Tuesday, September 7, 2010

நம்பிக்கை ஊன்றி நட! -- வைரமுத்து !

~

ஏ !
எந்திர மனிதா இன்று முதல்
சிர்க்கப் பழகு !
கண்ணீர் சுண்டிக் கடலில் எறி !

எரிமலைக் குழம்பா இரும்பு காய்ச்சு!
பூகம்பமா பூச்செடிகளை மாற்றி நடு !

தாடி சோகம் இரண்டையும்
ஒரே கத்தியால் மழித்துவிடு !

பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா
தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா?
தேநீர் குடி !

ஓசோன் கூரையில் ஓட்டையா?
குடை பிடி !

எந்தக் காலத்தில் பூமி தலைசுற்றாமல் சுற்றியது !
பல் முளைக்கையில் ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும்
விலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்

பூமி பொதுச்சொத்து உன் பங்கு தேடி உடனே எடு !
ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு !
ஒவ்வொரு விடியலிலும் உன் கிரணம் உண்டு
வானம் போலவே வாழ்க்கையும் முடிவதில்லை

முதற்காதல் முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி இல்லையா என்ன?
பூமியை நோக்கி அழிவுக்கோளா?
இன்னொரு கிரகம் இல்லையா என்ன ?

சிரி
நம்பிக்கை ஊன்றி நட!

ஆனால் மனிதா அவரசப்படாதே
மண்ணின் பொறுமைதான் மலை
கரியின் பொறுமைதான் வைரம்
தாயின் பொறுமைதான் நீ
நான் காண்டுப் பொறுமைதான் பிப்ரவரிடின் ஒரு நாள் உயர்வு!

ஏ எந்திர மனிதா இன்று முதல் சிரிக்கப் பழகு
இந்த பூமி சிரிப்பவர் சொர்க்கம் அழுபவர் கல்லறை
உன் உதடு கல்லறையா ? சொர்க்கமா?

~

1 comment:

Post a Comment