Saturday, February 20, 2010

வேலைக்கும் போகும் பெண் - வைரமுத்து !

~

இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது
இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ?
பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால்
பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும்
என்று கருதியவள் போன நூற்றாண்டு பெண்
ஆனால் பொருளாதார விடுதலை கூட சில
புதிய விலங்குகளை பூட்டியிருக்கிறது
என இனங்கண்டுகொண்டவள் இந்த நூற்றாண்டு பெண்..

சிறகு இருந்தும் பறக்க முடியவில்லையே என்று விம்மியவள்
வீட்டுக்குள் இருந்த பெண் !
பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லையே என்று
விசும்புகிறவள் வேலைக்கு போகும் பெண்

வேலைக்கு போகும் பெண் தன் வாழ்க்கைக்கு
கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல
போன நூற்றாண்டில் ஒரு காலும் , இந்த
நூற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி
எடுத்துவைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை
திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறது

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின்
அவரச தாலாட்டுதான் இந்த கவிதை
.இந்த அவரச நூற்றாண்டு மனிதர்களை
இருதயம் துடிக்கும் எந்திரர்களாய் மாற்றிவிட்டது

மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு
வயலின் வாசிக்கிறான்
அடுப்பில் உட்கார்ந்து கொண்டு காதலிக்கிறான்
கணவனும் மனைவியும் இண்டர்காமில்
தாம்பத்தியம் நடத்துகிறார்கள்

குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது
காதலிக்கு வாங்கிய மல்லிகைப்பூ
டீசல் புகையில் கருப்பாகிவிடுகிறது
இப்படி நிறம் மாறி போன ஒரு வாழ்க்கையில்
தாய்பாடும் ஒரு தாலாட்டு மட்டும்
தடம் மாறி போகாமல் இருக்குமா?
எனவேதான் ஒரு குழந்தைக்கு
முன் இரவில் பாடப்பட வேண்டிய தாலாட்டு
முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில்
அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது

"சோலைக்கு பிறந்தவளே சுத்தம் உள்ள தாமரையே
வேலைக்கு போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு
அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு !

ஒரு மணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் விழி சாய்த்து நீ உறங்கு
ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தம் இல்லை
ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தம் இல்லை
ஆயாவும் தொலைகாட்சி அசதியிலே தூங்கிவிட்டால்
உனக்கு தூக்கத்தை தவிர துணைக்கு வர ஆளில்லை

இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே
இதுதான் கதி என்று இன்னமுதே கண்ணுறங்கு !
தூரத்தில் இருந்தாலும் என் நினைவு
உன் தொட்டில் ஓரத்தில் ஓடிவரும் கண்ணுறங்கு !

பேருந்தில் நசுங்கி பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் குறைந்து இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும்
பூபூவாய் உனது முகம் புறப்பட்டுவரும் கண்ணே

தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே கனவு கண்டு கண்ணுறங்கு..
புட்டி பால் குறையவில்லை பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்பாலும் தாயுமன்றி தங்கமே உனக்கு என்ன குறை ?
மாலையிலே ஒடிவந்து மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும் கூட சுரக்குமடி கண்ணுறங்கு !

தாலாட்டு பாட்டில் தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட கொண்டவர்க்கு ஆசை வரும்
உறவுக்கு தடையாக ஓ வென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து இப்போது நீ உறங்கு

தாய் என்று காட்டுதற்கு தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் நல்லவளே கண்ணுறங்கு !

~

Sunday, February 14, 2010

நான் ஜாலியா இருக்கிறேன் -- ஏ.வி .கிரி

~

வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் !

பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து
பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு

காபி போட அடுப்பில் பால் வைத்தால்
பாதி பொங்கி வழிந்துவிடுகிறது

வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது

செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்ப்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது

இரு மடங்கு விலை வைத்தும் சொத்தை காய்கறிகளை பழங்களைத்
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்

முரட்டுதனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால்
கிழிந்தி விடுகிறது துணி

தண்ணீர் மோட்டார், ரேடியோ , டிவி போட்டால்
அணைக்காமல் தூங்கி விடுகிறேன்

கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை
அணைக்காமலே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்

இப்படியாக தனிமையிலே தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்
"இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே
நான் ஜாலியா இருக்கிறேன்" என்று

~

Tuesday, January 26, 2010

ஆயிரத்தில் ஒருவன்- தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா

~

படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள்..ஆனால் ப்டம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. இப்படி ஒரு படம் எவனாலும் பண்ண முடியாது என்பதைவிட யாருக்கும் தைரியம் இல்லை.
நாலு பாட்டு வச்சோமா..நாலு சண்டை வச்சோமா..படத்தை சன் மாதிரி மீடியாவில் விளம்பரம் போட்டோமா..காசு கொடுத்து கட் அவுட் வச்சோமா..கலக்சனை பார்த்தோமா என்று இருக்கும் தமிழ் சினிமாவில். டேய் பொ.........டை களா தமிழ் சினிமா இப்படியும் எடுக்கலாம் என்று மார்தட்டி சொல்கிறார் செல்வா.

அறிவு ஜீவிகள் இது ஆங்கில பட காப்பி என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அய்யா நான் பாமரன்..எனக்கு இந்த படம் புதுசு..நம்ம தமிழர்களின் பண்டைய கால வாழ்வை கற்பனை கல்ந்து எடுக்கபட்டிருக்கும் படம். (வரலாறு உண்மையா பொய்யா என்பது வேறு சர்ச்சை). சினிமாவா பார்த்தா இது போல் ஒரு தமிழ் படம் வந்ததில்லை இனிமேல் எடுக்க துணிவார்களா என்பது சந்தேகம்..படம் வெளிவர அவர்கள் பட்ட கஷ்டம் ஊருக்கே தெரியும்..

பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை. இரண்டாம் பாகத்தில் "தாய் தின்ற மண்ணே..ஒரு பிள்ளையுன் கதறல் ஒரு பேரரசன் புலம்பல்" பாடல் நெஞ்சை பிளிகிறது. "சொல்லாடிய அவை எங்கே" பாடல் அருமை.அந்த பாடல் வரும்போது ஈழ மக்களின் நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. வைரமுத்து வைரமுத்து தான். கவிப்பேரரசு வாழ்க !

பார்த்திபன் நடிப்பு அருமை. அவரை போரில் காப்பத்த அவர் மேல் பாதுகாப்புக்காக வீரர்கள விழும் போது , அவர் தற்கொலை செய்ய கத்தி எடுக்கும் போதும் தடுக்கும் மக்கள் காட்சி , " இது என்ன படைக்களம் இதை பற்றி என்னிடம் நீங்கள் விளக்கவே இல்லை அஞ்சிவிடுவோம் என்றா " என்ற வசன காட்சியும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது.
பார்த்திபன் , கார்த்தி இணைந்து ஆடும் நடனம் சூப்பர்.

இசை சான்சே இல்லை. பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி அருமையாக பண்ணியிருக்கிறார் பிரகாஷ்.

ரீமாசென்னுக்கு இப்படி ஆழமான் கேரக்டர் எதிர்பார்கவே இல்லை. கவர்ச்சியிலும் சரி, நடிப்பிலும் சரி பட்டைய கிளப்பி இருக்கிறார். ஆண்டிரியாவா தூக்கி சாப்பிட்டி விட்டார் ரீமா.
அழகம் பெருமாள் சரத் பொன்சாகவை நினைவு படுத்துகிறார். கார்த்திக்கு நடிப்பு இயல்பா வருது. Image பார்க்காமல் நடித்திருக்கிறார். சூர்யாவை over take பண்ண போவது உறுதி.

கடைசியில் பார்த்திபன் சாகிறாரா என்பதை தெளிவாக காட்டாதது பிரபாகரனின் மரணத்தை நினைவு படுத்தது. அவர் பையனை தூக்கி கொண்டு கார்த்தி ஓடும் போது " ஓ ..தா...தலைவன் இருக்கிறாண்டா திரும்பி வருவோம்டா " என்று என் பின்னாளில் இருந்த ஒரு ரசிகர் கத்தினார். கிட்ட தட்ட நானும் அதே மன நிலையில் இருத்தேன்.
படத்தின் அனைத்து காட்சிகளை இபப்டி எதோ ஒரு சிறப்பு இருக்கிறது, எல்லாத்தையும் இந்த பதிவில் சொல்லிவட முடியாது

இனி விமர்சனங்களுக்கு வருவோம்...
"இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதாம்" - அப்ப சந்திரமுகில அந்த மாதிரி வசனம் இல்லை. அதை மட்டும் என்ன ம......த்துக்கு பார்த்தீங்க...அவார்டு எல்லா கொடுத்தீங்க..
" "" ரேட் படம் குடும்பத்தோடு பார்க்க சகிக்கலயாம்" -
அப்ப ஆங்கில படத்தில சீன் வரும்போது கண்ணை மூடிப்பீங்களா ? . படம் "A" ரேட் படம் . அப்பறம் எதுக்குடா குடும்பத்தை கூட்டிட்டு போறீங்க. ஒரிஜனல் CD வரும்போது வீட்ல போட்டு பாருங்க.

தமிழன் படம் , தமிழனை பற்றிய படம்.அதனால் இதை சில அறிவி ஜீவி அல்லக்கைகளால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் modern day life , நாலு பாட்டு ,நாலு சண்டை, காதல் , அழுவை இதில் இலலை. அதேயே எத்தனை வருசத்துக்குடா பார்ப்பீங்க. அப்படி விரும்பும் ரசிகர்கள் தயவு செய்து வேறு அரங்கம் நோக்கி நகருங்கள்.

3 வருட உழைப்பு காட்சிகளில் தெரிகிறது. வாழ்த்துகள் , பாராட்டுகள் ஆயிரத்தில் ஒருவன் டீம்.... கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன்- தமிழ் சினிமாவின் மைல் கல்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா.

~

Friday, January 1, 2010

ஆனந்த விகடனில் வெளிவந்த ஓவியகவிதைகள்





~

Sunday, December 20, 2009

சென்னையில் இடம் வேண்டுமா ? கலைஞருக்கு பாராட்டு விழா எடுங்கள் !

~
அவன் அவன் வயித்தை கட்டி வாயை கட்டி ஒரு இடத்தை வாங்கிறதுக்குள்ளே வாயில் நுரை தள்ளி போகுது..
இவர் என்னனா அரசாங்க இடத்தை அதுவும் சென்னையில், இவருக்கு பாராட்டு விழா எடுத்தால் குறைந்த விலைக்கு கூட இல்லை இலவசமா கொடுக்கிறார்...அதுவும் யாருக்கு சினி தொழிலாளர்களுக்கு.. ஏன்னா இவங்க ரொம்ப கஷ்டபடுறாங்களாம்..அப்ப சென்னையில் வேற எவனும் கஷ்ட படுறதில்லை .....விழாவில் நம்ம கஷ்டபடுகிற தொழிளாலர்களுக்காக குத்தாட்ட நடிகைகள் காசு வாங்கிட்டு ஆட்டம் போடுவாங்க. இந்த கஷ்ட படுற தொழிலாளர்களுக்காக அவர்கள் உழைப்பில் கோடி கோடியாக சம்பாதித்த ஸ்டார் நடிகர்கள் மைக்கை பிடித்து இரண்டுவார்த்தை பேசுவாங்கே ! உடனே உடன் பேசவரும் அல்லக்கைகள் ஸ்டார் நடிகர்கள் வந்ததற்காக அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்வார்கள். என்னா அந்த பாராட்டுவிழாவை கலைஞர் டீவியில் போட்டு காசு பார்ப்பாங்கே. நாம வாயில விரல் சப்பிட்டி அதை பார்த்துட்டு இருப்போம். அங்க ஒரு 116 ஏக்கர் இலவசமா அலட்டாம கொல்லாம வாங்கிட்டு போயிட்டானுங்க! பகல் கொள்ளை முதல் அமைச்சர் தாராள மனதுடன். கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த மாதிரி.... இதை எதிர்த்து வழக்கு போடமுடியாதா ?

இதைவிட கொடுமை நம்ம MLAக்கள் மக்களுக்காகவே உழைத்து ரொம்ப கஷ்ட படுறாங்களாம்..அவங்களுக்கும் பாவம் ஒரு பங்களா கட்டிக்கொள்ள (ஏற்கனவே இருக்கிறதெல்லாம் பினாமி பேர்ல இருக்கும் போல ) சென்னையில் இடம் இலவசமா கொடுக்கனும்னு நம்ம மக்கள் தொண்டன் வேலூர் ஞானசேகரன் போராடுறார்..அதுவும் சோழிங்க நல்லூரில்தான் வேணுமாம்.. (அங்க தான் இப்ப இடம் ஹாட் விலை )..பாவம் இவருடைய நியாயமான மக்களுக்கான கோரிக்கை ஏற்று தலைவர் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார். எப்படியும் தலைவருக்கும் ஒரு இடம் உண்டு அவரும் MLA தானே. அதுக்கு இன்னும் பாராட்டுவிழா நடத்தல..நடத்தியுடனே கொடுத்துடுவார்.. ஏற்கனவே இருக்கிற 3 star MLA hostel பழான லாட்ஜ் ரேஞ்ச்சுக்குதான் பயன் படுது. அங்க MLA வின் அல்லகைகள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியல.

பதிவுலக மக்களே நம்மளும் பாராட்டு விழா எடுத்து குறைந்தது ஒரு 5 ஏக்கருக்கு ஏற்பாடு பண்ணலாம் வாங்க. கூட்டத்துக்கு ஒரு 3000 பேரு தலைக்கு 300 வீதம் பேசி கூப்பிட்டுகளாம்..இந்த குத்தாட்டத்திற்கு சினிமாவில் வாய்ப்பு தேடிட்டு இருக்கவங்களாய் குறைந்தவிலைக்கு பேசிக்கலாம்..அரங்கம் அப்படி இப்படினு ஒரு 10 லட்சம் செலவு பண்னா எப்படி ஒரு மினிமம் 5 கோடி இடம் கேரண்டி என்ன சொல்றீங்க ?

~

Sunday, December 6, 2009

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

~

பேரழகி எதிர்ப்பார்பில்லை - என் முகத்தை
தினமும் கண்ணாடியில் பார்பதுண்டு !
செக்க சிவப்பு தேவையில்லை -
நான் தமிழன் ! தமிழச்சியின் நிறம் போதும் !

நீங்கா புன்னகை போதும் , பொன்னகைகள் தேவையில்லை !
தனிமை பிடிக்காது எனக்கு ! எப்போதும் உன் அருகிலே இருப்பேன்
இம்சை தான் ! பதிலுக்கு நீயும் அதையே செய்யலாம் !

நேசமிகுந்தவர்களின் மீது கோபம் வந்தால் மெளன ஆயுதம் ஏந்தி கொள்வேன்
மெளன ஆயுதம் தாங்கும் மெளன கேடயம் இருந்தால் போதும் உன்னிடம்
சமாளித்துவிடலாம் என் கோபத்தை !

புத்தகப் பிரியன் நான் அதனால் சில நேர செய்திகள் தவிர தொலைகாட்சியை நீயே கையாளலாம் !
வருமானம் பரவாயில்லை கைவசம் கணிப்பொறி வேலை !
வேலை போனாலும் உழைப்பாளிகளுக்கு அடுத்த வேலை கிடைக்க அதிக நாள் ஆகாது
அதனால் உன்னை பசிக்க விடமாட்டேன் !

காதல் எனக்கு வாய்பளிக்கவில்லை வாய்ப்பு உருவாகும் சந்தர்ப்பங்களை என் விருப்பத்திற்கு மாறாக நானே தவிர்த்ததுண்டு !
நீண்ட நாட்களாக காதல் என்னுள் சிறைப்பட்டு கிடக்கிறது ..நீ வந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கும் ~

திருமணத்துக்கு முன்போ/பின்போ நடந்த / நடக்கும் நிகழ்வுகளில் என்னிடம் சொல்ல நினைப்பதை ம்ட்டுமே கேட்க எனக்கு ஆவல்.
தவிர்கக நினைப்பதில் முழு சுதந்திரம் உண்டு உனக்கு !
உன குடும்ப மகிழ்/துக்க தாக்கத்திற்கு மதிப்பளிப்பேன்! உன்னிடம் அதையே எதிர்பாப்பேன் !

உன்னிடம் எனக்கு இரு வேண்டுகோள்கள் !

ஒன்று !
மூட நம்பிக்கைகளில் , பஞ்சாங்க நேரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை !
ஆனாலும் பெற்றோர் எனக்குள் ஏற்படுத்திய இந்த நம்பிக்கைகள் மீதான் உளவியல் தாக்குதல்
எப்போதாவது எட்டி பார்க்கும் அதை தவிர்க்கவே நினைக்கிறேன்..
கட்டாயம் நாம் நம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டும்

இரண்டு !
ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் என் பெற்றோர் மனம் கலங்கி விடக்கூடாது !
வாழும் இன்னும் சில் வருடங்கள் மகிழ்வோடு வாழவேண்டும் அவர்கள் !
அதற்கான உன் கோபங்களை / சங்கடங்களை பொழிய உனக்கு தடையில்லை நான் இருக்கிறேன் அதற்காக !

~
Note:- கவிஞர் யுகபாரதியின் ஒரு கவிதையை படித்த பாதிப்பில் என் உணர்வுகள் அதே சாயலில் !

~

Tuesday, November 17, 2009

நாராயணா ! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா -2 !


~