Monday, January 24, 2011

அம்மா மேல் கோவம் !

~

உங்களை என்றைழைப்பதை விட உன்னை என்றழைப்பது
மரியாதைக்குறைவா என்ன ? இல்லை அதீத உரிமை !
என்னை நீ வளர்த்தவிதம் சரியில்லை அம்மா இன்று நான் கோவிக்கிறேன்
ஒரு வேளையாவது நீ என்னை பசிக்க விட்டிருந்தால் பசி பொறுக்கும் பழக்கம் வந்திருக்கும்
உணவில் சுவை குறைத்திருந்தால் என் நாக்கு இங்கு உள்ள உணவுக்கு பழக்கப்பட்டிருக்கும்
பழைய சோற்றை கண்ணிலாவது காட்டியிருக்கலாம் ..
இங்கே முந்தா நாள் வைத்த உணவை சாப்பிடும் போது
வரும் வயித்தபிரட்டும் உணர்வு இல்லாமல் இருந்திருக்கும்
என்னை நீ வீட்டு வேலைகளுக்கு உதவிக்காவது அழைத்திருக்க வேண்டும்
பாத்திரம் கழுவவாது நான் பழகி இருப்பேன்

8 மணிக்கு எழுப்பிவிட்டு " காப்பிய குடிச்சுட்டு தூங்கடானு "
நீ சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இங்கே காப்பி வேண்டாம்
அன்பாய் கூட எழுப்பாமல் அலறுகிறது இந்த அலாரம்.
நீ செல்லம் என்றாய் இங்கே எல்லாம் என்னை சோம்பேறி என்கிறார்கள்.

எத்தனை குறைகள் இருந்தாலும் நீ கற்று தந்த கபடமில்லா அன்பும்,
கண்டிப்பான ஒழுக்கமும்,வைராக்கியமும் தானம்மா
என்னை இன்றும் உயர்த்துகிறது.. Thanks ..I love you ma !

சென்னையில் இருக்கும்போது உணர்ந்தது.. முதல் onsite(2008)-ல் வெட்டியாய் இருக்கும்போது எழுதியது !

2 comments:

நட்புடன் ஜமால் said...

I too love you அம்மா ...

nila said...

nice one... i miss my mom too... we r 8,600 km away frm each other :(

Post a Comment