Thursday, April 25, 2013

அமைதி

1.அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிரு. துயரம் வரும்போது அதை அடையாளம் கண்டு கொள். அது நல்லது கெட்டது என்றோ இது எனக்கு வந்திருக்கக் கூடாது என்றோ வந்திருக்க வேண்டும் என்றோ மதிப்பீடு செய்யாதே. துன்பம் வந்திருப்பதை பற்றி மட்டும் விழிப்போடு இரு. அதை உணர்ந்திரு.

2.மகிழ்ச்சியை உண்டாக்க முயற்சி செய்யாதே. செய்தால் அடுத்த பக்கமும் சேர்ந்தே வரும். மகிழ்ச்சி வந்தால் அதை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதே. இல்லாவிடில் மற்றொரு பக்கத்தையும் சேர்ந்தே அனுபவிக்க நேரிடும். திரும்பவும் துயரம் வந்து சேரும்

3.நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் துன்பம், மகிழ்ச்சி இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தால் திடீரென ஒரு நாள் நீ தனித்து இருப்பதை இரண்டிலிருந்தும் தனியாக பிரிந்து இருப்பதை, உணருவாய். இந்த விஷயங்கள் அனைத்தும் உன்னைச் சுற்றி நடப்பவை மட்டும்தான். நீ அவற்றிற்க்கு அப்பாற் பட்டவன் என்பது உனக்கு தெரிய வரும். இந்த தனித்து இருத்தல்தான் பிரபஞ்ச ஆன்மா. அப்பாற் பட்டு இருத்தலின் நடப்பு, இரண்டையும் கவனித்து பார்த்தாலும் இரண்டையும் தாண்டி இருக்கும் இந்த இருப்பு, என்ற இந்த கணம்தான் நீ முழுமையானதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும் நேரம். நீ வெறுமையாகவும் இல்லை, அல்லது நிரம்பி வழிபவனாகவும் இல்லை.

ஏனெனில் நீ மகிழ்வும் அல்ல துயரமும் அல்ல என்பதை நீ உணர்ந்திருக்கிறாய்.

Friday, August 3, 2012

அவள் அப்படி ஒரு அழகு

(அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - நா . முத்துகுமாரின்  எழுத்தின் மூலம் என் எண்ணம் என்னவளுக்கு !)

அவள் அப்படி ஒரு அழகு
ஆனால் அவள் அப்படி நினைப்பதில்லை
அவள் அப்படி ஒரு  கலர்
ஆனால் அதை அவள் நிறையாய் நினைப்பதில்லை
அவள் பெரிதாய் தான் படித்திருக்கிறாள்
ஆனாலும் அதை குறைவாய் மதிப்பிடுகிறாள்.

அவள் உடுத்தும் உடைகள் பிடித்திருக்கும்
இருந்தும் எனக்காக மாற்ற மறுப்பதில்லை
அவள் மீன் குஞ்சுகள் மீது அன்பாய் இருக்கிறாள்
நான் அவைகள் மீது பொறாமை படுகிறேன்
நான் பொம்மைகள் அணைத்து உறங்குகிறேன்
பொம்மைகளுக்கு அவள் பெயரை சூட்டியதால்
அவள் கூந்தல் ஒன்னும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை.

என் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
ஆனாலும் அவளுக்கு என் கைப்பிடிக்கும் ஆசைகள் நீங்கவில்லை
அம்மாவுக்கு பின் அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுபுடவைகள் என்றும் விரும்பவில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கறை போல வேறுஇல்லை
அவள் கூந்தலில்லாத  பூக்களுக்கு வாசமில்லை
அவள் இல்லாமல் இனி என் சுவாசமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை!!!

-முரு

~~

Monday, May 21, 2012

வாழ்க்கையின் பாதையிலே - N. Ganeshan

வாழ்க்கையின் பாதையிலே
வெகுதூரம் செல்கையிலே
கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கள்ளிச்செடி உள்ளிருக்கும்
பாதையை நீ பழிக்காமல்
பார்த்து நட மானிடனே!

பாராட்டு சில நேரம்
வசைபாட்டு சில நேரம்
பாராமுகமாகவே
ஊரிருக்கும் பல நேரம்
மனமுடைந்து முடங்காமல்
தினம் செல்வாய் மானிடனே!

சில சமயம் துணையிருக்கும்
சில சமயம் பகையிருக்கும்
பல சமயம் தனித்தே நீ
பயணிக்கும் நிலையிருக்கும்
இறை இருப்பான் துணையென்று
முறை நடப்பாய் மானிடனே! - N. Ganeshan

Saturday, November 19, 2011

கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19

 ~

லோக்பால்  - சட்டம் ஊழலை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
லோகபாலால் ஊழல் ஒழிக்கப்படும் என்று நம்புகிறவர்களுக்கு இதோ பட்டுக்கோட்டையின் பாட்டு. "சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்கிறது, ஆனால் திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டே இருக்கிது" .லோக்பால் லஞ்சத்தை பண்ணி என்ன சொல்லுது தெரியல.. லஞ்சம் என்பது வேற ஊழல் என்பது வேற .ஊழலையாவது  ஒழிக்க லோக்பால்  - சட்டம் உதவும் என்று நம்பபடுகிறது. ஆனால் லஞ்சத்தை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதுக்கு e-governance வந்தால் மட்டுமே முடியும்.

வேலாயுதம், ஏழாம் அறிவு - ஏழாம் அறிவு எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது. இன்னும் என்ன தோழா ஏழாம் அறிவின் ஒரு பாடல் போதும் படம்பிடிக்க காரணம். வேலாயுதம் ஒரு மொக்கை. சந்தானம் காமெடி தவிர. ஏழாம் அறிவு உதயநிதி தயாரிப்பால், அதுக்கு எதிரா எவ்வளவு பரப்புரைகள் தூற்றல்கள் கேள்விகள். வேலாயுதம் என்ற அருத பழசான மசாலா சீன்களின் தொகுப்பை தமிழ் நாட்டில் வெற்றிபடமாக்கிவிட எவ்வளவு முனைப்புகள்.  அரசியலிலும் சரி, சினிமாவில் சரி.  மொத்தத்தில் தழிழர்கள் மசாலா பட ரசிகனாகவே வைத்திருக்க வேண்டும்,சிந்தித்துவிட கூடாது என்றஒரு  கூட்டம் இயங்கி கொண்டே இருக்குது.காலம் மாறும் காட்சிகள் கண்டிப்பாக மாறும்.

கூடங்குளம் அணுமின் நிலை விவகாரத்தில் மக்கள் போராட்ட குழுவாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றபடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு கண்டிப்பாக எதோ ஒரு சக்தி பின்னால் இயக்குகிறது. பூகம்பம் வந்தா என்னாகும் , பூமீ  இரண்டா பிளந்தா என்னாகும் என்ரறெல்லாம் கேட்கிறார்கள். ஜெர்மனியில் மூடிட்டாங்க அப்படினு மேற்கோள் காட்றாங்க.ஜெர்மனியா நம்ம? சோத்துக்கே வழியில்லாம நாம கிடக்கோம்.. உலகில் 165 அணு உலைகள் இயங்குதே அப்ப அவன் எல்லாம் என்ன கேனப்பயலா.அவ்வளவு ஏன் கல்பாக்கம் அணுமின் நிலையும் இருக்கே, அங்க பூகம்பம் வந்தா மட்டும் நமக்கு பாதிப்பு இருக்காதே. ஊகங்களை கேள்வியாக்கி புரட்டி பண்றோம் போராட்டம் பண்றோம்னு ஒரு நல்ல திட்டத்தை முடக்க இவ்வளவு தீவிரம் ஏன்? . அரசாங்கம் மக்களிடம் இருந்து இடங்களை பிடுங்கிகிட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்த மாதிரி தெரியல. அப்துல்கலாம் தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த சில திட்டங்களை சொல்லி இருக்கிறார். அதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.விரைவில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.

~

Saturday, September 10, 2011

நகரம் - கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம் நூலிருந்து !

~
அவசர மனிதர்கள் கடுகடுத்த முகங்கள்
பேரிரைச்சலாய் எழுந்து பேரிரைச்சலில் அடங்கும் நகரம்

மரியாதை நிமித்தங்களுக்கு நேரமற்ற மொழி.
இருபது வருடம் கழித்து பார்ட்டியில் பார்த்து
என் பக்கத்து வீடா நீங்கள் என வினவும் வாழ்க்கை.
Waiting List டிக்கெட் confirm - ஆனதில் வாழ்வின் மொத்த மகிழ்ச்சியை அடையும் மக்கள்.இதில் வேரறுத்து ஓடிவிடும் கனவோடு நாட்களை நகர்த்தும் மனிதர்கள்.

இந்த அழுக்கிலும் சந்தடியிலும் கரைந்து போகிறது கடந்த காலங்கள்
மாமாவின் மதமாற்றம், தாயின் ஜாதி, தாத்தாவின் சிறைவாசம், தந்தை அறியா பிள்ளை,
செல்போனில் முகம் தொலைத்த மனிதர்களின் ஜோதியில் சரித்திரங்கள் கரைந்தன.
சென்றவாரம் வீட்டிற்கு வந்தவனும் இன்று சினிமாவில் பார்த்தவனும் ஒன்றா சிந்திக்க நேரமில்லை.

சரவணபவனுக்கும் பீட்ஸா கார்னருக்கும் விருது நகருக்கும் இடையே
பிசிறில்லாமல் ஊடாடும் வாழ்வில், இதமாய் ஏந்தும் இந்த சந்தடி மிகுந்த கான்கிரீட் நகரத்துள்
தொலைந்து போகிறேன் கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்.

~

Monday, July 25, 2011

காதல் - எனக்கு பிடித்த வரையரைகள் (Definitions)

~

காதல் என்பது உடலா உணர்வா
காதல் என்பது பரிவா பாசமா
உடல் மட்டுமே காதல் எனில் வினை முடிக்க ஒரு விலைமகள் போதும்
உணர்வு மட்டுமே காதல் எனில் காதல் கொள்ள ஒரு கடவுள் போதும்
பரிவு மட்டுமே காதல் எனில் பழுத்து நரைத்த பாட்டியே போதும்
பாசம் மட்டுமே காதல் எனில் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும்
உடல் கொஞ்சம் உணர்வு கொஞ்சம் பாசம் கொஞ்சம் பரிவு கொஞ்சம்
கொஞ்சம் பகுத்தறிவு நிறைய மூட நம்பிக்கை எல்லா வஸ்தும் ஒன்று திரட்டி
இதயம் என்ற மிக்சியில் அரைப்பது காதல்  -வைரமுத்து

காதல் என்பது என்ன..-  உடலா உள்ளமா?
உடல் மட்டுமே காதல் என்றால் ஒரு விலைமகள் போதும் காதலிக்க
உள்ளம் மட்டுமே காதல் என்றால் ஒரு பாமரேனியன் நாய் குட்டி போதும் காதலிக்க
உடலும் உள்ளமும் எந்த ஒரு புள்ளியில் சந்திக்கிறதோ அதுதான் காதல் ! - வைரமுத்து !

24 வயதில் இது தான் உலகம் என்று நினைத்த ஒன்று,
42 வயதில் இதற்காகவா இப்படி இருந்தோம் என்று தோன்றும்
அதுதான் காதல் - பத்மஸ்ரீ கமல்ஹாசன்

~

Monday, July 18, 2011

நதியும் பெண்ணும் - வைரமுத்து !

~

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ!
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றாள் தாயல்லோ !

காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவோம் கோடையிலே

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு!

மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அதுவே நங்கையின் குணமே!

தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே!
தாயருகில் சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே !

பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள்யாவும் கரைந்து போககூடும்


~