Tuesday, August 18, 2009

மாமியார் மருமகள் - நடுவில் மகன்கள் படும் பாடு பாவம்தானே ?

~

உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம் போல இதை தீர்க்க எத்தனை பேர் வந்தாலும் முடியாது போல ! இவர்கள் சண்டையில் பெத்த/வளர்த்த அம்மாவையும் கண்டிக்க முடியாமல் , நம்பி வந்த மனைவியயும் கட்டு படுத்த முடியாமல் ஆண்கள் படும் கஷ்டம் இருக்கு பாருங்க ! சொல்லிமாளாது ! மருமகள் பக்கம் பேசினா, பொண்டாட்டிதாசன் என்றும், அம்மாவை கொடுமை படுத்திறான் பிள்ளை என்ற நற்பெயர்களும், அம்மா பக்கம் பேசினா, மருமகளை கொடுமை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் அதிகமானால் வரதட்சினை கொடுமை வழக்கையும் சந்திக்க நேரிடுகிறது..

அப்படி இவங்களுக்குள் என்னதான் அப்படி பிரச்சனை என்று பார்த்தால் சின்ன பிரச்சனையாக இருக்கும் அதிய ஊதி பெரிதாக்கி கடைசில வெடிக்கும் சமயத்தில் நம்ம கிட்ட பஞ்சாயத்துக்கு வரும்..நம்மாளுங்களும் வழக்கம் போல தலைய தலைய ஆட்டிட்டு சரி விடும்மா, / சரி விடுடினு ..சொல்லி சமாதான படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். மாமியார்களுக்கு, மனதுக்குள் மருமகள் நமக்கு சேவை செய்ய வேண்டும், அல்லது நம்ம மாமியார்கிட்ட இருந்த மாதிரி இவளும் இருக்கனும், அவ மகன் கிட்ட இருந்து தன்னை பிரித்துவிடுவாள் என்ற எண்ணங்கள் உண்டு..அதை சிலபேர் அடக்க தெரிந்திருக்கிறார்கள் .சிலருக்கு அது முடியவில்லை ! இன்னொரு பக்கம் மருமகள் முதலில் கொஞ்சம் பொறுத்து போனாலும் சிறிது காலம் கழித்து அந்த பொறுமை காணாமல் போய்விடுகிறது. இவங்களுக்கு ஏன் நம்ம அடங்கி போகனும்,(அவங்க நல்லதே சொன்னாலும்) இவங்க சொல்றத நாம ஏன் கேட்கனும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அப்புறம் மாமியாரை வில்லி போல பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒரு உண்மை சம்பவம். நான் ஈரோட்டில் பக்கத்தில் ஒரு திருமணத்துக்கு சென்று இருந்தேன். ஒரு பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸில் முன்பக்கம் கூட்டமாய் இருந்தது. பின்னாடி கடைசி சீட்டில் ஒரே ஒருத்தர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் " அட கிருக்க பயலுகலே ..பின்னாடி சீட்டே காலியாக இருக்கும் போது முன்னாடி ஏண்டா போய் நிக்கீறிங்கனு நினைச்சுட்டு " நான் போய் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் தீடீரீனு "அம்மா ஏம்மா இப்படி கத்துற ! மானம் போகுது ..ஏண்டி நீதான் கொஞ்சம் அமைதியா இறேண்டினு " பேச ஆரம்பிச்சார். நான் அவர் செல்போன் மைக்லதான் பேசறார்னு நினைச்சேன்.கொஞ்ச நேரத்தில் "அம்மா அம்மானு" அழ ஆரம்பிச்சிட்டார். அப்புறம் இறங்கனதுக்கு அப்புறம் விசாரிச்சா, அவருக்கு புத்தி சுவாதினம் இல்லையாம்.நல்ல படித்தவராம். இவருக்கு கல்யாணதுக்கு அப்புறம் மாமியார், மருமகள் சண்டையில் ஒரு நாள் அவங்க மனைவி கோபபட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டாங்களாம். இவர் அவங்க அம்மாவை கண்டிக்க அவங்க அம்மா அன்று இரவு தற்கொலை செய்திட்டாங்களாம். அவங்க அம்மா இவரை கஷ்ட பட்டு வளர்த்தாங்களாம். அவங்க இறந்திருந்ததுக்கு அப்புறம் இவர் இப்படி புத்திசுவாதினல்லாமல் போய்ட்டாராம்..ஒரு குடும்பமே சிதைந்திருச்சு ! யார் மீது குற்றம் இருந்தாலும் இதில் எல்லாருக்குமே நஷ்டம் தான்.அவங்க அம்மா உயிர் போச்சு..அவர் மற்றும் இவரது மனைவின் வாழ்க்கை போச்சு ! இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்கு ! இன்னைக்கு கூட பேப்பரில் மாமியார், மாமனாரை விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என்று சொன்னதால் மனைவியை கொன்ற மகன் என்று செய்திவந்துருக்கு .

கூட்டு குடும்பத்தில்தான் இந்த பிரச்சனை , தனிக்குடித்தனம்தான் தீர்வு என்றால் வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க மாட்றானுங்க அப்படினு அவப் பெயர் அந்த மகன்களுக்கே ! மறுக்க முடியமா யாராலவது ? நீங்க நிறைய வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ..அப்பாவின் சொந்தங்களோட தொடர்பு கொஞ்சமாத்தான் இருக்கும்..அதுவும் விழாக்கள் போன்றவற்றில்தான் . அம்மாவின் சொந்தத்தில்தான் தொடர்பு அதிகமா இருக்கும் ..அம்மா பெரும்பான்மையா அப்பாவின் சொந்தங்களோட பழகவே விடமாட்டாங்க.. ஏன் இப்படி ? இதுக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தனும் நீங்க நினைக்கலாம்..ஆனா எனக்கென்னமோ அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறமாதிரியே தோனுது ? மொத்தத்தில் பார்த்தீங்கனா பாதிக்கபடுறது பாழாப்போன ஆண்வர்க்கம் தானுங்க ! ஏன் இப்படி ? மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று மூலையில் உட்கார்ந்து யோசிச்சு பின்னோட்டம் போடுங்க !

~

5 comments:

கபிலன் said...

இந்தப் பிரச்சினை Universal problem. முன்பெல்லாம் இந்த மாதிரியான பிரச்சினை அவ்வளவா கிடையாது. ஏன்னு பார்த்தோம்னா, வீட்ல பெரும்பாலும் சிதம்பர ஆட்சி தான். ஆகையால், பெண்கள் Submissive ஆ தான் இருப்பாங்க. இப்போ படிப்பு, நாகரிகம் வளர்ந்ததால, கலாச்சாரம் மாறுபடுறதால ஏற்படுகிற பிரச்சினை. இப்பொழுதெல்லாம், பல வீடுகளில் மதுரை ஆட்சி தான் நடக்குது. கொடுமை தான்.

சரியா தான் சொல்லி இருக்கீங்க!

Word Verification remove பண்ணிடுங்க!

TBR. JOSPEH said...

இது சம்பந்தமான என்னுடைய இடுகையை படிச்சுட்டு சொல்லுங்க.

இது ஒரு யூனிவர்சல் பிரச்சினையா போச்சு. இதுல பாத்தீங்கன்னா பெண்கள்தான் மூலக் காரணமா இருக்காங்கங்கறது புரியும்.

இவங்களுக்கு இடையில மாட்டிக்கிட்டு திண்டாடறது ஆண்கள். ஒரு பக்கம் அம்மா இன்னொரு பக்கம் மனைவி... மண்டையிடிதான்.

நையாண்டி நைனா said...

/*மொத்தத்தில் பார்த்தீங்கனா பாதிக்கபடுறது பாழாப்போன ஆண்வர்க்கம் தானுங்க !
ஏன் இப்படி மருமகள் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று மூலையில் உட்கார்ந்து யோசிச்சு பின்னோட்டம் போடுங்க !*/

நல்லா சொன்னீருவே....!!!

ஆமா... கல்யாணதப்ப அந்த ஓம குண்டத்திலே போட்டு புகைய வர வச்சோமே அது என்னான்றீங்க... எங்களோட மூளை தான்....

இவருக்கு இப்ப உக்காந்து வேற யோசிக்கனுமாம்....!?!?!?!?

நட்புடன் ஜமால் said...

மூலையில் உட்கார்ந்ததுக்கு காரணமே இதுதானே

எங்கிருந்து பின்னூட்ட ...

mvalarpirai said...

என் பதிவுக்கு வருகை தந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி !

கபிலன் ,

Word Verfication Remove பண்ணிட்டேன் !

Post a Comment