Tuesday, January 27, 2009

தேடி சோறு நிதம் தின்று - பாரதியார்

.
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?


.

Saturday, January 24, 2009

ஒரு தோழியின் கவிதையும் ,என் பின்னூட்டமும் !


ஒரு தோழியின் கவிதையும் ,என் பின்னூட்டமும் !

கவிதை.. ( http://valarpiray.blogspot.com/2008/12/blog-post_12.html)

சுயநல வாதிகளின் கூடாறம்
இந்த மென்பொருள் துறை...
எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..??

ஏனென்றால் நானும் ஒரு சுயநலவாதிதான்...
கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும்,
முகவரி கொடுத்தவனை மறந்து... பறந்து இல்லை...
இல்லை... தாவிச் செல்லும்
இதயமற்றவனுக்கு பெயர் software engineer

விடியவிடிய வேலை பார்ப்பான், வெளிநாட்டினர் சுகமாய் வாழ!
சம்பாதித்ததை கொண்டுபோய் "சால்சா"வில் தொலைப்பான்..
மூளை இருந்தும்... முதுகெலும்பு இல்லாதவன்.

ஒருமுறை பறந்து சென்று வந்துவிட்டால் போதும்... 50 சவரனில் இருந்து 100 ஆக்கி அவனையே விற்றுக்கொள்வான்... ஆனால் வாங்கத்தான் ஆளில்லை... வேலை இல்லாதவனங்கள, யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???

என் பின்னூட்டம் :

மரியாதைக்குரிய நண்பரே!

//கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும், முகவரி கொடுத்தவனை மறந்து... பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும் இதயமற்றவனுக்கு பெயர் software engineer //

உங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் உலகத்தில் உள்ள 90 விழுக்காடு மக்கள் சுயநலவாதிகள் தான் !

ஒருவன் தன்னுடைய முன்னேற்றத்திற்காக ,அதற்கு தக்கவாறு முன் அறிவிப்பு செய்திவிட்டு அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ராஜினாமா செய்வதை நீங்கள் ஏன் குற்றமாக பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை ! இது எல்லா துறையிலும் நடப்பது தான். இந்திய அரசு சட்டப்படி, இது ஒரு தொழிலாளியின் உரிமை ! முன் அறிவிப்பு செய்யாமல் சென்றால் ,அது தவறு ,அப்படி ஒரு சிலர் செய்வதற்கு அனைவரையும் குற்றம் சொல்லுவதும் தவறு ! இதயமற்றவர்கள் என்று ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் இழிவு படுத்தாதீர்கள் !

நாரயணமூர்த்தியின் வார்த்தைகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் .." Love your work, not the company.because you never know when company would stop loving you " .

//விடியவிடிய வேலை பார்ப்பான், வெளிநாட்டினர் சுகமாய் வாழ!-----//

வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதனால்தான் இதற்கு பெயர் S/w ஏற்றுமதி.... ஏற்றுமதி அதிகரித்தால் தான் எந்த நாடும் உயர முடியும். இந்திய s/w துறையின் வளர்ச்சிக்கு காரணம் வெளி நாட்டு வாடிக்கையாளர்கள்..அவர்களின் $. அதானால் தான் அதிக லாபம் சம்மாதிக்க முடிகிறது...ஊழியர்களுக்கும் அதிக சம்மளம் குடுக்க முடிகிறது....இந்தியாவின் அன்னிய செலவாணியும் உயர்கிறது. .நீங்கள் செய்திதாள்களில் வாசித்தீர்ப்பீர்கள் ..உலக நாடுகளின் அதிபர்கள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வாங்க என்று வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் . உங்கள் கருத்து படி வெளிநாட்டினர் சுகமாய் வாழ இவர்கள் ஏன் அழைப்பு விடுக்கிறார்கள்? .

தற்போது இந்திய நிறுவனங்களும் (BSNL,AirTel,Relaiance,SBI.....) , இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களும் ( ICICI, HDFC, HSBC ,ESSAR..) s/w பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள், அதற்காக முதலீடு செய்கிறார்க்ள்.. ஆயிரக்கணக்கான software engineer இவர்களுக்காக வேலை பார்க்கிறார்கள். நம்புங்கள் அவர்கள் இந்தியர்களுக்காகவும் வேலை செய்கிறார்கள் !

//சம்பாதித்ததை கொண்டுபோய் "சால்சா"வில் தொலைப்பான்.. ......//

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் , எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! நீங்கள் அப்படியா ? உங்களின் நண்பர்களில் எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! 10% பேர் என்று ஒரு வாததிற்கு வைத்து கொள்வொம்..உங்களுக்கு வேற துறையில் வேலை செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? ! அவர்களிடம் கேட்டுபாருங்கள் இதைவிட அதிமாக/அல்லது ஒத்ததாக தான் இருக்கும் ! என்ன ஒரு வித்தியாசம், அவர்கள் டாஸ்மார்க்கில் குடிப்பார்கள், நம்மாளு பாரில் போய் குடிப்பான்.(நான் பெரும்பான்மையை வைத்து சொல்கிறேன், மற்ற துறை பார் குடிகாரர்கள் கோவித்து கொல்ல வேண்டாம்) குடி என்று பார்த்தால் எல்லாம் ஒண்ணு தான்.....சம்மாதித்த பணத்தில் அதிகமாக "சால்சா" வில் தொலைப்பது கண்டிப்பாக நம்மாளு கிடையாதுங்கோ ! (கட்டிட கூலி தொழிலாளர்கள், சம்மாதித்த பணத்தில் 60% குடிக்காக செலவு செய்கிறார்கள்...பாவம் உடல் வலி போக்க அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி )


//மூளை இருந்தும்... முதுகெலும்பு இல்லாதவன். ..//

இதை எதை வச்சு சொல்றீங்கனு எனக்கு புரியலைங்கே..! எனக்கு தெரிந்த வரை நம்ம துறை சார்ந்த வர்களுக்கு தன்னம்பிக்கையும்(சிலருக்கு தலைக்கணமும்) , சுயமரியாதையும் அதிகம் தான்..குறிப்பா பெண்களுக்கு !

//ஒருமுறை பறந்து சென்று வந்துவிட்டால் போதும்... 50 சவரனில் இருந்து 100 ஆக்கி அவனையே விற்றுக்கொள்வான்.......//

நமது சமூக சூழலில் ,திருமண வரதட்சணை என்பது ஒரு prestige issue - ஆக பார்க்க படுகிறது. நம்முடைய அன்புக்குரியவர்களே அவங்க பையனுக்கு இவ்வளவு செய்தார்கள், நம்ம பையன் வெளி நாட்டிற்கெல்லாம் சென்று இருக்கான் (வெளி நாட்டிற்கு சென்று வருவதைஒரு தகுதியாக நினைக்கிறார்கள் பெரும்பான்மையானோர்) அவனுக்கு இவ்வளவு செய்தால்தான் பெருமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்...பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் தான் இது அதிகமாக இருக்கிறது..பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் மணமகனின் பங்கு என்னவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும் ...so .விற்பது யார்?

(வரதட்சணை வாங்குவதை தவறு என்று தெரிந்தும், அன்புக்குரியவர்களின் குருட்டு பெருமைக்காக செய்ய வேண்டி செய்ய இருப்பதை நினைத்து வெட்கபடுகிறேன்..கண்டிப்பாக அடுத்த தலைமுறையில் இந்த வரதட்சிணை இருக்காது என்று மனப்பூர்வகமாக நம்புகிறேன்.. )

வியாபாரம் என்பது இரு புறமும் சம்மந்த பட்டது ! ஒரு பொதுவான வாதத்தை நான் வைக்கிறேன் நான் தவறா கூட இருக்கலம்..பெரும்பான்மையான பெண்கள்/அல்லது பெண்கள் வீட்டினர், ஏன் மணமகன் அதிக படித்தவர்களாகவோ,அதிகம் சம்மாதிப்பாதிப்போராகவோ ,அதிக உலக அறிவு உள்ளவராகவோ, வெளி நாட்டிற்கு சென்று வந்தவராகவோ ,அல்லது வெளி நாட்டில் வசிப்பராகவோ இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறார்கள் ? அதனால் தானே அவர்களின் சந்தை மதிப்பு உயர்கிறது ! (50 , 100-ஆவது யாரலே?)

பொற்காலம் என்று ஒரு படம் வந்தது ..அதில் முரளி தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை (நான் மேலே கூறியது போல ) தேடி கொண்டே இருப்பார்....இறுதியில் வடிவேல் ஒரு வார்தை சொல்லுவார் .."ஏன்பா உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் தேடினியா ...நான் வசதி இல்லாதவன் என்பதால் தானே என்னை மறந்துட்டேனு"..இதை வரதட்சிணையை ஒழிக்கும் வழியாக நான் பார்க்கிறேன் ...இன்றைய பெற்றோர்கள் பலர், ஊர் பெருமைக்காக தன் மகனை பெரிய இடத்திலோ, தன் மகளை வெளி நாட்டிலோ திருமணம் செய்து கொடுத்து விட்டு தன் பிள்ளை களை பிரிந்து வருத்தபடுகிறார்கள். (கையில் வெண்ணையை வத்து கொண்டு நெய் அலைவார்கள் சிலர் என்பது பழமொழி)

//ஆனால் வாங்கத்தான் ஆளில்லை... வேலை இல்லாதவனங்கள, யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...??? //

இதுவும் புரியலே...வேலை இல்லாதவனங்கள?? நீங்கள் s/w துறையில் வேலையிழ்ந்தவர்களை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறென் ! உங்களுக்கு தெரியமா,சமீபத்தில் நடந்த அமெரிக்க குழறுபடிகளில் வேலை இழந்தவர்களில் , s/w - துறையை சாராதவர்கள் தான் அதிகம்..
எந்த தனியார் துறையிலுமே, திறமை இல்லாதவர்கள் அதிக நாள் நீடிக்க முடியாது...திறமை உள்ளவர்கள் ,வேலை இழந்ததாலும் வேற வேலை கிடைக்க் ரொம்ப நாள் ஆகாது....

IT - துறையை பற்றி அறியாதவர்கள் தான், ஊடகங்களின் எதிர்மறையான விமர்சனத்தை படித்தும்,சிலர் படித்தவனுக்கெல்லாம் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கிறதே ..இனி நாம வேலை இல்லாத பட்டதாரிகள் அவர்கள் படிப்பிற்கேற்ற வேலையை எதிர் பார்க்காமல்..சுயதொழில் செய்ய வேண்டும்னு timepass அறிவுரை சொல்ல முடியாதே என்றும், சிலர் பொறாமையின் காரணமாகவும் நம்மை தவறாக சித்தரிக்கிறார்கள்..
IT- துறையை சார்ந்த நீங்களுமா ? ! நான் IT- துறையில் இருப்பவர்கள் எல்லாம் மகாத்மா என்று சொல்லவில்லை ..ஆனால் அவர்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பதை தான் எதிர்க்கிறேன். உங்கள் கவிதையின் பொருள் தவிர மற்றவை நன்று !

என்னுடைய பதிவின் பேரும் வளர்பிறை தான்..

வளர்பிறை என்று சொல்லிலே ஒரு positive இருக்கிறது.. positive -வா நினைப்போமே ...!..

நானும் IT - துறையை பற்றி எழுதி இருக்கிறேன்
(http://m-valarpirai.blogspot.com/2009/01/it.html) ...நேரம் இருந்தால் படியுங்கள்..உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்......

இப்படிக்கு உங்கள் நண்பன் .


Friday, January 16, 2009

தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்! -அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! -இன்பத்தமிழ் எங்கள்சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! -இன்பத்தமிழ் எங்கள்வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! -இன்பத்தமிழ் எங்கள்உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -இன்பத்தமிழ் நல்லபுகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச்சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்குவயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Monday, January 12, 2009

IT - தொழிலாளார்கள் - தொடர்ச்சி

( முதல் பகுதியை படிக்க click here )

சினிமாதான் இப்படி இருக்கிறது என்று சின்னதிரை பக்கம் வந்தால் அங்கேயும் இதே கூத்துதான் !

நீயா நானா என்ற பிரபலமான நிகழ்ச்சி..தலைப்பு IT vs Non-IT Employees!
அதில், ஒருத்தர் சொல்றாரு, ஒபாமா வெற்றி பெற்றவுடன் Outsourcing-i தடை செய்ய இருப்பதாக அறிவித்ததாகவும்,
அதை அவர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும்! அடுத்தவன் கெட கூட இல்லை,கெடுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடியது மனநோயா இல்லையா? இத்தனைக்கும் அந்த அடுத்தவன் எதிர் வரிசையில் அமர்ந்த்திருக்கும் அவரது சகோதரர்....எனக்கென்னமோ அந்த நிகழ்சசியை நடத்திய கோபிக்கும் இந்த கருத்தில் உடன்பட்டது போல தான் இருந்தது ! ஏன்னா அவர் கேட்ட கேள்விகள், நிகழ்ச்சியை நடத்திய விதம் எல்லாமே அப்படிதான் இருந்தது !
நான் சின்ன வயதில 9ம் வகுப்பு வரையில் பெரும்பான்மையான தேர்வில் முதல் ரேங்க் எடுப்பேன் ! ஒன்று இரண்டு முரை தவறவிட்டதுண்டு ! அப்படி ஒரு முறை தவற விட்ட போது,எங்க அப்பா "ஏன்பா இந்த முறை முதல் ரேங்க் எடுக்கல ? " அப்படினு கேட்டாரு..நான் சொன்னேன் , "சிவா (என நண்பன்) மட்டும் என்னோட 5 மார்க் கம்மியா எடுத்திருந்தா நான் தாப்ப இந்த முறையும் முதல் ரேங்க் வாங்கிருப்பேன் " என்று ..அதற்கு எங்கப்பா சொன்ன பதில் இன்னமும் காதில் ஒலிக்கிறது... "கண்ணு நீ மற்றவர்களை விட அதிக மார்க் எடுக்கணும் தான் நினைக்கனும் , அதை விட்டுட்டு அடுத்தவர்கள் உன்னை விட கம்மியா வாங்கனும் நினைக்க கூடாதுடா கண்ணு"..அவர் ரொம்ப படித்தவர் கிடையாது ! அவருக்கு தெரிந்தது, இன்றைய படித்த சிலருக்கு தெரியவில்லை !
ஒரு மனிதன்/மனிதர்கள் ,தன்னை மற்றவர்களோடு compare பண்ணி ,அடுத்தவர்களை எதோ ஒரு காரணத்தை காட்டி அவன் தாழ்ந்தவன் என்றும் ,தான் உயர்ந்தவன் என்றும் காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்கள் ..அதற்கான் ஒரு காரணம் தான் சாதி ! அதைப் போல ..
IT- employee -என்றாலே , ஊதாரி, பந்தா party, பொண்ணு களோடு ஊரு சுத்தறவன், சமூக அக்கறை இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி அவர்கள் தாழ்ந்தவர்கள்..என்று அவர்களை மட்ட படுத்தும் செயல்தான் ,அவர்களை பார்த்து பொறாமைபடுவர்களும், இன்றைய IT employee க்கு எதிராக வரிந்து கட்டி கொண்டு செயல்படுவர்களின் செயல்.
IT employes குருதி கொடை நிகழ்ச்சி, ஏழைகளுக்கு படிப்பதற்கான் உதவிகள், கண் பார்வை இழந்தவர்களுக்காக தேர்வு எழுதுதல் என்று அவர்களால் முடிந்த நிறைய செய்கிறார்கள்..அதற்கு அவர்கள் வருமானம் காரணம் ...ஆனால் இதை எல்லாம் எந்த பத்திரிக்கைளும் சிறிதாக கூட போடுவதில்லை, ஆனால் ECR ரோட்டில் ஏதோ ரெண்டு பன்னாடைகள் ஒன்னா சுத்தினா ! உடனே பெரிசா போட்டு IT - வந்ததால்தான் இப்படி கலாச்சார சீரழிவு ஏற்பட்டதாக சிறப்பு பார்வை போடுகின்றன ! அவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதால் இப்படி இருக்கிறார்கள் என்று தீர்ப்பு சொல்றாங்க ! என்னத்தை சொல்றது இவங்களை எல்லாம் !
இன்னும் ஒரு பரவாலான் குற்றசாட்டு ! IT -யால IT company இருக்கிற ஏரீயாவில் வாடகை அதிக மாயிடுத்து ! இதை வேனா நான் ஒத்துகிறேன் !
ஆனா ,இதற்கான் அடிப்படை காரணம் ஒழுங்கான சட்டம் இல்லாதுதும், அதை சரியா கடைபிடிக்காததும்தான்...வெளிநாடுகளில் இந்த சட்டம் சரியா கடைபிடிக்க படுது ! IT மட்டும் இல்லை எந்த ஒரு வருமானம் அதிகமாக வரும் துறை சார்ந்த பகுதிகளிலும்/மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதிகளிலும் இந்த மாதிரி வாடகை அதிகம் தான்.. உதாரணம் மும்பை !
so நீ என்ன தாண்ட முடிவா சொல்லவற? அப்படினு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது ! நான் என்ன சொல்றேனா !

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை , உயர்ந்தவர்களும் இல்லை ..







Monday, January 5, 2009

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை ,உயர்ந்தவர்களும் இல்லை

IT - தொழிலாளார்கள் எந்த விதத்திலும் மற்ற துறை சார்ந்த
தொழிலாளார்களை விட தாழ்ந்தவர்களும் இல்லை , உயர்ந்தவர்களும் இல்லை , ....


தலைப்பை படித்தவுடனே உங்களுக்கு புரிந்திருக்கும் நான் IT துறையை சார்ந்தவன் என்று. இருந்தாலும் நான் நடுநிலையாகவே என் கருத்துகளை பதிவு செய்ய ஆசைபடுகிறேன்..
அது என்னமோ தெரியலை , சினிமா துறையை விமர்சிப்பது போலா, IT துறையை சார்ந்தவர்களை ஒரு பலர் கேவலமாகவும்,சிலர் பிரம்மிப்பகாவும் விமர்சிக்கிறார்கள்....
IT - துறையினர், அதிகமாக சம்பாதிக்கிறார்கள், இவர்களை ஏமாற்றினால் தப்பில்லை என்று கூட சிலர் ஏமாற்று வதை நியாயப்படுத்துகிறார்கள்... உதாரணம் கிரடிட் கார்டு முதல் ரியல் எஸ்டேட் வரை.... அது என்னமோ தெரியலை, எந்த சினிமாவிலும் software engineerai தாலி கட்டவே விடுவதில்லை... அந்த பொண்ணு எவானவது பொறுக்கி Hero வை காதல் பண்ணும் , அப்பாவி software engineeru சின்ன வயதில் இருந்து ஒழுங்கா படித்து , கஷ்டப்பட்டு கவுன்சிலிங் எழுதி engineering/MCA pass பண்ணி , கேம்பஸ்சில் முக்கி முக்கி select agi,கேம்பஸ் ஊத்திகிட்டா, சென்னையிலோ ,பெங்களூரிலோ ரோடு ரோடா அலைந்து OFF-CAMBUS லோ, இலலாட்டி ஒரு Couresa படித்து அதன் மூலாமாகவோ வேலை வாங்கி,அப்புறம் இரவெல்லாம் முதுகு வழிக்க / உடம்பை கெடுத்துகிட்டு office la உட்கார்ந்து வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா நல்ல பெயர் வாங்கி ,ஒரு onsitea வாங்கிட்டு போய்,அங்க காசை மிச்சம் பண்ண அவன் சமைச்சதை கஷ்டப்பட்டு அவனே சாப்பிட்டுட்டு, கொஞ்சம் காசு சேர்ந்ததும் ( இந்த scene எல்லாம் எந்த சினிமாவிலம் வாரது..பெரும்பான்மையான் IT - தொழிலாளார்களின் நிகழ்வுகள் இப்படிதான் இருந்திருக்கின்றன் எனக்கு தெரிந்த வரையில்), சரி கல்யாணம் பண்ணிகலாம்னு வருவான்....சரியா தாலி கட்றப்ப அந்த hero வந்து பொண்ணை கூட்டிட்டு போயிடுவார் ! அந்த software engineer-இ கேனப்பயலாட்டும் காட்டுவானுங்க.கேமராவில்....திரையரங்கில் எல்லாரும் கரவொலி எழுப்புவார்கள்....மக்களே இது நியாமா !


கற்றது தமிழ்- என்று ஒரு படம். ...அந்த படத்தை பார்க்க , office-க்கு மட்டம் போட்டுட்டு ,அடித்து பிடித்து திரையரங்கிற்கு சென்ற தமிழ் மீது பற்று கொண்ட software engineer-ல் நானும் ஒருத்தன்..... படத்தில் கருத்துகளை விட கொலைகள் அதிகம். அதைப்பற்றிய விமர்சனத்துக்கள் செல்ல விரும்பவில்லை ..அதில் வரும் IT துறை சார்ந்த கருத்துகளுக்கு மட்டும் என்னுடைய தாழ்மையான பதிலை சொல்ல விரும்புகிறேன்........
1. 2000 வருட தமிழ் படித்த எனக்கு குறைந்த சம்பளம் , இப்ப வந்த computer படித்த அதிக சம்பளமா ! -

இப்ப வந்த computer படித்த, பள்ளிகளில் வேலை செய்யும் பட்டதாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் கேட்டு பார்த்தால் தெரியும்...இந்த் கேள்வியை "சொல்லிதரும் எனக்கு குறைந்த சம்பளம், படித்த உனக்கு அதிக சம்பளமா " என்று தான் எடுத்து கொள்ள வேண்டும் ....என்னை பொருத்த வரை அடுத்தவன் தன்னை விட தாழ வேண்டும் என்பதை விட ,தான் அடுத்தவர்களை விட உயர வேண்டும் என்று நினைப்பதுதான் நல்ல சிந்தனை !

2. பெயரை மாத்தி கொள்கிறர்கள் ,கொஞ்சம் காசு அதிக கொடுத்தா..அம்மா வை மாத்திடிவா -
திரு ராம் அவர்களே, சினிமாவில் எத்தனைய் பேரு தனது சொந்த பேரை பயன்படுத்துகிறார்கள் ...உங்களுடைய சொந்த பெரு ராமா ? நீங்கள் செய்தால் அது professionalism.நாங்க செய்தால் அது கேவலம் ! இந்த கேள்வி இந்த காட்சியை பார்த்துது கை தட்டி ஆமோதித்த அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும்.... (உங்களுடைய சொந்த பெயரியலா பதிவு எழுதுகிறீர்கள் ? ) ..censor போர்டுவுக்கும் .. அம்மாவை இந்த வசனத்தில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களை பொருத்த வரை, படித்தவர் எல்லாம் வேலை இல்லாமல் அலைய வேண்டும்..BPO வேலைக்கு போககூடாது...அப்போது தான உங்கள் படத்தை பார்க்க வருவார்கள்.....ஒருவரை/ஒரு செயலை உயர்த்துவதற்காக மற்றவர்களை கேவலமாக சித்தரிக்காதீர்கள்!

3. Dare to touch - nu ஒரு பொண்ணு T-shirt ல எழுதி இருக்கா, உடனே - hero போய் touch பண்ண முயற்சிக்கிறான் !
.இது ஆணாதிக்கதின் வெளிப்பாடா இல்லையா ! என்னை பொருத்த வரை தான் எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்....98% பெண்கள் நாகரீகமாக தான் உடை அணிகிறார்கள்...சில பெண்கள் நாகரிக குறைவாக ஆடை அணிகிறார்கள்....அவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள் ! IT துறையை மட்டும் குறை சொல்லுவது ..அபத்தம்......பெண்கள் இவ்வளவு தன்னம்பிக்கை உடன் இருக்கிறார்களே என்ற பொறாமையின் வெளிப்பாடு தான் இந்த காட்சி !

4. பெண்கள் நாகரிக குறைவாக ஆடை அணிகிறார்கள்....அதனால் ஆண்களுக்கு இட்சை அதிகமாக வருதாம்
இந்த கருத்து இந்த படத்தில் மட்டும் இல்லை நிறைய படத்தில் வருது ! நீயா நானா வில் கூட விவாதிக்க பட்டது ...நான் மதிக்கும் அமிர் கூட இந்த் கருத்தை வழிமொழிந்தார்.இந்த கேள்விக்கு சற்று தரம் தாழ்ந்து பதிலை சொல்லுகிறேன்.. ..மன்னிக்க வேண்டும் அன்பர்களே! .



so இந்த நாட்டில் சேலை கட்டிய பெண்கள் யாரும் இதுவரை கற்பழிக்க படவில்லை என்றே வைத்துகொள்வோம் ! இந்த கருத்தை ஆமோதிக்கும் ஆணாதிக்க பண்பை தெரிந்தோ தெரியாமாலோ மனதில் வைத்து இருக்கும் நண்பர்களே ! மனதை தொட்டு சொல்லுங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் பெண்களின் சேலை/சுடிதார் விலகும் பொது நீங்கள் சில நொடிகளேனும் ரசித்ததில்லை ? so தவறு யார் மீது ? அதற்கு வேண்டுமானால் இயற்கை கொடுத்த எதிர் பாலின கவர்ச்சி பண்பை நாம் சப்போர்ட்டுக்கு கூப்பிடலாம் ! அதற்காக பெண்களை குற்றம் சொல்லலாமா ! தவறு செய்பவன் பெண்கள் என்ன ஆடை உடுத்தி இருந்தாலும் ...தவறான இடத்தைதான் பார்ப்பான் ! சில பெண்கள் அந்த தவறான ஆண்களுக்கு வசதியாக உடை அணிகிறார்கள் அவ்வளவு தான்.. நாம் வேண்டுமானால் , பெண்களிடம் நாங்கள் திருந்தும் வரை கவர்ச்சி இல்லாமல் உடை அணியுங்கள் என்று கோரிக்கை விடுக்கலாமே ஓழிய! கட்டளையிட கூடாது என்பது என் கருத்து...

சினிமாதன் இப்படி இருக்கிறது என்று சின்னதிரை பக்கம் வந்தால் அங்கேயும் இதே கூத்துதான் ! - தொடர்கிறேன் அடுத்த பதிவில் !







கருகிய ரோஜாவும் கடைசி கேள்விகளும் ! - வைரமுத்து


Please click on post to expand and read

Sunday, January 4, 2009

எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்

எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்
உதாரணங்கள்
இந்துவா - இஸ்லாமா - பாபர் மசூதி இடிப்பு - இழப்பு சில ஆயிரம் உயிர்கள் , இன்னும் தொடர்கிறது
இந்துவா/கிறித்தவமா - ஒரிசா வன்முரை
யூதர்களா / இஸ்லாமா - பாலஸ்தீன பிரச்சனை
பாகிஸ்தனா/இந்தியாவா - காஷ்மீர்
அமெரிக்காவா/அதன் எதிர்ப்பு நாடுகளா - ஈராக் போர் , இன்னும் பல ....
ஒரு இராணுவ குழுவா/மற்றொன்ரா - ஆப்பிரிக்கா நாடுகளில் நிலையற்ற ஆட்சி
சிங்களனா/தமிழர்களா - இழப்பு சொல்லி தெரிய தேவையில்லை , இதில் என்ன கொடுமை என்னவென்றால் உலக நாடுகள் இதை ஒரு பொறுட்டாகவே கருதவில்லை
கன்னடர்களா/ தமிழர்களா - வருடா வருடம் கருகும் பயிர்கள்,அதனால் வாடும் விவசாயிகள், பிரச்சினை வரும் பொழுது எல்லாம் பாதிக்க படும் கர்நாடக தமிழர்கள்
ஹிந்தியா/தமிழா - நாட்டின் பெரும்பான்மை மொழி தெரியாது 99% தமிழர்களுக்கு...
உயர் சாதியா / தாழ்த்தபட்டவர்களா - இழப்பு இன்னமும் தொடர்கிறது ..சட்டகல்லூரி உட்பட....
ஜெயலலிதவா/கருணாநிதியா - இன்றும் கண்ணில் இருப்பது மூன்று வேளாண்மை கல்லூரி மாணவிகள் , கண்ணுக்கு தெரியாமல் பல
மாறன்ஸ்/அழகிரியா - இன்றும் கண்ணில் இருப்பது மூன்று அப்பாவிகள் ..
இப்படி அடிக்கி கொண்டே போகலாம்...ஆனால் பிரச்சினைகளை உற்று நோக்கினால் .....
எது உயர்ந்தது , யார் உயர்ந்தவர் என்ற ஆரோக்கியமற்ற போட்டி தான் உலக பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் ......

Friday, January 2, 2009

எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........

எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........

என் அம்மா - வேண்டாம் அவளை பற்றி எழுத ஆரம்பித்தால் முடிக்க இயலாது....

என் அப்பா - வேண்டாம் நான் அழுது விடுவேன் ..
என் பள்ளி பருவம் - வேண்டாம் அது ஏட்டு சுரைக்காய்
என் கல்லூரி காலம் - வேண்டாம் அதில் நான் நானாக இல்லை ... .
என் நண்பர்கள் - வேண்டாம் சிலர் கோவித்து கொல்லலாம்...உண்மையை சொன்னால் ...
என் வேலை தேடிய அலைந்த காலம் - வேண்டாம் அது நான் தமிழ் மீது கோபபட்ட காலம் ....கொஞ்சம் விரக்தி மிகுந்தது
என் முதல் வேலை - வேண்டாம் அது நான் கொஞ்சம் அச்சப்பட்ட காலம்
என் வேலை தொடர்பான் வெற்றிகள் - வேண்டாம் அதில் என் அளவுக்கு மீறி உழைத்த காலம்...
என் முதல் வெளி நாடு பயணம் - வேண்டாம் அது நான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவன் என என்னை அரைந்து சொன்ன காலம்
என் தமிழ் பற்று - வேண்டாம் ,அது சீமானை விட கம்மி தான்
என் கடவுள் நம்பிக்கை - வேண்டாம் சில நேரங்களில் அதை இழப்பது உண்டு ....
என் நேர்மை - வேண்டாம் ,அது சில இடங்களில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தவறி இருக்கிறது !
என் உணர்ச்சிவசம் - வேண்டாம் அது என் பலகீனம்
என் திரோணாட்சாரியார்கள் - வேண்டாம் ,என் கட்டை விரலை கேட்டாலும் கேட்பார்கள்......
என் எதிர் கால வாழ்க்கை துனணவி - வேண்டாம் , அவள் என்ன பாவம் செய்தாலோ என்னை மணக்க !
என் இந்தியா - வேண்டாம் ,அதன் மீது இப்பொது கொஞ்சம் கோபம் இருக்கிறது ...
இஸ்ரேலுக்கு அழுகிறது..ஈழத்திற்கு மௌனம்.
நான் விரும்பும் அரசியல்வாதிகள் - வேண்டாம் அவர்களை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் !

சொல்லுங்கள் எதைப் பற்றி எழுத என் முதல் பதிவில்........