~
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா
என் கனவோடு கேட்கின்ற கால்சலங்கை நீயா
பேச்சுக்கு உயிர்தந்த சப்தங்கள் நீயா
எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா
எனை சாகாமல் செய்கின்ற சங்கீதம் நீயா
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா
இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்னியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்!
~
Saturday, October 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......
Post a Comment