Thursday, August 26, 2010

அனுபவம் என்பதே நான் தான் - கண்ணதாசன்

~


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனபடுவது யாதெனக் கேட்டேன்
அளித்து பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை எனபது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வருமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக்கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
"அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்?" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்று அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றார்

~

1 comment:

Unknown said...

Thanks for Sharing.

Post a Comment