Monday, January 5, 2009

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை ,உயர்ந்தவர்களும் இல்லை

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த
தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை , உயர்ந்தவர்களும் இல்லை , ....


தலைப்பை படித்தவுடனே உங்களுக்கு புரிந்திருக்கும் நான் IT துறையை சார்ந்தவன் என்று. இருந்தாலும் நான் நடுநிலையாகவே என் கருத்துகளை பதிவு செய்ய ஆசைபடுகிறேன்..
அது என்னமோ தெரியலை , சினிமா துறையை விமர்சிப்பது போலா, IT துறையை சார்ந்தவர்களை ஒரு பலர் கேவலமாகவும்,சிலர் பிரம்மிப்பகாவும் விமர்சிக்கிறார்கள்....
IT - துறையினர், அதிகமாக சம்பாதிக்கிறார்கள், இவர்களை ஏமாற்றினால் தப்பில்லை என்று கூட சிலர் ஏமாற்று வதை நியாயப்படுத்துகிறார்கள்... உதாரணம் கிரடிட் கார்டு முதல் ரியல் எஸ்டேட் வரை.... அது என்னமோ தெரியலை, எந்த சினிமாவிலும் software engineerai தாலி கட்டவே விடுவதில்லை... அந்த பொண்ணு எவானவது பொறுக்கி Hero வை காதல் பண்ணும் , அப்பாவி software engineeru சின்ன வயதில் இருந்து ஒழுங்கா படித்து , கஷ்டப்பட்டு கவுன்சிலிங் எழுதி engineering/MCA pass பண்ணி , கேம்பஸ்சில் முக்கி முக்கி select agi,கேம்பஸ் ஊத்திகிட்டா, சென்னையிலோ ,பெங்களூரிலோ ரோடு ரோடா அலைந்து OFF-CAMBUS லோ, இலலாட்டி ஒரு Couresa படித்து அதன் மூலாமாகவோ வேலை வாங்கி,அப்புறம் இரவெல்லாம் முதுகு வழிக்க / உடம்பை கெடுத்துகிட்டு office la உட்கார்ந்து வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா நல்ல பெயர் வாங்கி ,ஒரு onsitea வாங்கிட்டு போய்,அங்க காசை மிச்சம் பண்ண அவன் சமைச்சதை கஷ்டப்பட்டு அவனே சாப்பிட்டுட்டு, கொஞ்சம் காசு சேர்ந்ததும் ( இந்த scene எல்லாம் எந்த சினிமாவிலம் வாரது..பெரும்பான்மையான் IT - தொழிலாளார்களின் நிகழ்வுகள் இப்படிதான் இருந்திருக்கின்றன் எனக்கு தெரிந்த வரையில்), சரி கல்யாணம் பண்ணிகலாம்னு வருவான்....சரியா தாலி கட்றப்ப அந்த hero வந்து பொண்ணை கூட்டிட்டு போயிடுவார் ! அந்த software engineer-இ கேனப்பயலாட்டும் காட்டுவானுங்க.கேமராவில்....திரையரங்கில் எல்லாரும் கரவொலி எழுப்புவார்கள்....மக்களே இது நியாமா !


கற்றது தமிழ்- என்று ஒரு படம். ...அந்த படத்தை பார்க்க , office-க்கு மட்டம் போட்டுட்டு ,அடித்து பிடித்து திரையரங்கிற்கு சென்ற தமிழ் மீது பற்று கொண்ட software engineer-ல் நானும் ஒருத்தன்..... படத்தில் கருத்துகளை விட கொலைகள் அதிகம். அதைப்பற்றிய விமர்சனத்துக்கள் செல்ல விரும்பவில்லை ..அதில் வரும் IT துறை சார்ந்த கருத்துகளுக்கு மட்டும் என்னுடைய தாழ்மையான பதிலை சொல்ல விரும்புகிறேன்........
1. 2000 வருட தமிழ் படித்த எனக்கு குறைந்த சம்பளம் , இப்ப வந்த computer படித்த அதிக சம்பளமா ! -

இப்ப வந்த computer படித்த, பள்ளிகளில் வேலை செய்யும் பட்டதாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் கேட்டு பார்த்தால் தெரியும்...இந்த் கேள்வியை "சொல்லிதரும் எனக்கு குறைந்த சம்பளம், படித்த உனக்கு அதிக சம்பளமா " என்று தான் எடுத்து கொள்ள வேண்டும் ....என்னை பொருத்த வரை அடுத்தவன் தன்னை விட தாழ வேண்டும் என்பதை விட ,தான் அடுத்தவர்களை விட உயர வேண்டும் என்று நினைப்பதுதான் நல்ல சிந்தனை !

2. பெயரை மாத்தி கொள்கிறர்கள் ,கொஞ்சம் காசு அதிக கொடுத்தா..அம்மா வை மாத்திடிவா -
திரு ராம் அவர்களே, சினிமாவில் எத்தனைய் பேரு தனது சொந்த பேரை பயன்படுத்துகிறார்கள் ...உங்களுடைய சொந்த பெரு ராமா ? நீங்கள் செய்தால் அது professionalism.நாங்க செய்தால் அது கேவலம் ! இந்த கேள்வி இந்த காட்சியை பார்த்துது கை தட்டி ஆமோதித்த அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும்.... (உங்களுடைய சொந்த பெயரியலா பதிவு எழுதுகிறீர்கள் ? ) ..censor போர்டுவுக்கும் .. அம்மாவை இந்த வசனத்தில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களை பொருத்த வரை, படித்தவர் எல்லாம் வேலை இல்லாமல் அலைய வேண்டும்..BPO வேலைக்கு போககூடாது...அப்போது தான உங்கள் படத்தை பார்க்க வருவார்கள்.....ஒருவரை/ஒரு செயலை உயர்த்துவதற்காக மற்றவர்களை கேவலமாக சித்தரிக்காதீர்கள்!

3. Dare to touch - nu ஒரு பொண்ணு T-shirt ல எழுதி இருக்கா, உடனே - hero போய் touch பண்ண முயற்சிக்கிறான் !
.இது ஆணாதிக்கதின் வெளிப்பாடா இல்லையா ! என்னை பொருத்த வரை தான் எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்....98% பெண்கள் நாகரீகமாக தான் உடை அணிகிறார்கள்...சில பெண்கள் நாகரிக குறைவாக ஆடை அணிகிறார்கள்....அவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள் ! IT துறையை மட்டும் குறை சொல்லுவது ..அபத்தம்......பெண்கள் இவ்வளவு தன்னம்பிக்கை உடன் இருக்கிறார்களே என்ற பொறாமையின் வெளிப்பாடு தான் இந்த காட்சி !

4. பெண்கள் நாகரிக குறைவாக ஆடை அணிகிறார்கள்....அதனால் ஆண்களுக்கு இட்சை அதிகமாக வருதாம்
இந்த கருத்து இந்த படத்தில் மட்டும் இல்லை நிறைய படத்தில் வருது ! நீயா நானா வில் கூட விவாதிக்க பட்டது ...நான் மதிக்கும் அமிர் கூட இந்த் கருத்தை வழிமொழிந்தார்.இந்த கேள்விக்கு சற்று தரம் தாழ்ந்து பதிலை சொல்லுகிறேன்.. ..மன்னிக்க வேண்டும் அன்பர்களே! .



so இந்த நாட்டில் சேலை கட்டிய பெண்கள் யாரும் இதுவரை கற்பழிக்க படவில்லை என்றே வைத்துகொள்வோம் ! இந்த கருத்தை ஆமோதிக்கும் ஆணாதிக்க பண்பை தெரிந்தோ தெரியாமாலோ மனதில் வைத்து இருக்கும் நண்பர்களே ! மனதை தொட்டு சொல்லுங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பெண்களின் சேலை/சுடிதார் விலகும் பொது நீங்கள் சில நொடிகளேனும் ரசித்ததில்லை ? so தவறு யார் மீது ? அதற்கு வேண்டுமானால் இயற்கை கொடுத்த எதிர் பாலின கவர்ச்சி பண்பை நாம் சப்போர்ட்டுக்கு கூப்பிடலாம் ! அதற்காக பெண்களை குற்றம் சொல்லலாமா ! தவறு செய்பவன் பெண்கள் என்ன ஆடை உடுத்தி இருந்தாலும் ...தவறான இடத்தைதான் பார்ப்பான் ! சில பெண்கள் அந்த தவறான ஆண்களுக்கு வசதியாக உடை அணிகிறார்கள் அவ்வளவு தான்.. நாம் வேண்டுமானால் , பெண்களிடம் நாங்கள் திருந்தும் வரை கவர்ச்சி இல்லாமல் உடை அணியுங்கள் என்று கோரிக்கை விடுக்கலாமே ஓழிய! கட்டளையிட கூடாது என்பது என் கருத்து...

சினிமாதன் இப்படி இருக்கிறது என்று சின்னதிரை பக்கம் வந்தால் அங்கேயும் இதே கூத்துதான் ! - தொடர்கிறேன் அடுத்த பதிவில் !







12 comments:

Rajmohan said...

Kanna you forgot the Title on the later half of the post... anyway good one da...

தேவன் மாயம் said...

எனக்கும் இந்த ஆதங்கம் இருந்தது ! உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் !//

நன்றி!!வளர்பிறை!!
தேவா...

தேவன் மாயம் said...

அந்த software engineer-இ கேனப்பயலாட்டும் காட்டுவானுங்க.கேமராவில்....திரையரங்கில் எல்லாரும் கரவொலி எழுப்புவார்கள்....மக்களே இது நியாமா ! ///

கரவொலிகளின்
பின்
இருக்கும்
மன வலி
மக்களுக்கு
தெரியாது!
என் பதிவுகளுக்கு
மீண்டும்
வருக!!
தேவா..

சரவண வடிவேல்.வே said...

உங்கள் கருத்துக்களில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கு கற்றது தமிழ் படத்தை பற்றி தவறாக சொல்வது சரியல்ல.

"கற்றது தமிழ்" நாயகன் மொத்த தமிழ் சமுதாயத்தை வெறுத்தான் என்பதற்கு அந்த காட்சிகளை ராம் சேர்த்து இருக்கலாம். மேலும் இந்த படத்தில் IT - தொழிலாளார்களை மட்டும் அவர் சாட வில்லை. Beach காதலர்கள், போலீஷ் என்று அனைவரை பற்றியும் கூறியிருப்பார்.

mvalarpirai said...

வாங்க சரவணன் !
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ! நீங்க உங்க பதிவில் என் பின்னோட்டத்திற்கு பதில் கூறியப்ப , என்னோட இந்த பதிவின் பின்னோட்டத்தில என்னை போட்டு குமிற போறீங்கனு நினைச்சேன்..பதிவில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி !

அப்புறம் என்னோட டீக் கடை பதிவை படித்தீர்களா (http://m-valarpirai.blogspot.com/2009/02/i-t.html) ?

சரவண வடிவேல்.வே said...

டீக் கடை பதிவை படித்தேன்... நான் உங்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன்.

இதே நிலைமை நிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. டீக்கடை உரிமையாளர் வேறு எங்காவது கடை வைத்துப் பிழைத்துக்கொள்வார்... ஆட்டோ ஓட்டுனரும் எங்காவது ஆட்டோ ஓட்டி பிழைத்துக்கொள்வார்... ஆனால் I.T'யில் வேலை செய்தவர்கள் நிலைமை????

சரவண வடிவேல்.வே said...

வளர்பிறை.. உங்கள் Blog'ல கருத்துகள் பதிவு செய்ய கடினமாக உள்ளது..உங்கள் Blog மற்ற blog'களில் இருந்து Design'ல வேறு மாதிரி இருப்பதற்கு என்ன காரணம்???

Firefox'ல Reply பண்ண முடியாமல், இப்பொழுது IE'ல இதை பதிவு செய்கிறேன்..

mvalarpirai said...

இப்ப நாட்டுல I-Tனு ஒன்னு இல்லவே இல்லைனு வச்சுகோங்க..படிச்சவன் எல்லாம் என்ன பண்ணி இருப்பானு நீங்க சொல்றீங்க ?... ஏற்றம்/சரிவு எல்லா துறையிலும் உண்டுங்க.2001 ல இப்படி தான் எல்லாரும் கிண்டல் பண்ணான்... எல்லா துறையுமே கணினி மயம்..அதனால் I-T துறையில் எல்லாருமே வேலை இழக்கிறது என்பது சாத்தியமே இல்லை..சம்பளம் குறைலாம், வேலை வாய்ப்பு குறையலாமே தவிற பெரிதா ஒன்றும் நடக்காது. இப்போதய நிலை தொடர்ந்தால் ...வேலையிழந்தவங்க/இப்ப வேலை இல்லா பட்டதாரிகள் எல்லாம் குறைந்த ஊதியத்திற்கு வேற வேலைக்கு போவாங்க அவ்வளவுதான்..விரல்கள் பத்தும் மூலதனம்ங்க ! :)

நான் ஒன்னும் DESIGN பண்ணலங்க I just selectd a template..? may be template/font issue ? i am suing 'Latha' Font and Azhagi editor..can you suggest me any template then ?

சரவண வடிவேல்.வே said...

நான் Use பண்றது.... Ekalapai'க.... no idea about template...

Chandru said...

நான் CSE முடிச்சுட்டு 2 வருடங்களாக இன்னும் நல்ல வேலை கெடைக்காமல்தான் இருக்கேன்.. நான் எங்கேபோய் முட்டிக்கொள்றது...

Valar (வளர்மதி) said...

Anbukuriya nambare, Neenda idaivelikkupiraku pathil ezhuthuvathai mannikkavum.. Ennudaya kavithaikku neengal kuduthu vilakkaththai naan earkiren. Means that you have convinced me. But You have to stand in my shoes, I wrote it in a frustration when my parents were hunting a groom. Since I am from a middle class family "Ponnu nalla irukku, jathagam nalla irukku athukku enna panrathu" status set ahgalaye??? I heard a lot and lot so eventually ended up blaming the whole industry. But after hearing me you will laugh at me.. Yes I got married and settled down in USA with my husband But without giving a single penny as dowry (Since it is an love & arrange marriage).There are lot of good hearts like you, me and my husband.. But still my friends are facing the same..

Intha naddula muthir kannikalum kannangalum athigamayete poranga.. ponne kedaikkathungara pachathula thaan ethuvume vendam ponnu kudutha pothumnu solranga.. ithu payyan vittula periyavanga mattum sollathu illa that groom also demanding... This is the fact.
Industrila Ellarum appadi illatha aanalu pothuvave neraya per appadithaan.

Thanks a lot for you comments and support.

Endrum natpuda
வளர்

Anonymous said...

nanbarae,
nalla muyarchikal....vaazhthukal....

enakennavo... neengal seiyum vaatham...oruthalai patchamaaka thondrukirathu....
muthalil niyayam endra ondru vaeru... niyaayapaduthuvathu vaeru...
software field enbathu pothuvaakavae nalla valarchi alla athanaalthaan ippadi ellorum solkiraarakal....thakuthikku meeri ethu vanthaalum athu thavarae.....udalil oru idathil alavukku meeri valarthaal enna solla kattithaanae..appadiyaendraal software oru kattiyae...nam naatirku....ivarkalin poruppillatha athikapadiyaana panathaal saathaarana naduthara varkam...mika sirama paduvathu....net il utkaarnthu...blog spotil ezhuthum namakku theriyaathu...
aan aathikkam enpathanai solpavarkalthaan athikam penkalai....seerazhipavarkal....anaananaalum pennaanaalum sari..
saalayil vithikal...undu selbavarkal ellorukkuk ethiril varuvorkkum...helmet podu endral kaaril ullavarkal othunki poka vendum enbathu pol ullathu ....uvamai....
pen sudhanthiramm patri paesuvor pennai patri therindhavaraaka irukka vaendum....
namm sudhanthirma aduthavarai paathikkaamal irukka vaendum....
sari pen than mukathai azhakaakki kolvathai yaar azhakillai endro thavaraakavo paarkiraarkal...illai....aathikkam seithu ethikkiraarakal....
neenkalum yaen pennai paniyan kalacharathi aaatharikkireerkal....athil sudhanthiram illai aabaasam thaan....
ithuvum.....kodutha sudhandhirathai...thavaraaka payanpadithi kolavathae.....
sari neenkalae....unkalai seerthooki paarunakl....
niyaayam ellorum solvathu....
niyaayapaduthuvathu....oruthalai patchamaanathu....
naan solvathu....mukkalamum porundhum....
puriyavillayaa....
solkiraen....
intha idathil solli paarunkal...
neenkal sonna sundhanthirathai.....
""naetru ennai petra thaai seithirunthaal... athayum sariyendru en ithayam sonnaal......
indru en udanpirathaval seithaal athuvum sariyaaka irunthaal.......
naalai en makavum ithaiseithaal athayum sriyaendru naan solla ninaithaal ....""
athauthaan sari..
athuthaan sudhanathiram.....
palliyil padikkum pothu...cut adithuvittu sutruvathil eppadi sudhanthiram illayao appadithaan ithuvum....
pen padipathi sudhanthiram vaendum,pani seiyya,vaendiya idathirku sella,ninaitha padippai padikka,nitha idathil vaelai seiyya....
yaen ninaitha paiayanai thirumanam seiyya....
ithellam vida antha maarappu illaatha paniyan enna avvalavu mukkiyam.....appadi un sudhanthiram endraal veetil pottu kol.....
ithuthaan arivulla aan pen anaivarin aathanakamum...
katrathu......kaiyalavu....naan
up

Post a Comment