Saturday, June 27, 2009

தேசிய அடையாள அட்டை, ஒரே கல்வி முறை , நலத்திட்டங்கள் மற்றும் ராமதாஸ் !

~

இந்தியா முழுவதும் ஒரே சீரான கல்விமுறை ! - வரவேற்போம் !

கபில் சிபில் ஒரு முன்னோடியான யோசனையை தெரிவித்திருக்கிறார்.. இந்தியா முழுவதுக்கும் ஒரே கல்வி முறை . இது கொஞ்சம் சிரமமான ஆனால் வரவேற்கதக்க யோசனை ...
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொருவிதமான கல்வி முறை, வெவ்வேறு பாடப்பகுதிகளில்.ஒரு சில மாநிலங்களில் +2..இன்னும் சில வற்றில் PUC.. அப்புறம் மெட்ரிக், CBSC..ஏன் இவ்வளவு வேறுபாடுகள் ? கல்வி முறை அனைவருக்கும் சமமாகட்டும், மொழியையும், அவர்கள் வசிக்கும் மாநிலம் சார்ந்த வரலாறு போன்ற பாடபகுதிகளை மட்டும் மாநிலத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய மாநில அமைப்பிற்கு அதிகாரம் கொடுக்கலாம்..மற்றபடி அனைத்தையும் சமமாக்குவோம். இதை தமிழ் கட்டாயம் சட்டத்தை எப்படி முதல் வகுப்பிலிருந்து ஆரம்பித்து ஆண்டுக்கு ஒவ்வொரு வகுப்பாக incetementala implement பண்ணாறாங்களோ , அதே மாதிரி பண்ணிணா நடைமுறை சிக்கல்களை தடுக்கலாம்..இப்பவே சில பிற்போக்குவாதிகள் இதை எதிர்க்க ஆரம்பித்து விட்டன். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !


இந்திய அடையாள் அட்டை

இந்தியா முழுவது தேசிய அடையாள் அட்டை ( Smart Card ) அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒரு நிறுவனத்தை அமைத்துள்ளது..இதற்கு புகழ் பெற்ற இன்போசிஃஸ் நிறுவனத்தின் உயரதிகாரியான் நந்தனை தலைவராக நியமித்துள்ளது . வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் அவருக்கும், அந்த நிறுவனத்துக்கும். இந்த அடையாள் அட்டையாவது முறைகேடாக பயன்படுத்தா வண்ணம், ஒருவரே பல அட்டைகளை வைத்துக்கொள்ள முடியா வண்ணம் வழங்கிடப்படும் என நம்புகிறேன். பொதுமக்களாகிய நமக்கும் இதை பொறுப்பாக பெற்றுக்கொள்ள , நேர்மையான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது. இந்த அடையாள் அட்டையை வைத்துகொண்டு எந்த ஊரில் இருந்தும், நாம் உட்பட்ட தொகுதிக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டால் வாக்குபதிவு சதவீதம் இன்னும் கூடும்.

நலத்திட்டங்கள் - !

சமீபத்தில் சில மேம்பாலங்கள் மற்றும் சில் நலத்திட்டங்கள் மாநிலம் முழுவது ஆங்காங்கே செயல்படுத்தபடுகின்றன் அல்லது படுகின்றன.நான் நிறைய பேர் இதை பற்றி பேசுவதை கேட்டுருக்கிறேன்..அன்னைவரிடம் இருந்து ஒரே மாதிரியான் வரிகள்.. "ஆமா இந்த் திட்டத்தை வைத்து இவனுங்க எவ்வளவு கொள்ளை அடிச்சாங்களோ ! ( அல்லது கொள்ளை அடிப்பாங்களோ )..."
எனக்கு ஒன்னு புரியல..உங்களுக்கு என்னதாண்டா செய்யனும்..திட்டம் கொண்டுவந்தாலும் திட்றீங்க! வரலாட்டயும் திட்றீங்க ! மொத்தத்தில் நம்மக்கள் அடுத்தவர்களை திட்டுவதில் அதிக ஆனந்தபடுகிறார்கள் இத்தனைக்கும் அவர்கள் எச்சி கைகளால் காக்கா கூட விரட்டமாட்டார்கள் அதுக்கு இரண்டு பருக்கை போய்டும்னு ..பாதி பேர் ஓட்டும் போடுறதில்லை (இப்ப நிலைமை மாறிட்டு இருக்கு..).

ராம்தாஸ் - மீண்டும் சாதி பேரில் தூபம்..

தேர்தல் தோல்விக்கு பிறகு , மீண்டும் சாதி பேரை சொல்லி தூபம் போட்டு இழந்த வாக்கு வங்கியை சரிசெய்ய பார்கிறார்." வன்னியர்களை அழிக்கபார்க்கிறார்காள் வன்னியர்களிக்கு முக்கியத்துவம் இல்லை" என்று வேதாளாம் முருங்கை மரம் ஏறின கதையா மீண்டும் மரவெட்ட தூபம் போடுகிறார்...
"சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் " இதை இந்த தமிழ் குடிதாங்கி அய்யா அவர்களுக்கு ஞாபக படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் !


~~

Friday, June 26, 2009

பேசாம பேசாமாதான் இருந்து - சீமான் !

~

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

பேசாம பேசாமாதான் இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

அட தோழா ரொம்ப நாளா
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !

விதைச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது
உணவில்லாமல் உழைத்த வயிறு காய்ஞ்சு கிடக்குது !

அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது
அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது !

அட தோழா ரொம்ப நாளா

பேசாமா பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !

வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால்
நமக்கு இங்கே என்ன கிடைக்குது !


எரிக்கும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது !
உசிரு இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது!

அட தோழா ரொம்ப நாளா

பேசாம பேசாமா இருந்து
கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து !
கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து !
இப்ப போகுதடா கோவணமும் பறந்து !


~

Monday, June 22, 2009

கஷ்டபடாமல் இருக்க கஷ்டபடுங்கள் - சுகி சிவம்

~







~~

Monday, June 15, 2009

கதம்பம் - 45 கோடி ,NDTV மற்றும் பல

~

45 கோடி !
--------------------

கர்நாடாகவை சேர்ந்த அமைச்சர் மற்றும் தொழில் அதிபர் ஒருவர் 45 கோடி மதிப்புள்ள வைர கீரிடத்தை திருப்பதி ஏழு மலையானுக்கு கொடுத்திருக்கிறார்... அடங்க கொக்க மக்கா! 45 கோடி ...
என்னால் அவர் இந்த பணத்தை நேர்மையாக சம்பாதித்திருப்பார் என்று நம்ம முடியலை ! இந்த 45 கோடியை வைத்து அவ்ர் தொகுதிக்கு எத்தனையோ நல்லது செய்திருக்கலாம் ..எத்தனையோ ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்..ஒன்னும் வேணாம்ங்க..அவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நலிவடைந்தவர்களுக்கு உதவி இருக்கலாம்...." ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"
என்ற பொன் மொழியை கன்னடதில் மொழி பெயர்த்து இவர் காதில் கொஞ்சம் உரக்க சொல்லுங்க!

கடன் தொல்லையால் ஒரு குடும்பம் தற்கொலை அந்த செய்தி வந்த அதே செய்தித்தாளில் வந்தது... என்னத்த சொல்ல !

போதை மருந்தும் தமிழக தொலைகாட்சி சேனல்களும் -
------------------------------------------------------

கமல் பசங்க பட விழாவில் அருமையா சொன்னார்..நம்முடைய முதலாளிகள் ரொம்ப நல்லவர்கள் மக்கள் போதை மருந்து கேட்டாலும் விற்பார்கள் மலிவு விலைக்கு என்று அவரைய்ம் சேர்த்து! அதை அப்படியே செய்கின்றன் சன் மற்றும் முக மற்றும் இதர சேனல்கள் மக்கள் தொலைகாட்சி தவிர ! விஜய் தொலைகாட்சி பரவாயில்லை ஒருசில நல்ல நிகழ்ச்சிகளவது ஒலி பரப்புகிறார்கள்.. ஒரே மாதிரியான் அறிவை மழுங்க செய்யும், பெண்களை , மனிதத்தை தவறாக சித்தரிக்கும் பின்னோக்கிய சிந்தனை உடைய தொடர்கள் , நிகழ்ச்சிகள்..முடியல !

Body Language, Attidude, enery level, chemistry ... இந்த நாலு வார்த்தையே கேட்டாலே ரட்சகன்ல நாகார்ஜீனாக்கு நரம்புல ஏற மாதிரி ஏறுது ! என்னனு கேட்ட மக்கள் இந்த மாதிரிதான் விரும்பி பார்க்கிறார்கள் என்கின்றன் இந்த போதைமருந்து வியாபாரிகள் !

தொலைகாட்சிகள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்கின்றன் செய்திகள் என்ற பெயரில் ! உதாரணத்துக்கு சன் நியுசில் ஒரு செய்தி..மாசில்லாமணி படவந்ததால் மக்கள் ஆரவாரமா இருக்கங்கலாம்..திரையரங்குகளில் ஒரே கும்மாளாமா! ஒளிப்படம் வேற காண்பிக்கிறார்கள் ! அதில இரண்டு அல்ல கைகள் திரையரங்கில் ஆடுது ..முடியலடா சாமி !

ஆனால் நிதர்சன உண்மை என்னவென்றால் சத்தமில்லாமல் இந்த தொலைகாட்சிகள் நம்மை மட்டுமில்லை நம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து கெடுத்து கொண்டிருக்கின்றன்..! என் அக்கா வீட்டுக்கு போனப்ப , எங்கஅக்கா அது பையனை "மாமாவுக்கு பாட்டு பாடி காமிடா " னு 4 வயது பையங்கிட்ட சொன்னா! அவன் பாடினா பாட்டை கேட்டு அதிர்ந்து போனேன்... "டாடி மம்மி வீட்டில் இல்ல...." அதுதான் அந்த பாட்டு ! இதை பார்த்து என் அக்கா பூரிப்படையது.. அடுத்து அப்படியே ஒரு கேள்வி கேட்டது.." உனக்கு பிடித்த ஹூரோ யாரு சொல்லு மாமாகிட்ட.. அவன் ஒரு பஞ்ச டயலாக்கோடு சொன்னான்..விஜய்னு !

அட மக்கா...நம்ம தாண்டா மண்ணுக்குள்ள தலையவிட்ட நெருப்புகோழி மாதிரி நம் தமிழன் எல்லாம் அப்படி இப்படினு புத்தகங்களை படித்து தவறா புரிந்து கொண்டியிருக்கோம் சமீபத்திய தேர்தலுக்கு முன்னாடி நடந்த கருத்து கணிப்பு மாதிரி. நம்மாளுங்க எல்லாம் திரைப்படத்திற்கும், தொலைகாட்சிக்கும் அடிமையாகிட்டு நமமள உனக்கு ரசனையே இல்லை அப்படிங்கிறான் !

விஜய் அவார்டுஸ் , ஆனந்த விகடன் !
---------------------------------------------------------------------

விஜய் டீவி மேல கொஞ்சம் மரியாதை இருந்தது.ஆனால் நாங்க மட்டும் என்ன அப்படினு காட்டிட்டாங்க ! சிறந்த புதுமுகம் - சாந்தனு .. சிறந்த படம் வாரணம் ஆயிரம்...நடத்துங்க நடத்துங்க !
இந்த வாரம் நயன்தாரா, பிரபு தேவா கல்யாணம் மற்றும் அவர்களின்..... பற்றிய பரபரப்பான் செய்திகள் ! வாழ்க பத்திரிக்கை ..இதே நக்கீரன்ல் போட்ட மஞ்சள் பத்திரிககைனு சொல்றான்...

துணை முதலமைச்சர், அழகிரி , NDTV ,
----------------------------------------------------------------------

ஸடாலின் (துணை) முதலமைச்சர் ஆகியிருக்கிறார் ,அழகிரி மத்திய அமைச்சர் ஆகியிருக்கிறார்.. இருவரையும் அவர்களின் பின்புலங்களை ஆராயாமல் வாழ்த்துவோம்..நிச்சயம் புகழுக்காகவாது இவர்கள் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் !

ராகுல்காந்தி, சச்சின் பைலட், அகதா சங்மா எல்லாம் அடுத்த தலைமுரை யூத்தாம். படித்தவர்களாம் ..தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனது MK's famil business அப்படினு செய்திகள் போடும் NDTV தமிழக மக்களலால் தேர்தெடுக்க பட்டவர்களை அவமானபடுத்துவதாகவே நான் கருதுகிறேன்... சமீபத்தில் நடந்த விவாத்தில் கூட ஒரு பிரபலம் அதே டிவி யில் சொல்கிறார் மம்தா தான் இப்போதுள்ள மந்திரிகளில் இளைய வயது கேபினட் மந்திரியாம்.அப்ப தயாநிதிக்கு என்ன 53 வயதா? ஏன் இந்த தென்னக புறக்கணிப்பு..இப்படிதான் அன்புமணிக்கு எதிராக தொடர் செய்திகளை பரப்பியது. வட இந்தியர்கள் தான் புத்திசாலி என்பது போலவும் , தமிழ் நாட்டில் இருக்கறவன் எல்லாம் கேனப்பயலாட்டம் சித்தரிக்கிறார்கள்..நீங்கள் அமுக்க நினைக்க நினைக்க நாங்கள் உயர்வோம். தமிழ்னாடுனா உடனே சோ, சுப்பிரமணியசாமியை தான் இவங்க கருத்து கேட்பாங்க! "சோ " வாவ்து ஓகே . சென்னை மேல்தட்டு மக்களின் கருத்தாவது அவருடன் ஒத்து போவும். விமர்சகராக "சோ" வை நான் மதிக்கிறேன்.. ஆனால் இந்த சுப்பிரமணியசாமிக்கு எதுக்குதான் போலிசு பாதுகாப்பு கொடுககுதுனு மக்களே உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க !

சென்னை கத்திப்பாரா மற்றும் மெட்ரோ
----------------------------------------------------------------------

சென்னை கத்திபாராவை இரவில் விமானத்தில் இருந்து பார்க்க அருமையா இருந்தது..
அதன் பலன் கத்திபாராவில் தினமும் குறைந்தது 15 நிமிடம் ட்ராபிக்கில் மாட்டிய சென்னைவாழ் மக்களுக்கு நன்கு தெரியும். சென்னை மெட்ரோ பணிகள் ஆரம்பம்மாகிருக்கின்றன்..கண்டிப்பாக இதற்கு இடையூறுகள் வரும் ஆட்சிகள் மாறினால் கிடப்பில் போடப்படலாம்.. ஆனால் இதை எல்லாம் மீறி திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக பாலம் மற்றும் இதர திட்டங்களில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று வருத்தபடும் சில எதிர்கட்சி நணபர்களுக்கு , அவர்களாவது இந்த மாதிரி எதாவது செய்திட்டு அடிக்கிறார்கள்..மற்ற ஆட்சிகளில் ????.


~

Tuesday, June 2, 2009

தேர்தல் என் கருத்துகள்

~~~~

என்னதான் எல்லாரும் பணத்தால் தான் திமுக வெற்றி பெற்றதாக கூறினாலும், பணம் மட்டுமே வெற்றி தந்துவிட முடியாது..வேட்பாளர் தேர்வும், தேர்தல் களப்பணியும் முக்கியம்.இந்த தேர்தலில் திமுகாவிற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற மாய மப்பில் எதிர்கட்சினர் இருந்தனர். இந்த தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். தோல்வியை ஒப்புகொண்டு , வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு , தவறுகளை ஆராய்ந்து திருத்தி கொள்ளாமல் மெசின் சரியில்லை, பண கொடுத்தாட்டாங்கே என்று சொல்லி கிட்டிருந்தா அடுத்த தேர்தலிலும் இதேதான் சொல்ல வேண்டியிருக்கும். பணத்தால் வெற்றி பெற்றதாக சொல்லும் அனைவரும் தமிழக மக்களை இழிவு படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்..

அதை போல ஈழ பிரச்ச்னையில் தமிழக மக்களுக்கு அக்கறையில்லை என்று இந்த தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து கொள்ள கூடாது.. இங்கு நடந்த ஈழ போராட்களில் முக வை வசைபாடும் மேடையாகவே எதிர்கட்சினர் பயன்படித்தினர்.. அதை சாமானியன் ரசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்..

திமுக :- வேட்பாளர் தேர்வு , தேர்தல் களப்பணி , மக்களுக்கு நம்பிக்கை தரும் பிரபலமான முகங்களின் பிரச்சாரம், தேமுதிகவின் வாக்கு பிரிப்பு ஆகியவே வெற்றிக்கு காரணம்..பணம் என்று சொல்லுவது முட்டாள்தனம்.எல்லா கட்சிகளும் தான் செலவுசெய்தன...

அதிமுக :- அதிமுகாவை பொருத்தவரை அவர்களுக்கு வெற்றிதான்..9 இடத்தில் வெற்றி . அவர்களின் ஒட்டு மொத்த ஒட்டு சதவீதம் குறையவில்லை..என்ன ஒன்னு திமுக எதிர்ப்பு ஒட்டுகள் கிடைக்கவில்லை..எல்லாம் கருப்பு எம்ஜி ஆர் வந்த விளைவு ..

தேமுதிக :- எல்லா கட்சியினரையும் வசைபாடுவதை தவிர வேற எதுவும் உருப்படியான் திட்டம் எதையும் முன்வைக்காதது.. சொன்னா காப்பி அடித்திடுவாங்கனு சின்னபிள்ளைதனமாய் சொன்னது..அப்படியே காப்பி அடித்தா என்ன ! மக்களுக்கு நல்ல நடந்தால் போதாதா..அதை நீங்க தான் செய்யனுமா..என்ன லாஜிக் இது

காங்கிரஸ் :- singh is king ..இலங்கை பிரச்சனை தவிர , காங்கிரஸின் மீது மக்களுக்கு கோபம் இல்லை இளங்கோவன் தோற்றது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆடியா ஆட்டம் என்ன ...

மதிமுக :- வைகோ தோற்றது அதிர்ச்சி ! நல்ல பேச்சாளர்..நல்ல தலைவனாக இல்லாமல் போய்விட்டார்..இல்லை அப்படி ஆக்கபட்டார். அரசியலில் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததின் விளைவு அம்மாகிட்ட அடைக்கலம் நாடி நிக்கிறார்.வீரவசனங்களை தவிர மக்கள் நெருக்கம் இல்லை..அம்மா பின்னாடியே கை கட்டி நின்னா வேலைக்கு ஆகாது.இதை வைகோ என்னைக்கு புரிந்து கொள்வாரோ ! இவருகு ராமதாஸ் பரவாயில்லை கூட்டணியில் இருந்த போது கூட அடிமையாக இருக்கவில்லை..

பாமக :- அனைவரும் அறிந்ததே ...அகந்தையால் தோற்றுபோனார்கள்.....இலங்கை பிரச்சனையில் முக வையும், காங்கிரசையும் வைத்து text book management style game ஆடி
வின் - வின் சூழ் நிலை உருவாக்கிட்டதா நினைத்தார்..இப்போது புரிந்திருக்கும் அது எல்லாம் கதைக்கு ஆகாது என்று

கம்யூனிஸ்ட் :- காத்து இந்த முறை அடிக்கவில்லை..கணிப்பு பொய்யா போச்சு...தாபாண்டியன் தோல்வி அதிர்ச்சியே..அமெரிக்காவா எதிர்க்கும் அளவுக்கு நம் நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றே நான் கருதிகிறேன்..

கார்த்திக், சமக :- பாவம் பாஜக எத்தனை கோடி இவங்களுக்கு கொடுத்தாங்களோ !

பாஜக :- தமிழக பாஜக அதிமுகா நம்பி இருந்தது கடைசியில் அவமானபடுத்தபட்டது.. இன்னும் பயிற்சி தேவை..மற்றபடி நல்ல தலைவர்கள் அங்கு இல்லாமல் இல்லை..இல.கணேசன், திருநாவுக்கரசர் போன்றோர்கள் தோற்றது பரிதாபமே !

மமக, :- மதவாத கட்சிகள் தனித்து நின்று வெல்வது எல்லாம் கானல் நீர்தான்..இவர்கள் தமிழ்நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகளை எண்ணினால் கூட 1 லட்சம் தாண்டாதுதான் நினைக்கிறேன்..

கொங்கு கட்சி:- ஜாதிகட்சியும் தனித்து நின்று வெல்வது சாத்தியம் இல்லை இது அவர்களுக்கே தெரியும்.. இந்த தேர்தலில் எப்படி தங்கள் சாதிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர்கள் இன மக்களுக்கு "அன்பு" கட்டளை இட்டார்களே அதை போல கொங்கு மண்டல்த்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை, இரட்டை குவளை , தீண்டாமைக்கும் ஒரு கட்டளை இட்டார்களே ஆனால் அவர்களுக்கு கோடி புண்ணியம் ..(எல்லாரையும் குறிப்ப்டவில்லை ஒரு சில இடங்களில் ஒரு சிலரால் மட்டும் இது இன்னமும் இருக்கிறது )

லதிமுக :- அப்படினா ? ..

மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்றே காட்டுகிறது.ஒரே நாளில் மாற்றம் வராது..இது ஆரம்பம்..தான்


~~~~