~
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை சர்க்கஸ்லயோ , இல்ல எதோ சாதனை நிகழ்ச்சிகளிலோ அல்ல..நம்ம சென்னை வாழ் வாகன ஓட்டிகளுக்குதான் .(குறிப்பா இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷேர் ஆட்டோவில் புட் போர்டு அடிக்கரவர்களுக்கு தான்..பஸ்ஸில்தான் அப்படினா , ஷேர் ஆட்டோவிலுமா? ) வேகம் ,விதி மீறல்கள், ஹார்ன் என்று இவர்கள் செய்யும் அட்டூழியும் இருக்கே தாங்க முடியல ! நடைபாதை மேடா இருந்தால் கூட அதில் பைக்கை ஏத்தி ஓட்றாங்க ! இதில் வேற நடைபாதையில் போறவங்களை தன் பைக்கு வழிவிட சொல்லி ஹார்ன் அடிக்கிறாங்க ! கேட்டா அவசரம்..அவசரம்.எனக்கு இப்படி நடந்தது..வேற எங்கேயும் இல்லைங்க படித்த மக்கள் அதிகமாக் வாகனம் ஓட்டும் டைடல் பார்க் அருகாமையில். நான் அப்படியே திரும்பி பார்த்து, அங்கேயே நின்று அவரை முறைத்து பார்த்து பிறகு நடைபாதயில் இருந்து இறக்கி சாலையில் ஓட்டி சென்றார்.ஆனால் இந்த முரைப்பு எல்லாம் எத்தனை பேரு கிட்ட வேலைக்கு ஆகும்னு தெரியல !.
இதே மாதிரி எல்னெட்/டைடல் பார்க் வழியா வண்டிகள் செம வேகமா போகும். இவங்களாய் சாமளித்து உள்ளே போறதக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் போய் tidel and elnet secutiry roomla சொன்னேன் இங்க speed braker போடுங்கனு. அவர் தலை தலையா ஆட்டுனார். அதுக்கு அப்புறம் நான் ஒரு வருடம் வெளி நாடு சென்றுவிட்டென். போன வாரம் அங்கு போன போது speed braker இருந்தது. நான் பரவாயில்லையேனு என நண்பங்கிட்ட சொன்னபோது, அவன் சொன்னா இரண்டு மூனு தடவை விபத்து நடந்திருச்சு அதனால் தாண்டா போட்டாங்கனு.. இப்படி எதாவது நடந்தாதான் நம்மாளுங்க விழிக்கிறாங்க !
இதே மாதிரி cross junction singnalஅ ரெட் விழுந்தா கூட, எதிர்தரப்பில் வண்டி நெருங்கும் வரை சாலையை கடக்கிறாங்க..சிலபேர் கடைசி நொடி வரை முயற்சி செஞ்சிட்டு முடியல எனும் போது அப்படியே சாலை நடுவுல "பெப்பரே பேனு" நிற்பான் பாருங்க ! போறவன் வர்ரவன் எல்லாரும் அவனை திட்டுவான்..திட்டி புட்டு அடுத்த சிக்னல்ல அவனும் அதேதான் செய்வான் .
சாலையில் எல்லாரும் ரேஸ் ஓட்டுற மாதிரிதான் ஓட்றாங்க ..அதிலயும் சிக்னல் போட்டவுடன் பாருங்க ! ஏண்டா இவ்வளு வேகாம ஓட்றீங்கனு கேட்ட எனக்கு பின்னாடி வர்றவன் வேகமா வர்றான் அதனால் நான் வேகாம போறேன் சொல்றாங்க எனக்கு நெருங்கிய நண்பர்கள் ! வேகாம போய் குப்பறக்கு அடிச்சு விழுந்து உறுப்புகளை இழந்தவங்க எத்தனை பேர். இரண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி காந்தி நகர்ல் வேலை பார்த்துகிட்டிருந்தேன். ஒரு நாள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன், அப்போ வண்டியில் வேகாம போனவன் வழியில் என்ன குறுக்கிட்டிச்சு தெரியல், தீடிர்னு பிரேக் போட்டு கிழே விழுந்தான். நல்லவேளை அவன் மண்ணில் விழுந்ததாலும், தலைகவசம் அணிந்திருந்தாலும் சிறு காயங்களுடன் தப்பித்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் போய் தூக்கிவிட்டோம். ஒருத்தன் கிழே விழுந்த அறிவுறை சொல்ல ஒரு கும்பல் கூடுவது வழக்கம் என்றாலும் ஒரு ஊனமுன்றவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் கேட்கிறது. "தம்பி கை, கால் எல்லாம் நம்மளோட விலை மதிக்க முடியாத சொத்து..அதை இழந்திடாதா.. அதோட அருமை இல்லாதங்களுக்கு தான் தெரியும்" .என்பதுதான்.
அப்புறம் பாதசாரிகள் , சிக்னலே இருந்தாலும் சாலை கடக்கிறதுக்குள்ளா செத்தொம் பிழைச்ச கதை தான். வெளி நாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை.ஆனால் நம்ம முதியவரா இருந்தாலும் அவர்களை மதிப்பதே இல்லை. என்னடா இவன் வெளி நாட்டு புகழ் பாடுறானு நினைக்க கூடாது. உண்மையை என்றைக்கு ஒத்துகனும். சும்மா நாங்க மூவாயிரம் வருசத்து முன்னாடியே நாகரீகம் போற்றினோம் கதை எல்லாம் வேலைக்கு ஆகாது. ( இதற்கு எது தமிழ் கலாசாரம்னு தனி பதிவு போடுறேன் )
ஏன்னு இபப்டி பண்றீங்கனு கேட்ட ஒரே பதில் "அவசரம் ,லேட் ஆயிடுச்சு".. தினமுமா லேட் ஆகுது ? அந்நியன் படத்தில விக்ரம் சொல்லும் போது கைதட்டும் நம்ம, நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியதா ? ஆனால் வெளி நாட்டுக்கு போன மட்டும் Rules சரியா பின் பற்றுவோம். இதை பத்தி என்னோட வெளி நாட்டு நண்பர் சொன்னார் Volumea face பண்ற அளவுக்கு infrastructure இருந்தா எல்லாரும் கடைபிடிப்பாங்க , அப்புறம் எல்லாரும் சொல்ற மாதிரி "ஊரொடு ஒத்து போ" பழமொழி சொன்னார். இங்க எல்லாரும் கடைபிடிக்கிறாங்க , அதனால்தான் இங்க வர்றவங்களும் கடைபிடிக்கிறாங்க அதுவும் மட்டும் இல்லாமல் அதுக்கு தகுந்த மாதிரி சாலை வசதிகள் மற்றும் infrastructure இருக்கு அப்புறம் Volumeம் கம்மியா இருக்கு, ஆனால் உங்க ஊரில் Volume அதிகம் அதனால் தான் அங்கே கடைபிடிக்கிறதில்லை. இதுவும் யோசிக்க வேண்டியதான் இருக்கு .
இப்படி நம்ம நாட்டில எந்த ஒரு பிரச்சனைக்கு , கடைசியா கடைசியா root cause மக்கள் தொகை அல்லது நம்ம தட்ப வெப்ப நிலை யாதான் இருக்கு.வெளி நாடுகளுக்கு நல்ல குளிரான தட்ப வெப்பனிலை, பரந்த நிலப்பரப்பு, குறைவான் மக்கள் தொகை, நல்ல வளம் என்று கொடுத்திருக்க ஆண்டவன் நம்மளை மட்டும் ஏன் சபிச்சிட்டானு தெரியல!
~
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment