~
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !
அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !
அட தோழா ரொம்ப நாளா
பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !
எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!
அட தோழா ரொம்ப நாளா
பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !
~
Friday, June 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான கருத்து உடைய பாடல். சீமனால் பாடப்பட்டது மிகப் பொருத்தமானது.
தல.. எங்க ரொம்ப நாளா காணோம்..? :)
வருகைக்கு நன்றி மக்களே !
மதன் நாங்க இங்கதான் இருக்கோம்..நீங்க தான் busy ஆயிட்டீங்க ! கடை பக்கட்டு வரதில்லை ! :)
என்னங்க பண்றது.. நம்ம தான் மென்பொருள் வித்தகர்களாச்சே.. இடையில எழுத்துப் பணிக்கு நேரம் கொஞ்சம் சிரமப்பட்டாதான் கிடைக்குது..! :)
Post a Comment