Saturday, September 11, 2010

தமிழ் வழி வலியா?

~

அண்ணா பல்கலைகழக மாணவி ஆங்கிலம் சரியாக பேசவராததாலும், அதனால் தான் கிண்டலுக்கு உள்ளாவதை தாங்க முடியாததாலும் தற்கொலை செய்து நிகண்ட நிகழ்வை அனைவரும் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்!
இது முதல் நிகழ்வல்ல ! இதே மாதிரி ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையால் மனதளவில் எல்லா தமிழ் வழி பொறியியல் மாணவர்களும் பாதிக்கபடுவது உண்மை ! மற்ற உயர் படிப்பிலும் இந்த தாக்கம் இருக்கிறது.

எனக்கும் இருந்தது..சொல்லப்போனால் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கிறது. உயர் படிப்பு வரை நல்லா படித்துவிட்டு (இந்த மாணவி 1100 க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்) முதல் தரவரிசையில் இருந்து விட்டு, ஆங்கில அறிவு குறைவின் காரணமாக , கல்லூரியில் போய் பாடத்தில் தோல்வி அடையும் போது இருக்கிற வலி அதை அனுவபவித்தவர்களுக்கே தெரியும்.. தமிழ் வழி மாணவர்களை ஆங்கில பேச்சு ஆணி கொண்டு அறையப்படுகிறார்கள்.அவர்களின் தன்னம்பிக்கை ஆங்கில சுத்தி கொண்டு நசுக்கப்படுகிறது. There is no big pain than feeling incompetent.இந்த தாழ்வு மனப்பான்மையை வெல்பவர்கள் பல இருந்தாலும் எதோ இரு இடத்தில் அது வெளிப்படுவது தவிர்க்க முடியாது. இந்த மாணவி போல தாங்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்பவர்களும் உண்டு ! என்னாதான் முக்கினாலும் எங்களுக்கு DAVக்களின் ஆங்கில அறிவுடன் போட்டியிடுவது கடினமாகத்தான் இருக்கிறது.

இந்த தாக்கம் அலுவகத்திலும் தொடர்கிறது. தமிழை ஒரு மொழிப்பாடமாக படிப்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.கட்டாயம் படிக்கனும். ஆனால் தமிழ் வழி கல்வியை சாதாரண , நடுத்தர மக்கள் , வேலையை எதிர்பார்த்து படிக்கும் மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்க மாட்டேன். பணக்காரர்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர்கள் default-a ஆங்கிலம் அல்லது International பள்ளியில் தான் படிக்க வைப்பார்கள் . தமில் வழியில் தான் படிக்க வைக்கனும் என்று சொல்பவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்பவர்களாகவே நான் கருதுகிறேன்.உதாரணம் மருத்துவர் ராமதாசு.

இது ஒரு புறம் இருக்கட்டும், ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி. ஒரு உண்மை என்ன வென்றால் ஆங்கில அறிவு என்பது ஒரு மொழி அறிவு அவ்வளவுதான். அது இல்லாதாதல் நாம் ஒன்றும் அறிவாளி இல்லை என்றாகிவிடாது என்பதை முதலில் நாம் நம்பணும். தெரிந்தோ தெரியாமலே ஆங்கிலம் இன்றைய சூழ் நிலையில் பொறியியல் மற்றும் தகவல் தொழி நுட்பம் சார்ந்த வேலைகளில் கட்டாயம் ஆகிவிட்டது. அதை நாம் கற்றுதான் ஆக வேண்டும். நம் ஆங்கில அறிவை கிண்டல் செய்யும் போது , அதை பாதிப்பாக நினைக்காமல் சரிசெய்ய நாம் முயலவேண்டும். காலப்போக்கில் அது தானகவே வந்துவிடும். இப்ப தமிழை , தமிழ் தெரியாத ஒருத்தர் கொஞ்சம் இலக்கண பிழையாக பேசும் போது நாம் புன்னகைப்பதில்லையா..அந்த மாதிரி நினைக்கனும். உண்மையில் வெள்ளைகாரர்கள் நாம் ஆங்கில பேச்சை கிண்டல் செய்வதில்லை, மாறாக நம்மை புரிந்து கொண்டு நாம் புரியும் படி மெதுவாக , சுலபமான ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்.ஆனால் நம் இந்தியாவில் தான் இதற்கு நேர்மாறாக என்னமோ ஆங்கிலத்தே இவன் தான் கண்டு பிடித்த மாதிரியும் , சேக்ஸ்பியருக்கு அப்புறம் இவன் தான் மாதிரியும் சில் பேர் பீட்டர் விடுகிறார்கள். சில பேர் இருக்கான், அவனுக்கு சரியா பேச வராட்டியும் , அடுத்த முயற்சியை கிண்டல் பண்ணுபவான் ( நான் கொஞ்ச நாள் அப்படிதான் பண்ணிட்டு இருந்தேன், எனக்கு அது நேரும் வரை ) .
இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்.

தோழர்களே , உயிர் உன்னதமானது , அதை போயும் போயும் மயிருக்காகவா ( ஆங்கில அறிவு) இழப்பது ? :)

~

No comments:

Post a Comment