் - ஹாங்காங்,சீனா
திரைகடல் ஓடி திரவியம் தேடினேன் , தேடியது கிடைத்தது, ஏதோ தொலைந்ததாக உள் மனம் அழுதது , மனைவியின் மடித்தூக்கம் , பெற்ற மழலையின் பேரின்ப பரிசம் , அம்மாவின் அரைத்த வெந்ததைய குழம்பு, பணமென்னும் ஓவியத்தை வாங்க , இளமையெனும் கண்களை விற்கிறேன் .....

பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
ஆனாலும் இன்னமும் வெளிநாட்டு வேலைக்கு ஏங்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்றான், வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்றான், என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தானேவேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தபின்புதானே நிம்மதியைப் பற்றி நினைக்கிறார்கள். வயிற்றுப் பாட்டிற்கே வழியில்லாதவன் கடல் தாண்டுவதைப் பற்றி தயங்கமாட்டானே. ஓடவேண்டிய வயதில் ஓடவேண்டும், தேவைக்கு சம்பாதித்தபின் ஊர் வந்து சேர்வது தான் உத்தமம். அதிகம் சம்பாதிக்க ஆசைப்படும்போதுதான் அல்லலே ஆரம்பிக்கிறது. இன்றைய நிலையில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் நம் மண்ணுக்கே உரிய பழமையான கலாசாரம், அன்பு, ஆன்மிகம், சித்தாந்தம், மனித நேயம் இவைகள் தான் இவ்வுலகத்தை தழைக்க வைக்கும். நம்ம ஊர் நம்ம ஊர்தான்....

அந்தோ - பாண்டிச்சேரி,இந்தியா
என்ன வாழ்க்கை இது, ஒவ்வரு நாளும் எப்படி முடியும் என்று தான் எதிர்பார்த்துக்கொண்டு இருகிறேன், சொந்தகளை விட்டு காசுக்காக இந்த மண்ணில் அடிமை வாழ்க்கை. குடும்பத்தோடு சீக்கிரம் ஒன்றாக இருக்க இப்போ முடிவு செய்து விட்டேன். நான் இந்த நாட்டில் பதினைந்து வருடங்கள் என் வாழ்கையை தொலைத்துவிட்டேன்..... இனி செத்தாலும் என் மண்ணில் தான் அது போக வேண்டும். பணத்தை தவிர சுவாசிப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. சண்டை, கஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிக்கூடம் போகும் பொது கூட இப்படி வாழ்கை வாழ்ததில்லை, இப்போ தினமும் பள்ளிக்(அடிமை)கூடம் போவது போல் உள்ளது. மனம் விட்டு சிரித்து பலா நாள் ஆகிவிட்டது....

கோபிநாத் - london,யுனைடெட் கிங்டம்
வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கிறது. ஆனால், திரவியம் தேடி தொலைந்து போனவர்களாக நாம் இன்று எங்கோ நடைபினமாய், போலியாய் சிரித்து, டெலிபோனில் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவன், கோபிநாதன். சொந்த மண்ணை தேடும் ஆதவன்....
வெளிநாட்டுக்கு நான் வந்ததால் ஓட்டுவீடு மாடிவீடு ஆனது சைக்கிள் பைக், காரக மாறியது கவிரிங் நகை பவுன் நகையாக ஆனது இப்படி எல்லாமும் வளர்பிறைதான் ஒன்றை(என்னை) தவிர இழந்த என் இளமை , லட்சியம் , ஆசை, நிம்மதி , பாசம் போன்றவைதான் தேய்பிறை. உள்ள குமுறலுடன் நித்தமும் தனிமை ஐ நண்பனாக கொண்ட தன்மானமுள்ள

ப. மாதவன் - சென்னை,இந்தியா
நாம் எதற்காக சம்பாதிக்கிரோம் என்பதை மனிதன் ஒரு நிமிடம் நினைத்தால் அவன் இந்த நிலைக்கு வரமாட்டான். அத்தியாவசியத்திர்காக ஒருவன் சம்பாதித்தால் அதை நல்ல முறையில் அவன் அனுபவிப்பான். அடுத்தக்வர்களுக்காக சம்பாதித்தால் பெருமையாக இருப்பாக இருப்பான். போட்டிக்காக சம்பாதிப்பவன் நிம்மதியாக இருக்க மாட்டன். அன்பினால உண்டாகும் இன்ப நிலை. அது அணைந்திடாத தீபமாகும் பாச வலை. எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே. ஆகையால் எவள்ளவு சம்பாதித்தாலும் குடும்போத்தோடு இருந்தால் தான் அந்த இன்பம் காண முடியும். ப. மாதவன்...

அபுதாகிர் - சவுதிஅரேபியா,இந்தியா
அன்பான வீடு நட்புக்காக எதையும் செய்யும் தோழி அழகான என் குட்டி ராஜாக்களும் & என் செல்ல தேவாதைகளும் பணம் என்ற ஒரு செல்லா காசுக்காக இவை எல்லாவற்றயும் பிரிந்து நீத்தமும் இங்கே நித்திரை இல் கூட அழுது கொண்டு இருகிறோம், காலமெல்லாம்,...

தி Greatest - chennai,இந்தியா

கட்டிய மனைவி ,குழந்தைகள்,தாய்,தந்தை ,மற்றும்உடன் பிறந்தவர்கள்,உறவினர்கள்,....நம் ...தாய்மொழி,தாய்நாடு இவற்றை பிரிந்து வாழ்ந்தால் நிம்மதி ஏது.''நூறுமைல் சென்று நூறு ரூபாய் சம்பாதிப்பதைவிட ...பத்துமயில் சென்று பத்து ரூபாய் சம்பாத்தியம் சந்தோசம் கொடுக்கும்....

barathan - லண்டன்,யுனைடெட் கிங்டம்

திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு; தேடுகிறோம்! வசதி வந்தாலும் மனம் என்னவோ "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்ற நினைப்பை அடிக்கடித் தூண்டுகிறது....

3 comments:

துளசி கோபால் said...

//மீராஷா - london,யுனைடெட் கிங்டம் //

இவர் எழுதுனதைக் கவனியுங்கள்!!!!

அட ராமா!!! காசு சம்பாதிக்க எப்போ வேலைக்குப் போவாராம்?

nila said...

இப்போதுதான் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன்.. நானும் வெளிநாட்டில் பி.எச்.டி படிக்கும் மாணவி தான். இந்த பதிவிற்கு கட்டாயம் கருத்து எழுதவேண்டும் என்று நினைத்தேன். வெளிநாட்டில் வாழ்வோர் பலவற்றை தொலைத்துவிட்டோம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இதில் மேற்கூறியவர்கள் யாரும் நாட்டிற்கு திரும்பாதது ஏன்?? காரணம் இங்கிருக்கும் சவுகரிய வாழ்க்கை முறை.
என்னைப்போல் படிக்க வருபவர்கள் நம் நாட்டில் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் கிளம்பி வருகிறோம். அதற்காக நாட்டை விட்டு இங்கேயே தங்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. என்னைப் போல் ஒரு சிலர், பட்டம் வாங்கியதும் மூட்டை முடிசுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பிக்கொன்டுதான் இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களில் வேளையில் இருப்போர் நிலைமை தான் கவலைக்கிடம். வீட்டில் இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளும் அதைப் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயமும் தான் இதற்க்கு காரணம்.
"பெயர் எதற்கு - bangalore,இந்தியா
இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மானம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆண்கள் போவதற்கு பொருளாதார காரணங்கள். பெண்கள் போவதற்கு பாரம்பரிய பொறுப்புக்களை தவிர்த்து மனம் போல் வாழ. இஷ்டம் போல் எழுந்து இஷ்டம் போல் வாழ்ந்து யாரையும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ."

பெண்கள் போவது மனம்போல் வாழ???? என்ன ஒரு அபாண்டமான பழி.. ஏதோ ஆண்களெல்லாம் குடும்பத்தை தலையில் தாங்குவது போலவும் பெண்களெல்லாம் குடும்பப் பேரைக் கெடுப்பது போலவும்... இஷ்டம் போல எழுந்து இஷ்டம் போல வாழ்ந்து.. சை.. என்ன ஒரு கீழ்த்தரமான கருத்து
இங்கு வரும் பெண்கள் இத்தனை சுதந்திரம் இருப்பினும் இங்கிருக்கும் வெளிநாட்டினற்குநம் பாரம்பரியத்தைப் பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அது போல் வாழவும் செய்கிறார்கள்..

இரவின் புன்னகை said...

எல்லாம் காசு படுத்தும் பாடு!!! நல்ல பதிவு! வாழ்த்துகள்...

Post a Comment