Sunday, November 14, 2010

விடியாத இரவென்று எதுவும் இல்லை - வைரமுத்து

~

விடியாத இரவென்று எதுவும் இல்லை
முடியாத துயரென்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை

இனி அச்சம் அச்சமில்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறி போச்சு நம் கண்ணீர் மாறி போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

பட்டாம்பூச்சி சுற்றும் அட மனிதன் என்ன மட்டம்
அடி இன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையை தட்டும்
வாடி இளைய செல்வியே நம் காலம் சொல்லும் நம்மை வாழ சொல்லியே
அம்மா அழகு கண்ணம்மா இது நம்ம பூமி என்று அழுத்தி சொல்லம்மா !

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் எங்கள் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி திறந்து கிடக்கு அட மனித பய மனசு பூட்டி கிடக்கு

இன்ப காற்று வீசட்டும் எட்டு திக்கும் பரவட்டும்
மனித பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் மாறட்டும்
பட்டம் பட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச் சிறகில் குஞ்சை போலவே பூமிபந்து உறங்கட்டும்
இரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதா விடியட்டும் !

~