Tuesday, March 24, 2009

பாட்டி வடை சுட்ட கதை !

~

பாட்டி வடை சுட்ட கதை ! - நன்றி விவேக் !

புழுதி படிந்த ஒரு கிராமத்தில் ....

ஒரு ஜவ்வன கிழவி
வடை சுட்டு விற்று வந்தாள் !
காசு பெற்று வந்தாள் ...

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல
அங்கே வந்தது ஒரு கார்மேக காகம்
பாட்டிக்கு மட்டும் கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளின் கல்லறை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது !

பாட்டி பாராத சமயம் ....பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேக காகம் சந்தன மின்னல் போல பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது..

விதைக்குள் வந்த விருட்சம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருசம் ..
அதன் சுந்தர கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொர்ப்பன காகம் !

பூவுக்குள் பூகம்பம் போல் ..புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி நர்த்தக நரி ! நாலடியார் நரி !
நீதி அறிந்து போதி சொல்லும் போதிமரத்து சாதி !

கார்மேகக் காகம் வைந்திருந்த வடையை
அந்த நரி பார்த்தது ! உடல் வேர்த்தது !
அந்த ராஜ வடையை அபகரிக்க
அதன் நந்தனவன மூளை ஒரு நாச வேலை செய்தது !
நரி அதுவாக சென்றது
காகம் இருந்த மரத்தருகே மெதுவாக சென்றது !

ஆனால் அந்த கார்மேக காகமோ
இச்சக அழகியாய் எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கடியே வைத்து
அதன் கூர்மையை சோதித்து கொண்டிருந்தது !

நரி பகர்ந்தது ! ஏய் உலக அழகியே ! உள்ளூர் மோனாலிசாவே !
நகராட்சி பூங்காவில் நுழைந்த நமீதாவே !
என் அந்தபுறத்தில் அத்து மீறி நுழைந்த அசினே !
தீவுத்திடலுக்குள் திடும்மென நுழைந்த திரிசாவே !
நீ பார்க்கவே எவ்வளவு அழகு !
நீ மட்டும் உன் கந்தவர் குரலினால் ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும் சர்ப்பம் கூட கர்ப்பம் தருக்கும் !
ஏன் நீருக்கும் வேர்க்கும் என்றது !

காகம் பாடும் வடை கீழே விழும் என்று நரி எதிர்பார்த்தது !

இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது !
பூகோளம் புரள்கிறது ! தமிழ் தடுமாறுகிறது
நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி பாய்ந்தது !

ஏனென்றால் காகம் என்ன பதில் அளித்தது தெரியுமா !
ஏய் நர்த்தக நரியே ! நான் பாட மாட்டேன்
ஏனென்றால் நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் !
ஆகவே மெட்டில்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

நரி ஏமாந்தது !

~

No comments:

Post a Comment