Sunday, December 6, 2009

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

~

பேரழகி எதிர்ப்பார்பில்லை - என் முகத்தை
தினமும் கண்ணாடியில் பார்பதுண்டு !
செக்க சிவப்பு தேவையில்லை -
நான் தமிழன் ! தமிழச்சியின் நிறம் போதும் !

நீங்கா புன்னகை போதும் , பொன்னகைகள் தேவையில்லை !
தனிமை பிடிக்காது எனக்கு ! எப்போதும் உன் அருகிலே இருப்பேன்
இம்சை தான் ! பதிலுக்கு நீயும் அதையே செய்யலாம் !

நேசமிகுந்தவர்களின் மீது கோபம் வந்தால் மெளன ஆயுதம் ஏந்தி கொள்வேன்
மெளன ஆயுதம் தாங்கும் மெளன கேடயம் இருந்தால் போதும் உன்னிடம்
சமாளித்துவிடலாம் என் கோபத்தை !

புத்தகப் பிரியன் நான் அதனால் சில நேர செய்திகள் தவிர தொலைகாட்சியை நீயே கையாளலாம் !
வருமானம் பரவாயில்லை கைவசம் கணிப்பொறி வேலை !
வேலை போனாலும் உழைப்பாளிகளுக்கு அடுத்த வேலை கிடைக்க அதிக நாள் ஆகாது
அதனால் உன்னை பசிக்க விடமாட்டேன் !

காதல் எனக்கு வாய்பளிக்கவில்லை வாய்ப்பு உருவாகும் சந்தர்ப்பங்களை என் விருப்பத்திற்கு மாறாக நானே தவிர்த்ததுண்டு !
நீண்ட நாட்களாக காதல் என்னுள் சிறைப்பட்டு கிடக்கிறது ..நீ வந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கும் ~

திருமணத்துக்கு முன்போ/பின்போ நடந்த / நடக்கும் நிகழ்வுகளில் என்னிடம் சொல்ல நினைப்பதை ம்ட்டுமே கேட்க எனக்கு ஆவல்.
தவிர்கக நினைப்பதில் முழு சுதந்திரம் உண்டு உனக்கு !
உன குடும்ப மகிழ்/துக்க தாக்கத்திற்கு மதிப்பளிப்பேன்! உன்னிடம் அதையே எதிர்பாப்பேன் !

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

ஒன்று !
மூட நம்பிக்கைகளில் , பஞ்சாங்க நேரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை !
ஆனாலும் பெற்றோர் எனக்குள் ஏற்படுத்திய இந்த நம்பிக்கைகள் மீதான் உளவியல் தாக்குதல்
எப்போதாவது எட்டி பார்க்கும் அதை தவிர்க்கவே நினைக்கிறேன்..
கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும்

இரண்டு !
ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் என் பெற்றோர் மனம் கலங்கி விடக்கூடாது !
வாழும் இன்னும் சில் வருடங்கள் மகிழ்வோடு வாழவேண்டும் அவர்கள் !
அதற்கான உன் கோபங்களை / சங்கடங்களை பொழிய உனக்கு தடையில்லை நான் இருக்கிறேன் அதற்காக !

~
Note:- கவிஞர் யுகபாரதியின் ஒரு கவிதையை படித்த பாதிப்பில் என் உணர்வுகள் அதே சாயலில் !

~

No comments:

Post a Comment