Tuesday, June 7, 2011

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - வைரமுத்து !

~


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எண்டை புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா

தலைவருக்கு 6 வது தேசிய விருது பெற்று கொடுத்த பாடல்.பாட்டை முதலில் கேட்ட அன்று தூக்கமே வரல..எங்கும் திரும்பினாலும் என் அம்மா....


~

1 comment:

சித்தாரா மகேஷ். said...

//சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா//

அனைத்தும் அருமையான வரிகள்.

Post a Comment