Wednesday, September 1, 2010

தோல்வி நிலை & மனிதா மனிதா

~

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமையை இழந்தோம் உடைமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
விடியலுக்கில்லை தூரம் இருந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

-ஆபாவாணன்

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா!
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!

ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபவனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்

-வைரமுத்து

~

No comments:

Post a Comment