Wednesday, April 22, 2009

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

~


தனிப்பட்ட சோனியாவின் ,ராகுலின் கோபம் நியாயமானது..என் கணவரை, அப்பாவை யார் கொலை செய்திருந்தாலும் எனக்கு கண்டிப்பாக கோபம் வரும். மன்னிப்பது சிரமம்.
ஆனால் ஒரு அரசாங்கத்தை,இந்த காந்தி தேசத்தை கட்டி ஆளூம் சோனியாவிற்கு பக்குவம் வேண்டும்.அதை அவரிடம் எடுத்து சொல்ல ஒரு நாதியில்லையே ! அவரின் அந்த கோவத்திற்கு தூபம் போட்டு அதன் மூலம் ஆதாரம் தேடும் மனிதாப மானம் அற்ற அதிகாரிகளும்,அரசியல்வாதிகளாலும்தான் ஈழத்திற்கு இந்த நிலைமை.

இந்தியா உதவி செய்யாட்டி வேறு நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்க மாட்டார்களா..இது எல்லா அறிவாளிகளின் கேள்வி. எப்படியும் அவர்கள் கொலைசெய்யபடுவார்கள் அதனால் நானே கொல்றேன் என்று சொல்கிறதா காந்தி தேசம் ? ஒ இதற்கு பெயர்தான் கருணை கொலையா ? மற்றும் ஒரு கேள்வி இந்தியா மட்டும் காஷ்மீர், அஸ்ஸாமில் தீவிரவாதிகளை எதிர்த்துவிட்டு ,திவரவாதிற்கு எதிராக போராடும் இலங்கைய கண்டிக்கலாமா? அடே அறிவாளிகளா காஷ்மீரிலும்,அஸ்ஸாமிலும் இந்தியா குண்டு மழை பொழிகிறதா.. ஒரு 2000 பேரை கொல்ல இரண்டு இலட்சம் பேரை கொன்றதா ? அத்தனை பேர கொன்ற கஸாப்பிற்கு வக்கீல் வத்து வாதாடும் தேசம் இல்லையா இந்தியா ? தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ? ஏன்னா எங்களுக்கு என்று ஒரு நல்ல தலைவன் இல்லை.

IPKF பத்தி எவனும் பேசறதில்லை.காந்திய கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.இந்திராவை கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆனால் ஈழம் என்று வந்தவுடன் ராஜிவை கொன்றவர்கள்..அதனால் விடுதலைப்புலி களோடு மற்ற எல்லாரும் (குழந்தைகள் உட்பட) செத்து மடியட்டும். கேட்டால் இந்திரா, காந்தியை சுட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கபட்டது.ஆனால் ராஜிவை கொன்றவனுக்கு கொடுக்கபடவில்லை ( அப்போ ராஜிவை கொன்றவர்கள் சிவராசன் எல்லாம் தண்டிக்கபடலையா ? ) . தயவு செய்து பிரபாகரனை கொன்று விடுங்கள். அப்போதாவது எங்கள் ஈழ பிஞ்சுகள் சாகாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்.எங்கள் இளம் பிஞ்சுகள் காக்கபடும் என்றால் அவர் சந்தோசமாகதான் உயிர் இழப்பார். அவர் ஒன்னும் தமிழ் நாட்டு தலைவர்களை போல பிழைக்க தெரிந்தவர் அல்ல. தமிழ் நாட்டு தலைவர்கள் தான் பதவிக்காக தன்மானத்தை இழந்திருக்கார்கள். ஒரு ராஜிவிற்கு லட்சம் தமிழர்கள்..இன்னும் போதவில்லை..குடிங்க இன்னும் எவ்வளுவு ரத்தம் ராஜிவின் பெயரால்,புத்தரின் பெயரால் குடிக்கனுமோ குடிங்க.

நான் வல்லரசு நான் என்னனாலும் பண்ணுவேன் அப்படிங்கிறா இருமாப்பு. வல்லரசு மும்மையில் என்ன பண்ணிச்சு ? ம...ரை பிடிங்கிட்டு இருந்துச்சா? . ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் கொலைசெய்ய படுகிறார்கள்..ஆனால் அதைப்பற்றி கவலை மட்டும் தெரிவித்துவிட்டு பின்னாடி இலங்கை கிட்ட இன்னும் என்னடா பன்றீங்கனு கேட்கும் தலைவர்களை பெற்றிருக்கிறது காந்தி தேசம்.

இந்திய தொலைகாட்சிகள் எல்லாம் தொலைதூரத்தில் இருக்க எங்கோ ஒரு நாட்டில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தால் அன்று நாள் முழுக்க ஒப்பாரி வைக்க கூட்டத்தை கூட்டும் அவர்களுக்கு அருகில் நடக்கும் இனப்படுகொலை கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொது தேர்தல் வந்த உடனே எல்லாம் பிராபகரனை மட்டும் தான் ஈழம் போல அவரை பற்றியே பேசுகின்றன.அவர் தீவிரவாதியா,இல்லை பயங்கரவாதியா என்று பட்டிமன்றம் வேற.(இந்த தேர்தல் வராவிட்டால்..அவர்கள் இந்த செய்தியை கூட போட்டிருக்க மாட்டாகள்) அவர்கள் பார்வைக்கு அங்கு செத்துவிழும் பிணங்கள் தெரியவில்லை. விடுதலைப்புலி என்றால் உடனே ராஜீவ் கொன்றவர்கள் என்றுதான் சொல்கிறார்கள் வட இந்திய தொலைகாட்சிகள்.அது எதற்காக உருவாயிற்று ? அவர்களுக்கு தீலிபன் தெரியுமா? எட்டி எட்டி உதைத்தால் கடிக்க தெரியாத நாய் கூட திரும்ப பாயும்.இந்திய ஊடகங்களுக்கு இதயமே இல்லை . நீதி நசுக்க படுகிறது. அதை பார்த்து இந்த மனித நேயமிக்க உலகம் கை கட்டி வாய் பொத்தி மொளனம் காக்கிறது. தேசியபாதுகாப்பு சட்டம உலகம் முழுவதுமா இருக்கு?

ஈழ பிரச்சனையில் இன உணர்வு காட்டதேவையில்லை குறைந்த அளவு மனிதாபமானம் காட்ட முடியாதா காந்தி தேசத்து மக்களே ! . உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களுக்கு என்று ஆயிரம் பிரச்சனைகள். சிலருக்கு சோத்துக்கே வழியிலை இதுல அவங்களுக்கு நான் என்ன பண்றது என்பது எண்ணம் அவர்கள் பரவாயில்லை . (சில பேருக்கு இலங்கையவிட , IPL ல சென்னை தோற்றதுக்கும், விஜயின் வில்லு படம் ஊத்திகிட்டதுக்கும்தான் அதிகமாக கவலைபடுகிறார்கள்).ஆனால் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களிடம் ஈழ சோகம் இருப்பது உண்மை. ஆனால் அவர்களின் எண்ணத்தை வெளிபடுத்த தடம் இல்லை. (ஆமா நம்மால என்ன ஆகப்போது.. என்ற மனநிலைதான் நம்முடைய எதிரி. அந்த எதிரியை நாம் ஒரு நாள் வீழ்த்துவோம்). கொடுமையிலும் கொடுமை ஈழ பிரச்சனை வைத்து தமிழ் நாட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்..அடப்பாவிகளா அடப்பாவிகளா.. ராஜபக்சே பரவாயில்லை நேருக்கு நேர் மோதுகிறான்..நீங்கள் எல்லாம் முதுகில் குத்துவர்கள் தானே ? தமிழ் நாட்டு தலைவர்களுக்கெல்லாம் கருணாதியை தமிழின எதிரியாக சித்திரிப்பிதால் தான் குறியாக இருக்கின்றவே தவிர வேரு எதுவும் ஆக்க பூர்வமாக செய்வதில்லை.கருணாநிதிக்கு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதில்தான் நேரம் போகிறது. உண்மையில் பிரிந்து கிடக்கும் தமிழ் நாட்டு தலைகளால் ஒன்றும் செய்ய இயலாது, ஓட்டுக்காக வேண்டுமானால் குரைக்கலாம்.

நாயாக இரு நக்கி பிழை ..இதுதான் உலகத்தார் தமிழனுக்கு சொல்லுவது .சக தமிழன் சாகும் போது எதுவுமே செய்யாமல் சகதமிழனுக்காக அழ மட்டுமே செய்யும் கோழை நான் என்று வெட்கி தலை குனிந்து ஒத்து கொள்கிறேன்.முதன் முறையா இந்தியாவில் அதுவும் தமிழனா பிறந்ததற்கு வெட்கபடுறேன். வேதனைபடுகிறேன். .. யாரையும் சொல்லியும் குற்றமில்லை நாம் அடிமையாக பிறந்ததுதான் குற்றம்... அடிமையாக இருப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே ! கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றவனுக்கும், ரசிகனாக சினிமா நட்சத்திரங்களும் , வருவாய் காரணமாக coraporate கம்பெனிகளுக்கும் , ஊழல் செய்யுபவரை தட்டி கேட்க வக்கில்லாதவராகவும் , எவன் எக்கேடு கெட்டுபோனா நமக்கென்னா என்று கிரிகெட்டுக்கும் அடிமையாகத்தான் இருக்கோம் நாம்.அடிமையாக இருப்பதில் கூட உயர்ந்த சாதி அடிமை, தாழ்ந்த சாதி அடிமை என்று வேறுபாடு வேர.. இந்த அடிமை தாழ்ந்தபட்ட அடிமை என்று நமக்குள் சண்டை வேறு ! சக அடிமைகளே இனிமேல் யாரும் தமிழன் பெருமை பேசாதீர்கள் !

நான் இந்த பதிவை எழுதுவதால் ஒன்றும் இலங்கையில் என் இனம் அழிக்கவடுதை தடுத்து விட முடியாது ..என் மனசாந்திக்காக எழுதுகிறேன். பாரதியின் சொன்ன வார்த்தைகளை (முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ) பாதியை நான் பின்பற்றினேன். ராஜபக்சே, சரத் பொன்சேகா , கருணா , நாராயணன் , சிவசங்கர் மேனன், தினமலர், கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, பிரணாப் முகர்ஜி, தங்கபாலு, இளங்கோவன்,ராமதாஸ் மற்றும் என்னையும் (இந்திய தேசத்து அடிமை) நினைத்து என் வாயில் எச்சில் வற்றும்வறை காரி காரி உமிழ்ந்தேன் கழிவறையில்.


~

2 comments:

Mark K Maity said...

thanks for the care for eelam tamils.
http://www.tamilkathir.com/news/genocide-ii-ok.aspx

savuccu said...

***நான் இந்த பதிவை எழுதுவதால் ஒன்றும் இலங்கையில் என் இனம் அழிக்கவடுதை தடுத்து விட முடியாது ..என் மனசாந்திக்காக எழுதுகிறேன். பாரதியின் சொன்ன வார்த்தைகளை (முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ) பாதியை நான் பின்பற்றினேன். ராஜபக்சே, சரத் பொன்சேகா , கருணா , நாராயணன் , சிவசங்கர் மேனன், தினமலர், கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, பிரணாப் முகர்ஜி, தங்கபாலு, இளங்கோவன்,ராமதாஸ் மற்றும் என்னையும் (இந்திய தேசத்து அடிமை) நினைத்து என் வாயில் எச்சில் வற்றும்வறை காரி காரி உமிழ்ந்தேன் கழிவறையில். ( வீதியில் செய்தால் , தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்று பயந்து ).***

பலர் ஊர்வலங்களில், ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படையாகச் செய்தும் வருகிறார்கள், பல்வேறு முறைகளில்!

Post a Comment