Friday, August 3, 2012
அவள் அப்படி ஒரு அழகு
அவள் அப்படி ஒரு அழகு
ஆனால் அவள் அப்படி நினைப்பதில்லை
அவள் அப்படி ஒரு கலர்
ஆனால் அதை அவள் நிறையாய் நினைப்பதில்லை
அவள் பெரிதாய் தான் படித்திருக்கிறாள்
ஆனாலும் அதை குறைவாய் மதிப்பிடுகிறாள்.
அவள் உடுத்தும் உடைகள் பிடித்திருக்கும்
இருந்தும் எனக்காக மாற்ற மறுப்பதில்லை
அவள் மீன் குஞ்சுகள் மீது அன்பாய் இருக்கிறாள்
நான் அவைகள் மீது பொறாமை படுகிறேன்
நான் பொம்மைகள் அணைத்து உறங்குகிறேன்
பொம்மைகளுக்கு அவள் பெயரை சூட்டியதால்
அவள் கூந்தல் ஒன்னும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை.
என் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
ஆனாலும் அவளுக்கு என் கைப்பிடிக்கும் ஆசைகள் நீங்கவில்லை
அம்மாவுக்கு பின் அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுபுடவைகள் என்றும் விரும்பவில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கறை போல வேறுஇல்லை
அவள் கூந்தலில்லாத பூக்களுக்கு வாசமில்லை
அவள் இல்லாமல் இனி என் சுவாசமில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை!!!
-முரு
~~
Saturday, November 19, 2011
கதம்பம் (லோக்பால் ,ஏழாம் அறிவு,கூடங்குளம்)- Nov 19
லோக்பால் - சட்டம் ஊழலை ஒழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
லோகபாலால் ஊழல் ஒழிக்கப்படும் என்று நம்புகிறவர்களுக்கு இதோ பட்டுக்கோட்டையின் பாட்டு. "சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்கிறது, ஆனால் திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடி கொண்டே இருக்கிது" .லோக்பால் லஞ்சத்தை பண்ணி என்ன சொல்லுது தெரியல.. லஞ்சம் என்பது வேற ஊழல் என்பது வேற .ஊழலையாவது ஒழிக்க லோக்பால் - சட்டம் உதவும் என்று நம்பபடுகிறது. ஆனால் லஞ்சத்தை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது. அதுக்கு e-governance வந்தால் மட்டுமே முடியும்.
வேலாயுதம், ஏழாம் அறிவு - ஏழாம் அறிவு எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது. இன்னும் என்ன தோழா ஏழாம் அறிவின் ஒரு பாடல் போதும் படம்பிடிக்க காரணம். வேலாயுதம் ஒரு மொக்கை. சந்தானம் காமெடி தவிர. ஏழாம் அறிவு உதயநிதி தயாரிப்பால், அதுக்கு எதிரா எவ்வளவு பரப்புரைகள் தூற்றல்கள் கேள்விகள். வேலாயுதம் என்ற அருத பழசான மசாலா சீன்களின் தொகுப்பை தமிழ் நாட்டில் வெற்றிபடமாக்கிவிட எவ்வளவு முனைப்புகள். அரசியலிலும் சரி, சினிமாவில் சரி. மொத்தத்தில் தழிழர்கள் மசாலா பட ரசிகனாகவே வைத்திருக்க வேண்டும்,சிந்தித்துவிட கூடாது என்றஒரு கூட்டம் இயங்கி கொண்டே இருக்குது.காலம் மாறும் காட்சிகள் கண்டிப்பாக மாறும்.
கூடங்குளம் அணுமின் நிலை விவகாரத்தில் மக்கள் போராட்ட குழுவாலும், அரசாங்கத்தாலும் ஏமாற்றபடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு கண்டிப்பாக எதோ ஒரு சக்தி பின்னால் இயக்குகிறது. பூகம்பம் வந்தா என்னாகும் , பூமீ இரண்டா பிளந்தா என்னாகும் என்ரறெல்லாம் கேட்கிறார்கள். ஜெர்மனியில் மூடிட்டாங்க அப்படினு மேற்கோள் காட்றாங்க.ஜெர்மனியா நம்ம? சோத்துக்கே வழியில்லாம நாம கிடக்கோம்.. உலகில் 165 அணு உலைகள் இயங்குதே அப்ப அவன் எல்லாம் என்ன கேனப்பயலா.அவ்வளவு ஏன் கல்பாக்கம் அணுமின் நிலையும் இருக்கே, அங்க பூகம்பம் வந்தா மட்டும் நமக்கு பாதிப்பு இருக்காதே. ஊகங்களை கேள்வியாக்கி புரட்டி பண்றோம் போராட்டம் பண்றோம்னு ஒரு நல்ல திட்டத்தை முடக்க இவ்வளவு தீவிரம் ஏன்? . அரசாங்கம் மக்களிடம் இருந்து இடங்களை பிடுங்கிகிட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எதுவும் செய்த மாதிரி தெரியல. அப்துல்கலாம் தான் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த சில திட்டங்களை சொல்லி இருக்கிறார். அதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.விரைவில் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.
~
Saturday, May 21, 2011
ஊடகங்களின் கட்டுக்கடங்கா அதிகாரம் தவறான வழியில்?
ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒருவரின் மதிப்பை கொலைசெய்துவிட முடியும் என்ற நிலைமையில் தான் இப்போது இருக்கிறோம். மக்களின் மீது ஊடகங்களின் கருத்து திணிக்கப்ப்டுகிறது .நீதிபதிகள் தீர்ப்பை கூட ஊடகத்தின் அனுமானங்களின் சக்தி ஆட்டிவைக்கிறது. ஒரு விசயத்தை தன் வார்த்தை தோரணத்தால் நல்லவிசயமாகவும், தனக்கு பிடிக்காதவர் என்றால் கெட்டவிசயமாகவும் ஊடகங்களால் பிரச்சாரம் செய்ய முடிகிறது.கட்சி சார்ந்த ஊடகங்களை விட்டுவிடுவோம்.அவைகளை மக்கள் பெரியவிசயமாக எடுத்து கொள்வதாக நான் கருதவில்லை.ஆனால் நடு நிலை என்ற போர்வையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மூட நம்பிக்கைகளையும், தான் சொந்த இன,மொழி,மத வெறுப்புகளை விதைக்கும் ஊடகங்களை பற்றியதுதான் என் கவலை.உதராணங்கள் பல.
எந்த ஒரு அடித்தள உண்மையும் இல்லாமல் இவர்களால் ஒரு தலைப்பு செய்தியை போட முடிகிறது..இட்டுகட்டி எழுதமுடிகிறது..இந்த பொய் செய்திகளால் உணமை எது பொய் எது என்ற தெரியாமால் ஆமாம் எல்லாரும் இப்படிதான் என்ற எதிர்மறை சிந்தனை மக்களுக்கு மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்த நாட்டில் இறந்த தலைவர்களை தவிர தனக்கு பிடிக்காத ,அல்லது அவர்கள் வியாபரத்துக்கு உதவாத எவரையும் இந்த ஊடங்கங்கள் விட்டு வைப்பதில்லை. வியாபாரத்து உதவி என்பது தற்போதைய சூழ் நிலையில் மக்களுக்கு எது பிடிக்கும் ..அதை பெரிதாக்கி (செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதல்லாம் தகுதி கிடையாது). உதாரணத்துக்கு இப்ப ஒருவன் 50% கெட்டவனு வைச்சுக்கங்க.. அவனை பத்தி அவன் செய்யாததையும் எழுதி 200% கெட்டவன் போல சித்தரிக்கிறது..50% உண்மை 150% நம்ம கற்பனை (உதராணம் கருணாநிதி)....இதே இவர்களுக்கு பிடித்தவராக இருந்தால் போதும் 25% நல்லவனாக இருந்தால் கூட போதும் அப்படியே உல்ட்டவாக ஆபத்தாண்டவனாக போல சித்தரிக்கப்படுவார் (உதராணம் ரஜினி). எதை நோக்கிசெல்கிறது இந்த பயணம் ?. ஊடங்கங்களுக்கு ஒரு accountablityயும் கிடையாது..ஒரு பக்க பெரியளவில் ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாள் ஒரு மூலையில் கண்ணுக்கு படாத இடத்தில் மறுப்பு வெளியிட்டால் போதும்..என்ன ஒரு தர்மம் ?. தன் சட்டப்பை சுடும் வரை யாரும் பற்றி எரியும் தீயை பற்றி கவலைபடுவதில்லை . பர்கா தட் போன்ற பத்திரிக்கையாளர்கள் தனக்கெதிராக ஒரு சர்ச்சை வந்தவுடன் அதை வெளியிட்ட பத்திரிக்கைய சாடிய அதே கோபம் மற்றவர்களுக்கும் வரும் என உணராத்து ஏன்..?
எண்ணில் அடங்கா உதாரண்த்தை என்னால் எடுத்துரைக்க முடியும் ..அதில் சில ஊடங்கங்கள் எனக்குபிடித்த ஊடங்கள் இந்த குறை பாட்டை தவிர..
NDTV இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தென்னிந்தியாவை பற்றியோ, அதில் நடக்கும் நல்ல விசயங்களை பற்றியோ ஒளி பரப்பியதே இல்லை..அவர்கள் எல்லாத்திலும் கருணாநிதி குடும்பத்தையே பார்பார்கள் வேற யாரும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது..அவர்கள் பொறுத்தவரை தமிழ் நாடு என்றால் ராஜா,கருணா நிதி குடும்பம், சோ,சுசாமி,ஜெயா,ரஜினி,சென்னை அவ்வளவுதான். ஆனால் உண்மையில் இவர்கள் தமிழ் நாட்டின் பிரதி நிதிகள் அல்ல . பிரபலமானவ்ர்கள் அவ்வளவுதான். தென்னிந்தியா மீதான் வெறுப்பை அல்லது காழ்ப்புணர்ச்சியை கக்கினால்தான் அவர்களின் வட இந்தியா வாசகர்காள் ரசிக்கிறார்கள் போலும். சமீபத்தில் ஒரு சொல்லாடல். yesterday- free rice- karunanidhi freebee. today free rice- jaya's welfare scheme. அது எப்படி ஒருத்த செஞ்சா அது தப்பு..இன்னொருத்தர் செஞ்சா அது சரி?
தினமலர் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூட நம்பிக்கையை சப்போர்ட்டுக்கு பயன்படுத்துவது..மக்களின் மீது அதே மூட நம்பிக்கையில் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவது..சமீபத்திய உதாரணம்கள் சாய்பாபா தன் சாவின் நாள் குறித்து சொன்னதை பல்வேறு கணக்குகளை வைத்து உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.. என் பல உதாரணங்களை சொல்லலாம்.
தமிழ் நாட்டின் பொருளாதாரம் கிராமத்து பள்ளிகளின் எதிரே பத்து ரூபாய் முதலீட்டில் மாங்காய் கீறி விற்கும் கிழவியில் ஆரம்பித்து, வயல்காட்டு உடல் உழைப்பில பயணித்து, திருப்பூர்,கோவை தொழில்சாலைகளில் கசக்கிபிழிப்பட்டு சென்னை தகவல் தொழில் நுட்பம், ஆட்டோ மொபைலில் ஜொலிக்கிறது.மேலும் எத்தனையோ தொழில்கள் இருக்கிறது..ஆனால் ஊடங்கள் சினிமா தொழில்தான் அதிக முக்குவத்தும் பெறுகிறது..அல்லது முன்னெடுத்து சொல்லபடுகிறது..அதிலும் கூட கிசுகிசுகள், அவ்ரகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள்தான் அதிகம்.
எத்தனையோ நல்ல சம்பங்கள் நடந்தாலும், கள்ளக்காதல் இல்லாத பத்திரிக்கை ஒரு நாளும் வெளிவருதில்லை.எந்து நடுத்தர வயது பெண் கொலை செய்யபட்டாலும் அது களளக்காதல் என்பது இவர்களின் கற்பனை..
இந்த ஊடங்களன் முகத்திரையை கிழிப்பதற்கென்றே ஒரு தனி ஊடகம் தொடங்க வேண்டும்..
Tuesday, September 14, 2010
புதிதாக கட்டியிருக்கும் கக்கூஷ்கு ஜார்ஷ் புஷ் பெயரதான் வைக்கனும் !
இந்த பெயரை வை அந்த பெயரை வை-னு உயிரை எடுக்கிறானுங்க! கொஞ்ச நாளா இந்த சின்னதனமான அரசியல் அதிகமாகிடுச்சு !
இப்படி பிரச்சனை வந்து தான் மாவட்டத்தில் இருந்த தலைவர் பெயரை எல்லாம் தூக்கினாங்க!
இதற்கான செலவு எல்லாம் நம்ம வரிப் பணம்தான்..அதாவது முதலில் தலைவர்கள் பெயருடன் இருந்த மாவட்ட அச்சுக்கான செலவு ..அப்புறம் அதை நீக்குவதற்கான செலவு எல்லா காசும் நம்ம காசுதாங்க!
பெயர் அரசியல் ரொம்ப ஈசி செலவும் கம்மி..(என்ன ஒரு பத்திரிக்கை அறிக்கை..செலவு ..அவ்வளவுதான்).! உணர்ச்சி தூண்டுறதுதானே ! ஒருத்தன் தேவர் பெயரை வைக்கனும்பா....இன்னொருத்தன் அதை எதிர்ப்பான்..இன்னொருத்தன் காமராசர் பெயரை வைக்கனும்பா..இப்படி தன் சாதி தலைவர்கள் பெயரை வைககனும்பா.( என்ன கொடுமைனா காமராசர் இப்ப நாடார்களின் தலைவர் என்ற ரேஞ்சுக்கு கீழே போய்ட்டாரு ! ) . ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பித்து, உண்ணாவிரதம் இருந்து கடைசியில ரத்தக்கிளரி ஆகி காலம் தாழ்ந்து அந்த் திட்டமோ/ கட்டமோ பயன் இல்லாமல் போனதுக்கு அப்புறம் சமாதானமா வருவானுங்க!
இதை ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி தான் நினைக்கிறேன்..அவர்தான் இப்படி மக்களை சும்மா பழம் பெருமைகளை சொல்லியே மூடராக்கி வைத்திருக்கிறார்.. சும்மா மதுரைக்கு போனாம வந்தாமானு இல்லாமல் அங்க போய் விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க முயற்சி செய்வோம் ஒரு பிட் டை போட்டிட்டு வந்தாரு ! விமான நிலையம் பெரிசா கட்டினா கூட தேவர் பெயரை வைக்காம அதை இயங்கவிட மாட்டானுங்கனு நினைக்கிறேன்.. அவர் தான் அப்படினா, தளபதி சென்னையில் தினகரன் சாலை என்று ஒரு பிட்டை போட்டாரு ! அப்புறம் IT corridor இருந்ததை ராஜீவ்காந்தி (இந்தியாவில் வேற தலைவர்களே இல்ல போல..எங்க போனாலும் காந்திஷ் தான் ) சாலைனு வைக்கனும்னு நம்ம அல்லக்கைகள் கேட்க..அடுத்த நாளே போர்டு மாத்திட்டானுங்க !, ..இதுக்கு எப்படியும் ஒரு 20000 ரூபா கணக்கு காண்பிச்சுருப்பானுங்க! எல்லாம் நம்ம காசுதாங்க !
இன்னைக்கு நம்ம சுப்ரீம் ஸ்டார் எதோ ஒரு பஸ்டாண்டுக்கு காமராசரை தான் வைக்கனும்னு பத்திரிக்கை அறிக்கைவிட்ருக்கிறார்..
என்னமோ போங்கப்பா! யார் பேரு இருந்தா என்னப்பா சொன்னா நம்ம எதிரி ஆகிடுவோம்..அதெப்படி எங்க சாதிகாரன் என்ன இலக்காரம்மானு கேட்பானுங்க..இந்த கேள்விக்கு பதிலே சொல்லமுடியாது... கலைஞர் தான் சொல்லலாம்..அவர்தானே இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் சுத்தி வளைச்சு..மழுப்பி விட்டிடுவார்..
சரி தலைப்புக்கும் , பதிவுக்கும் என்ன சம்பந்தனு...இந்த மாதிரி பெயர் பிரச்சனை கழிவறைக்கு வந்தா, ஜார்ஷ் புஷ் பேர வைச்சா எந்த பிரச்சனையும் வராதுனு சொல்ல வந்தேன்.எதிலனாலும் பிரச்சனை வரலாம் ஆனா இதில் வந்தா ஊர் நாறி போகும்ங்க !
~
Saturday, September 11, 2010
தமிழ் வழி வலியா?
அண்ணா பல்கலைகழக மாணவி ஆங்கிலம் சரியாக பேசவராததாலும், அதனால் தான் கிண்டலுக்கு உள்ளாவதை தாங்க முடியாததாலும் தற்கொலை செய்து நிகண்ட நிகழ்வை அனைவரும் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்!
இது முதல் நிகழ்வல்ல ! இதே மாதிரி ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையால் மனதளவில் எல்லா தமிழ் வழி பொறியியல் மாணவர்களும் பாதிக்கபடுவது உண்மை ! மற்ற உயர் படிப்பிலும் இந்த தாக்கம் இருக்கிறது.
எனக்கும் இருந்தது..சொல்லப்போனால் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கிறது. உயர் படிப்பு வரை நல்லா படித்துவிட்டு (இந்த மாணவி 1100 க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்) முதல் தரவரிசையில் இருந்து விட்டு, ஆங்கில அறிவு குறைவின் காரணமாக , கல்லூரியில் போய் பாடத்தில் தோல்வி அடையும் போது இருக்கிற வலி அதை அனுவபவித்தவர்களுக்கே தெரியும்.. தமிழ் வழி மாணவர்களை ஆங்கில பேச்சு ஆணி கொண்டு அறையப்படுகிறார்கள்.அவர்களின் தன்னம்பிக்கை ஆங்கில சுத்தி கொண்டு நசுக்கப்படுகிறது. There is no big pain than feeling incompetent.இந்த தாழ்வு மனப்பான்மையை வெல்பவர்கள் பல இருந்தாலும் எதோ இரு இடத்தில் அது வெளிப்படுவது தவிர்க்க முடியாது. இந்த மாணவி போல தாங்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்பவர்களும் உண்டு ! என்னாதான் முக்கினாலும் எங்களுக்கு DAVக்களின் ஆங்கில அறிவுடன் போட்டியிடுவது கடினமாகத்தான் இருக்கிறது.
இந்த தாக்கம் அலுவகத்திலும் தொடர்கிறது. தமிழை ஒரு மொழிப்பாடமாக படிப்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.கட்டாயம் படிக்கனும். ஆனால் தமிழ் வழி கல்வியை சாதாரண , நடுத்தர மக்கள் , வேலையை எதிர்பார்த்து படிக்கும் மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்க மாட்டேன். பணக்காரர்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர்கள் default-a ஆங்கிலம் அல்லது International பள்ளியில் தான் படிக்க வைப்பார்கள் . தமில் வழியில் தான் படிக்க வைக்கனும் என்று சொல்பவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்பவர்களாகவே நான் கருதுகிறேன்.உதாரணம் மருத்துவர் ராமதாசு.
இது ஒரு புறம் இருக்கட்டும், ஆங்கில அறிவு தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி. ஒரு உண்மை என்ன வென்றால் ஆங்கில அறிவு என்பது ஒரு மொழி அறிவு அவ்வளவுதான். அது இல்லாதாதல் நாம் ஒன்றும் அறிவாளி இல்லை என்றாகிவிடாது என்பதை முதலில் நாம் நம்பணும். தெரிந்தோ தெரியாமலே ஆங்கிலம் இன்றைய சூழ் நிலையில் பொறியியல் மற்றும் தகவல் தொழி நுட்பம் சார்ந்த வேலைகளில் கட்டாயம் ஆகிவிட்டது. அதை நாம் கற்றுதான் ஆக வேண்டும். நம் ஆங்கில அறிவை கிண்டல் செய்யும் போது , அதை பாதிப்பாக நினைக்காமல் சரிசெய்ய நாம் முயலவேண்டும். காலப்போக்கில் அது தானகவே வந்துவிடும். இப்ப தமிழை , தமிழ் தெரியாத ஒருத்தர் கொஞ்சம் இலக்கண பிழையாக பேசும் போது நாம் புன்னகைப்பதில்லையா..அந்த மாதிரி நினைக்கனும். உண்மையில் வெள்ளைகாரர்கள் நாம் ஆங்கில பேச்சை கிண்டல் செய்வதில்லை, மாறாக நம்மை புரிந்து கொண்டு நாம் புரியும் படி மெதுவாக , சுலபமான ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்.ஆனால் நம் இந்தியாவில் தான் இதற்கு நேர்மாறாக என்னமோ ஆங்கிலத்தே இவன் தான் கண்டு பிடித்த மாதிரியும் , சேக்ஸ்பியருக்கு அப்புறம் இவன் தான் மாதிரியும் சில் பேர் பீட்டர் விடுகிறார்கள். சில பேர் இருக்கான், அவனுக்கு சரியா பேச வராட்டியும் , அடுத்த முயற்சியை கிண்டல் பண்ணுபவான் ( நான் கொஞ்ச நாள் அப்படிதான் பண்ணிட்டு இருந்தேன், எனக்கு அது நேரும் வரை ) .
இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்.
தோழர்களே , உயிர் உன்னதமானது , அதை போயும் போயும் மயிருக்காகவா ( ஆங்கில அறிவு) இழப்பது ? :)
~
Thursday, August 19, 2010
எனக்காக நான் மட்டுமே !
வாழ்க்கை துணையோடு , வருங்கால வாழ்க்கை துணையொடு
காதலியோடு , காதலா நட்பா புரியாமல் சிலர்,பொழுது போக்கிற்காக பலர்
இப்படி தொலைபேசியில் தொலைகிறது நேரம். மற்றவர்களுக்கு
என் நம்பருக்கு நானே எப்படி அழைப்பது...வியக்கிறேன் நான் !
தன்னைவிட என்னை நேசிக்கும் அம்மா இருந்தாலும்,
தான் வீழ்ந்தாலும் மகன் தாழ கூடாது என் நினைக்கும் அப்பா இருந்தாலும்
தனக்கில்லை என்றாலும் தம்பிக்கு வேணும் என் இருக்கும் அண்ணன் இருந்தாலும
மாப்பி ஏண்டா டல்லா யிருக்கே என் உரிமையாய் கேட்க நட்பு இருந்தாலும்
எனக்காக நான் மட்டுமே இருப்பதாகவே உணர்கிறேன்
நான் செய்த நல்ல வேலைக்காக என்னை பாராட்டுகிறார்கள்
ஆனால் என்னால் மகிழ முடியவில்லை..
சில நேரம் என்னை கண்டிக்கிறார்கள் எனக்கு கோபம் வரவில்லை
உதட்டளவில் சிரிக்கிறேன் கோவிக்கிறேன்
ஒரு வேளை திரும்ப சொந்த ஊருக்கே போயிடலாமா ? எண்ணும்போதே
பயமுறுத்துகிறது ஊர் கேலி பேச்சுகள் வேலையில்லாதவன் எனும் பட்டமும்!
ஒரு வேளை வாழ்க்கை துணை என்று ஒருத்தி வந்தால் சரியாகுமோ ?
ஆகலாம் என் நம்பிக்கையின்றி சொல்கிறார்கள் ஆன நட்புகள்
என் செய்வேன் நான் என் கேட்கும் முன்னே குவிகின்றன் அறிவுரைகள்
மனசே ரிலாக்ஸ் ப்ளிஷ் படி சினிமாவுக்கு போலாம்
தண்ணி அடிக்கலாம் மச்சான்..இல்லடா மேட்டர் பார்க்கலாம் இண்டர்னெட்ல
பாரதியின் அச்சமில்லை கவியை முன்னூறு முறை வாசி
மச்சி சுகி சிவம்...
என்னதாண்டா உன் பிரச்சனை அவன் அவன் வேலையில்லாமல் சாப்பாடு இல்லாமல்
ரோட்ல அலையிறான் உனக்கென்னடா கோபத்தில் சில
யார் என்ன சொன்னாலும் ஏனோ புரியவில்லை எனக்காக நான் மட்டுமே இருப்பதாக் உணர்கிறேன்
--- வாழ்க்கையில் பல பேர் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள். நானும்
Tuesday, January 26, 2010
ஆயிரத்தில் ஒருவன்- தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா
படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள்..ஆனால் ப்டம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. இப்படி ஒரு படம் எவனாலும் பண்ண முடியாது என்பதைவிட யாருக்கும் தைரியம் இல்லை.
நாலு பாட்டு வச்சோமா..நாலு சண்டை வச்சோமா..படத்தை சன் மாதிரி மீடியாவில் விளம்பரம் போட்டோமா..காசு கொடுத்து கட் அவுட் வச்சோமா..கலக்சனை பார்த்தோமா என்று இருக்கும் தமிழ் சினிமாவில். டேய் பொ.........டை களா தமிழ் சினிமா இப்படியும் எடுக்கலாம் என்று மார்தட்டி சொல்கிறார் செல்வா.
அறிவு ஜீவிகள் இது ஆங்கில பட காப்பி என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. அய்யா நான் பாமரன்..எனக்கு இந்த படம் புதுசு..நம்ம தமிழர்களின் பண்டைய கால வாழ்வை கற்பனை கல்ந்து எடுக்கபட்டிருக்கும் படம். (வரலாறு உண்மையா பொய்யா என்பது வேறு சர்ச்சை). சினிமாவா பார்த்தா இது போல் ஒரு தமிழ் படம் வந்ததில்லை இனிமேல் எடுக்க துணிவார்களா என்பது சந்தேகம்..படம் வெளிவர அவர்கள் பட்ட கஷ்டம் ஊருக்கே தெரியும்..
பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை. இரண்டாம் பாகத்தில் "தாய் தின்ற மண்ணே..ஒரு பிள்ளையுன் கதறல் ஒரு பேரரசன் புலம்பல்" பாடல் நெஞ்சை பிளிகிறது. "சொல்லாடிய அவை எங்கே" பாடல் அருமை.அந்த பாடல் வரும்போது ஈழ மக்களின் நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. வைரமுத்து வைரமுத்து தான். கவிப்பேரரசு வாழ்க !
பார்த்திபன் நடிப்பு அருமை. அவரை போரில் காப்பத்த அவர் மேல் பாதுகாப்புக்காக வீரர்கள விழும் போது , அவர் தற்கொலை செய்ய கத்தி எடுக்கும் போதும் தடுக்கும் மக்கள் காட்சி , " இது என்ன படைக்களம் இதை பற்றி என்னிடம் நீங்கள் விளக்கவே இல்லை அஞ்சிவிடுவோம் என்றா " என்ற வசன காட்சியும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது.
பார்த்திபன் , கார்த்தி இணைந்து ஆடும் நடனம் சூப்பர்.
இசை சான்சே இல்லை. பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி அருமையாக பண்ணியிருக்கிறார் பிரகாஷ்.
ரீமாசென்னுக்கு இப்படி ஆழமான் கேரக்டர் எதிர்பார்கவே இல்லை. கவர்ச்சியிலும் சரி, நடிப்பிலும் சரி பட்டைய கிளப்பி இருக்கிறார். ஆண்டிரியாவா தூக்கி சாப்பிட்டி விட்டார் ரீமா.
அழகம் பெருமாள் சரத் பொன்சாகவை நினைவு படுத்துகிறார். கார்த்திக்கு நடிப்பு இயல்பா வருது. Image பார்க்காமல் நடித்திருக்கிறார். சூர்யாவை over take பண்ண போவது உறுதி.
கடைசியில் பார்த்திபன் சாகிறாரா என்பதை தெளிவாக காட்டாதது பிரபாகரனின் மரணத்தை நினைவு படுத்தது. அவர் பையனை தூக்கி கொண்டு கார்த்தி ஓடும் போது " ஓ ..தா...தலைவன் இருக்கிறாண்டா திரும்பி வருவோம்டா " என்று என் பின்னாளில் இருந்த ஒரு ரசிகர் கத்தினார். கிட்ட தட்ட நானும் அதே மன நிலையில் இருத்தேன்.
படத்தின் அனைத்து காட்சிகளை இபப்டி எதோ ஒரு சிறப்பு இருக்கிறது, எல்லாத்தையும் இந்த பதிவில் சொல்லிவட முடியாது
இனி விமர்சனங்களுக்கு வருவோம்...
"இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதாம்" - அப்ப சந்திரமுகில அந்த மாதிரி வசனம் இல்லை. அதை மட்டும் என்ன ம......த்துக்கு பார்த்தீங்க...அவார்டு எல்லா கொடுத்தீங்க..
" "" ரேட் படம் குடும்பத்தோடு பார்க்க சகிக்கலயாம்" -
அப்ப ஆங்கில படத்தில சீன் வரும்போது கண்ணை மூடிப்பீங்களா ? . படம் "A" ரேட் படம் . அப்பறம் எதுக்குடா குடும்பத்தை கூட்டிட்டு போறீங்க. ஒரிஜனல் CD வரும்போது வீட்ல போட்டு பாருங்க.
தமிழன் படம் , தமிழனை பற்றிய படம்.அதனால் இதை சில அறிவி ஜீவி அல்லக்கைகளால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் modern day life , நாலு பாட்டு ,நாலு சண்டை, காதல் , அழுவை இதில் இலலை. அதேயே எத்தனை வருசத்துக்குடா பார்ப்பீங்க. அப்படி விரும்பும் ரசிகர்கள் தயவு செய்து வேறு அரங்கம் நோக்கி நகருங்கள்.
3 வருட உழைப்பு காட்சிகளில் தெரிகிறது. வாழ்த்துகள் , பாராட்டுகள் ஆயிரத்தில் ஒருவன் டீம்.... கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவன்- தமிழ் சினிமாவின் மைல் கல்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும் தொடந்து செல்லுங்கள் செல்வா.
~
Monday, October 12, 2009
ரஜினி வீட்டில் தீபாவளி..அப்புறம் எங்க வீட்ல எல்லாம் என்ன பொங்கலா ? !
~
(எல்லா மீடியாகளையும்/பத்திரிக்கைகளையும் சொல்லல. சில் கறுப்பு ஆடுகளை பற்றிதான் இந்த பதிவு.)
இந்த மீடியா தொல்லை தாங்க முடியலப்பா ! .அவர் அங்க ஒண்ணுக்கு போனாரு இவர் இந்த இடத்தில்தான் வாந்தி எடுத்தாறுனு இவனுங்க பண்ற அலும்பு இருக்கே எப்பே ! இப்பதான் மீட்டிங் போட்டு இவனுங்களை காரி காரி துப்புனானுங்க ! என்ன துப்புவாங்கினாலும் இவனுங்க அவங்க பின்னாடிதான் அலைறானுங்க !
சினிமாவில் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. திறமையை , உழைப்பை மதிக்கலாம், பாராட்டலாம் ஆனால் அதை மிகைபடுத்திகாட்ட வேண்டிய அவசியம் இல்லை..ஏன் இவனுங்க இதை செய்றானுங்க ! சினிமா நடிகனை பத்தி மிகைப்படித்து எழுதி அல்லது காட்டினால்தான் வியாபாரம் என்ற மாயவலை (அல்லது உண்மையான வலையாக கூட இருக்கலாம்) பின்னப்பட்டு இருக்கிறது. அவர்களை புகழ புதுசு புதுசா நிகழ்ச்சி, அவர் போன இடத்துக்கு போறானுங்க அதையே ஒரு பத்துவாட்டி ஒளிபரப்புறானுங்க. எல்லா தமிழன் வீட்ல இந்த நடிகர்கள் எல்லாம் ஒரு அங்கமாம்.. அடி செருப்பால..நான் தமிழன் தான்..எங்க வீட்ல எந்த பித்துக்குளி பயலும் அங்கம் இல்லை !
அதலயும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககும் அல்லகைகள் இருக்கே ... லிவிங்ஷ்டன் ஒரு படத்தில் சொல்ற மாதிரி வாங்கின காசைவிட அதிகமா கூவுறாண்டா கொய்யாலே ..அந்தமாதிரிதான். "சார் actaullay we tamil பேச learn பண்ணினது from you sir " ! இதிலிருந்து தெரியல. இவங்க கத்துகிட்டவன் எப்படி தமிழ் பேசுவானு.
நான் ஒன்னும் தமிழ் புலி அல்ல. சொல்கிற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தாவது பேசாலாம் அல்லவா. இதைவிட பயங்கர காமெடினா இந்த பாராட்டுவிழா தான்.அப்புறம் சமீபத்திய ஆரம்பம் நேரடியாக தொலைகாட்சியில் பேசி புகழ்வது. ஏண்டா புகழ்வதுக்குனு ஒரு அளவு இல்லைடா.. சார் நீங்கதான் ..சார் நீங்க மட்டும் இல்லாட்டி. இந்த பூமியே ரெண்டா போயிடும்னுகிற லெவலுக்கு இவனுங்க கொடுக்கிற பில்டப் இருக்குறே ! பூமி தாங்காதுடா டேய் ! இவனுங்க ஒரு வேலை தண்ணி போட்டுட்டு பேசுவாங்க போல ! சம்பந்தமே இல்லாம பேசுவானுங்க..சமீபத்திய நிகழ்வு கமல் சார் கிட்ட கரண் சொல்றாரு காந்திய சிந்தனையை உன்னை போல் ஒருவன்ல கமல் மக்கள்கிட்ட அழுத்தமா சொல்லிருக்காராம்..அது மக்களை ரீச் ஆயுடுச்சாம் ..டேய் சாமி நீ ஏன் இன்னும் தேராமா இருக்கேனு இப்பதான் தெரியுது .
actualla நீ ஆர்வளக்கோறா இல்லை உளறுவாயா ? (பசங்க படம் effect) .
மேடையில் காலில் விழுவது அநாகரீகம் இல்லையா? உனக்கு ஆசிர்வாதம் வாங்கனும்னா தனியா போய் விழு ..அதை விட்டுபிட்டு.. ஒருத்தன் விழுந்துட்டா போதும் எங்க நம்ம விழுவாமல் போனா.. ஆப்பு வச்சுவாங்களோனு வரிசையா விழுவானுங்க..இதை எப்ப ஆரம்பிச்சதோ தெரியலா சமீபத்துல் நடக்கிற சூப்பர் சிங்கர் ஜுனியர் வரைக்கு பாதிப்பு இருக்கு ! அளவுக்கு மீறய புகழ்ச்சியை ஊக்கபடுத்துவது தவறல்லவா ? அதைதான் இன்றைய மீடியாக்கல் செய்கின்றன. ஒரு படம் வெளிவந்திறக்கூடாது. அவ்வளதுதான் அதில் நடித்த அல்லக்கை வரைக்கும் நேரடி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டுறுனுவாங்க ! இல்லாட்டி ஒரு பத்து பேற கும்பலா கூட்டிட்டு வந்துடுனுவாங்க! . படம் காரி துப்புற மாதிரி இருக்கும் ஆனா இவனுங்க பேசுவானுங்க பாருங்க! யாரும் நடிக்கல எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க..படம் மிகப்பெரிய வெற்றினு நாக்கூசாம சொல்லுவானுங்க ! சமீபத்திய உதாரணம் நேற்றைய இசைஅருவில மதுரை 2 தேனி கும்பல் வந்தாங்க :). படம் செம் பிக்கப்பாம்,ரசிகர்கள் எல்லாம் கைத்தட்டுறாங்கலாம், அழறாங்கலாம் ( அழுவது வேணா உண்மையா இருக்காலாம் ஏண்டா வந்தோம்னு). முடியலடா சாமி.
மீடியா மட்டுமா.. பத்திரிக்கைகள் தரம் இதைவிட குறைந்து கொண்டே வருகிறது. பொய் செய்தி , ஆபாச செய்தி ..அப்புறம் ஓரமா குட்டியா ஒரு வருத்தம்..அவனுங்க மீட்டிங்கல கேட்டது தப்பே இல்ல்..உங்க அம்மாவை பத்தி இப்படி எழுதிட்டு ஒரு ஓரமா வருத்தம் தெரிவிச்ச அப்ப தெரியும். அப்புறம் பாரபட்சமே பார்க்காம் பொய்யா எழுதுறது..இன்றைய ஒரு செய்தி..அனுஷ்காவுக்கு கோவில் கட்ட முயற்சி..இது எந்த விதத்திலும் உண்மையான செய்தியாக இருக்கவே முடியாது என்பது என் திண்ணம். நமக்கு பொதுவாகவே அடுத்துவர்களை திட்டுவது, குறை சொல்வது என்றால் கொள்ள பிரியம். (அது என் மனதிலும் இருக்கு என்பது இந்த பதிவை படிக்கும் போதே உங்களுக்கும் தெரிந்திருக்கும் ). இதை இந்த பத்திரிக்கைகள் இந்த மாதிரி அழுத பழசான நடிகைக்கு கோவில் கட்டுவது என்ற பொய் செய்தியை ( பழைய செய்திகள் உண்மையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது ) போடுகின்றன. நம்மளும் படிச்சிட்டு பைத்தியக்காரனுங்கனு திட்டி புட்டு சந்தோசமாகிடுவோம்.
சரி தலைப்புக்கும் நீ எழுதிருக்கிற மேட்டருக்கும் என்னடா சம்பந்தனும்னு இன்னேரம் யோசிச்சு இருப்பீங்க ! குங்குமம் இந்த வாரம் "ரஜினி வீட்டில் தீபாவளி.."..
அப்புறம் எங்க வீட்ல என்ன பொங்கலா அப்படினு ஆரம்பிச்சேன்..என்ன என்னமோ எழுதிட்டேன்..இந்த அவலங்களை நினைக்க நினைக்க வார்த்தை கொட்டுது..இதுக்கு மேல் எழுதினா இவ்வளவு பெரிசா இருக்கேனு படிக்காம போயிடுவானுங்கனு நினைக்கும் போது (இப்ப மட்டும் யாரு படிக்கபோரா :) ) வர்ற வார்த்தை கூட நின்றது..
~
Thursday, September 17, 2009
ஒரு தலை காதலும் சாதீய ஆதிக்கமும் !
இது என் கல்லூரு நண்பனின் கதை.சிவா தாழ்த்தப்பட்ட குடிசைப்பகுதியை சார்ந்தவன்.. யாருமே பள்ளி படிப்பை தொடராத அந்த பகுதியில் அவன் மட்டுமே நல்ல படித்ததால் பொறியியல் கல்லூரிக்கு வரமுடிந்தது.நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நேரம். அவன் வாழ்ந்த பகுதிக்கு அருகே தேவர் சமூகத்தினர் அதிகமாக குடியுருந்தனர். அந்த வகுப்பை சார்ந்த ஒரு பெண் அவனை அடிக்கடி பார்த்து சிரித்திருக்கிறாள். அவன் இதென்னடா வம்பா போச்சுனு அந்த தெரு வழியே செல்வதையே தவிர்த்து வந்தான். ஒரு நாள் எதார்த்தமாக அந்த வழியே செல்ல அந்த பெண் அவன் கிட்ட அவ இவனை காதலிப்பதாக கூறி கடிதம் ஒன்ரையும் கொடுத்திருக்கிறாள். அதை என் கிட்ட அவன் காமிச்சான். நான் அப்பவே சொன்னேன், இதை பெரியவங்கள்கிட்டு காமிச்சு உன் மேல எந்த தப்பு இல்லனு ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திடலாமுனு. அவன் தான் அந்த பொண்ணுக்கு இன்னும் பக்குகவம் இல்லை சின்ன பொண்ணு எதோஆர்வத்தில எழுதிடுச்சு.இது அவங்க வீட்ல தெரிஞ்சா கொன்னு போட்டுடுவானுங்கானு இரக்கப்பட்டான்.
அவன் அமைதியை பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல. இன்னோரு கடிதம் எழுதிருக்கு. அதை அவங்க அண்ணன் ( சின்ன பையன் தான்.என்ன ஒரு 20 வயது இருக்கும். அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாதுனு நினைக்கிறென்.குடும்பலும் வசதி எல்லாம் கிடையாது. அவங்க சொந்தகாரங்கதான் வசதியா இருக்கானுங்கனு ). உடனே அவன் ரவுடி ஆயிட்டேன். (செந்தில் கவுண்டரை பார்த்து சொல்ற மாதிரிதான் கத்தி எடுத்தவன் எல்லா ரவுடிங்கிறான்). அந்த பொண்ணை லைட்டா கண்டிச்சு விட்டிட்டு..இவனை புடிச்சு சாதிய வைத்து இழுவு படுத்தி பத்து பேர் (எல்லா அவங்க சமூகத்து பசங்க ) அடிச்சு பிட்டாங்கே. அவன் எவ்வளோ சொல்லியும், அவனுங்க சொல்றது அது சின்ன பொண்ணு . (வாயில் விரலை வைத்த கூட கடிக்க தெரியாது ) இவன் தான் அது மனதை கெடுத்துட்டான். அப்படினு அவன் தங்கச்சி சொக்கதங்கம் மாறி பில்டப் பண்ணிட்டானுங்க. அப்புறம் பஞ்சாயத்து பண்ணி, அவன் அந்த தெரு பக்கட்டே போகாம, வேற சுத்து வழியா போய் வந்துகிட்டுருந்தான்.
அப்புறம் ஒருவழியா வெளி நாட்டில் வேலைகிடைச்சு போய்ட்டான். அப்புறம் 2 வருசம் கழிச்சு லீவில் வந்தான். பொண்ணுபார்த்து கல்யாணம் பண்ணிடலாம்னு அவனை பார்க்க போனப்ப வீட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்பதைக்குனு பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணவரன் பார்த்திறாங்க.ஆனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணினா சிவாவதான் பண்ணுவேன் சொன்னாதாம் இவன் வந்திருக்குறதை எப்படியோ தெரிந்துகிட்டு ( என்னா வில்லத்தனம் ) . மறுபடியும் அவங்க அண்ணன் லூசு கத்தி எடுத்துகிட்டு பத்து பேறோடா சிவா வீட்டுக்கு போய் அவனை குத்த முயற்சி செய்திருக்காங்க. அதில் அவன் நண்பனுக்கு அடிபட்டுச்சு சிவா எப்படியோ தப்பிச்சு ஓடிட்டான். போலீஸ்ல சொல்லவேண்டியதானட கேட்டேன்.இன்னைக்கு சொல்லாம்டா.நம்ம தெருவை சுத்தி அவனுங்கதான் இருக்கானுங்க. போலிஸ் எப்போதுமே இங்க இருக்க முடியாதுனு அவங்க அண்ணன் சொன்னதாக சொன்னான்.( உண்மைதான்). அப்புறம் மறுபடியும் பஞ்சாயத்து அப்பவும் ஒருதலை பட்சமாகவே எல்லாரும் பேசினாங்க. அவன் மறுபடியும் இந்த ஊரே வேணாம்டா மறுபடியும் வெளி நாட்டுக்கே போய்ட்டான்.
அப்புறம் கடந்த மாதம் அவனும்மு திருமணம் எங்க ஊரில் ஒருத்தருக்கு கூட சொல்லல. பொண்ணு வீட்ல வத்து கல்யாணம் பண்ணிட்டு இப்ப சேலத்துல் குடும்பத்தோடா இருக்கான். ஏண்டா ஊரில் யாருக்கு சொல்லனா, அந்த பொண்ணுக்கு தெரிந்த எதாவது பண்ணிகுடுச்சான் அதுக்கு நான் தான் காரணம்னு உயிர எடுப்பானுங்க.அதான் ஊரில் யாருக்கும்
சொல்லலைனான்.
ஒரு பொண்ணாலயும் ,இந்த சாதி வெறினாலும் ஒருபாவமும் அறியாத சிவா பாதிக்கபட்டான். இந்த மாதிரி எத்தனொயோ சம்பவங்கள் எல்லா ஊரிலையும் நடக்குது. நிறைய பேர் தீண்டாமைக்கும் , சாதிய இகழ்வலுக்கு பார்பணர்கள் காரணமும் என்று அவர்களையே திட்டி தீர்க்கிறார்கள். எனக்கென்னமோ அவர்களாய் திட்டுவது சுலபம் என்பதால் தான் அவர்களை திட்டுவதாக நினைக்கிறென். தமிழ்னாட்டில் நடக்கும் சாதிய இகழ்வளுக்கு பெரும்பாலும் யார் காரணம் ?? பதில் உங்க மனசாட்சிக்கு தெரியும் அது பார்பணர் அல்லாத பிற மேல்சாதி வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்று.
~
Tuesday, September 1, 2009
தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்தாதீர்கள் !
காசு வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க, அல்லது சினிமாக்காரனுக்கு தான் ஓட்டு போடுவாங்க தமிழ் மக்கள் என்ற மாயை பத்திரிக்கைகளாலும், ஒளி ஊடகங்களாலும் ஏன் நிறைய பேரின் பதிவின் மூலமாகவும் உருவாக்கபடுகிறது. இது எல்லா தமிழ் நாட்டு மக்களையும் இழிவு படுத்தும் செயல்.
ஓட்டு போட்ட அனைவரும் பணத்துக்காகதான் ஓட்டு போட்டாங்கனு என்பதை நான் ஒத்து கொள்ளாமாட்டான்.
இவங்க பணம் வாங்காட்டியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவருக்கு தான் போட்டுறாப்பாங்க!
எதையுமோ சும்மா கொடுத்தா பெரும்பான்மையான மக்கள் வாங்கதான் செய்வார்கள் ( அது மாற இன்னும் சில தலைமுறைகள் ஆகும்).
அப்ப பணம் சும்மா கொடுத்த வாங்காமாலா இருப்பார்கள். பணம் வாங்கியதற்காக அவனுக்கு ஓட்டு போடனும் நினைப்பவர்கள் சதவீதத்தில் குறைவு !
முடிவு அவங்களுக்கு சாதகமா வந்தால் மார்தட்டி கொள்வதும், இல்லாட்டி காசு கொடுத்தாட்டாங்கே என்றும், மெசின் கோளாறு என்று சொல்வது சின்ன பிள்ளை தனமா இல்லை ? எதிர்கட்சி ஜெயித்தா தமிழ் நாட்டு மக்கள் கூலிக்கு வோட்டு போடுபவர்களா? அப்படி சொல்லுவர்கள் வாழ் நாள் முழுசாசொல்லிட்டே இருக்க வேண்டியதுதான் !
ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான் உத்திரபிரதேசத்துக்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது , ஆனா தமிழ் நாட்டிற்கு விஜய்யை காங்கிரசில் சேர்ப்பது..
இதில் இருந்து என்ன தெரியுது ? தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் கேனப்பயலுங்க ! விஜய் வந்து "அண்ணா காங்கிரஸ்க்கு வோட்டு போடுங்கனா .." என்ற சொன்னவுடன் அலை அலையா போய் கை சின்னத்துல வோட்டு கொத்துவாங்கிடுவானுங்க என்ற நினைப்புதானே !
இதை மார்தட்டி மாஸ்டர் பிளானு வேற சொல்லுபவர்கள் மூஞ்சில் காரி துப்பலமா கூடாதா ?
~
Tuesday, August 18, 2009
மாமியார் மருமகள் - நடுவில் மகன்கள் படும் பாடு பாவம்தானே ?
உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம் போல இதை தீர்க்க எத்தனை பேர் வந்தாலும் முடியாது போல ! இவர்கள் சண்டையில் பெத்த/வளர்த்த அம்மாவையும் கண்டிக்க முடியாமல் , நம்பி வந்த மனைவியயும் கட்டு படுத்த முடியாமல் ஆண்கள் படும் கஷ்டம் இருக்கு பாருங்க ! சொல்லிமாளாது ! மருமகள் பக்கம் பேசினா, பொண்டாட்டிதாசன் என்றும், அம்மாவை கொடுமை படுத்திறான் பிள்ளை என்ற நற்பெயர்களும், அம்மா பக்கம் பேசினா, மருமகளை கொடுமை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் அதிகமானால் வரதட்சினை கொடுமை வழக்கையும் சந்திக்க நேரிடுகிறது..
அப்படி இவங்களுக்குள் என்னதான் அப்படி பிரச்சனை என்று பார்த்தால் சின்ன பிரச்சனையாக இருக்கும் அதிய ஊதி பெரிதாக்கி கடைசில வெடிக்கும் சமயத்தில் நம்ம கிட்ட பஞ்சாயத்துக்கு வரும்..நம்மாளுங்களும் வழக்கம் போல தலைய தலைய ஆட்டிட்டு சரி விடும்மா, / சரி விடுடினு ..சொல்லி சமாதான படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். மாமியார்களுக்கு, மனதுக்குள் மருமகள் நமக்கு சேவை செய்ய வேண்டும், அல்லது நம்ம மாமியார்கிட்ட இருந்த மாதிரி இவளும் இருக்கனும், அவ மகன் கிட்ட இருந்து தன்னை பிரித்துவிடுவாள் என்ற எண்ணங்கள் உண்டு..அதை சிலபேர் அடக்க தெரிந்திருக்கிறார்கள் .சிலருக்கு அது முடியவில்லை ! இன்னொரு பக்கம் மருமகள் முதலில் கொஞ்சம் பொறுத்து போனாலும் சிறிது காலம் கழித்து அந்த பொறுமை காணாமல் போய்விடுகிறது. இவங்களுக்கு ஏன் நம்ம அடங்கி போகனும்,(அவங்க நல்லதே சொன்னாலும்) இவங்க சொல்றத நாம ஏன் கேட்கனும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அப்புறம் மாமியாரை வில்லி போல பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஒரு உண்மை சம்பவம். நான் ஈரோட்டில் பக்கத்தில் ஒரு திருமணத்துக்கு சென்று இருந்தேன். ஒரு பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸில் முன்பக்கம் கூட்டமாய் இருந்தது. பின்னாடி கடைசி சீட்டில் ஒரே ஒருத்தர் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் " அட கிருக்க பயலுகலே ..பின்னாடி சீட்டே காலியாக இருக்கும் போது முன்னாடி ஏண்டா போய் நிக்கீறிங்கனு நினைச்சுட்டு " நான் போய் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவர் தீடீரீனு "அம்மா ஏம்மா இப்படி கத்துற ! மானம் போகுது ..ஏண்டி நீதான் கொஞ்சம் அமைதியா இறேண்டினு " பேச ஆரம்பிச்சார். நான் அவர் செல்போன் மைக்லதான் பேசறார்னு நினைச்சேன்.கொஞ்ச நேரத்தில் "அம்மா அம்மானு" அழ ஆரம்பிச்சிட்டார். அப்புறம் இறங்கனதுக்கு அப்புறம் விசாரிச்சா, அவருக்கு புத்தி சுவாதினம் இல்லையாம்.நல்ல படித்தவராம். இவருக்கு கல்யாணதுக்கு அப்புறம் மாமியார், மருமகள் சண்டையில் ஒரு நாள் அவங்க மனைவி கோபபட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டாங்களாம். இவர் அவங்க அம்மாவை கண்டிக்க அவங்க அம்மா அன்று இரவு தற்கொலை செய்திட்டாங்களாம். அவங்க அம்மா இவரை கஷ்ட பட்டு வளர்த்தாங்களாம். அவங்க இறந்திருந்ததுக்கு அப்புறம் இவர் இப்படி புத்திசுவாதினல்லாமல் போய்ட்டாராம்..ஒரு குடும்பமே சிதைந்திருச்சு ! யார் மீது குற்றம் இருந்தாலும் இதில் எல்லாருக்குமே நஷ்டம் தான்.அவங்க அம்மா உயிர் போச்சு..அவர் மற்றும் இவரது மனைவின் வாழ்க்கை போச்சு ! இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்கு ! இன்னைக்கு கூட பேப்பரில் மாமியார், மாமனாரை விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என்று சொன்னதால் மனைவியை கொன்ற மகன் என்று செய்திவந்துருக்கு .
கூட்டு குடும்பத்தில்தான் இந்த பிரச்சனை , தனிக்குடித்தனம்தான் தீர்வு என்றால் வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க மாட்றானுங்க அப்படினு அவப் பெயர் அந்த மகன்களுக்கே ! மறுக்க முடியமா யாராலவது ? நீங்க நிறைய வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ..அப்பாவின் சொந்தங்களோட தொடர்பு கொஞ்சமாத்தான் இருக்கும்..அதுவும் விழாக்கள் போன்றவற்றில்தான் . அம்மாவின் சொந்தத்தில்தான் தொடர்பு அதிகமா இருக்கும் ..அம்மா பெரும்பான்மையா அப்பாவின் சொந்தங்களோட பழகவே விடமாட்டாங்க.. ஏன் இப்படி ? இதுக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தனும் நீங்க நினைக்கலாம்..ஆனா எனக்கென்னமோ அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறமாதிரியே தோனுது ? மொத்தத்தில் பார்த்தீங்கனா பாதிக்கபடுறது பாழாப்போன ஆண்வர்க்கம் தானுங்க ! ஏன் இப்படி ? மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன என்று மூலையில் உட்கார்ந்து யோசிச்சு பின்னோட்டம் போடுங்க !
~
Thursday, August 13, 2009
மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !
மாநகராட்சி பூங்கா ! கலாச்சார காவலர்கள் !
நேற்று மாலைப்பொழுதில் உணவருந்த, நண்பனுக்காக அசோக் நகர் பூங்காவிற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.அவன் வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும் என்று கூறியதால், பக்கத்தில் இருக்கும் அசோக் நகர் பூங்காவிற்கு சென்று அமரலாம் என்று பூங்காவினுள் சென்றேன். 100 அடி ரோட்டில் வாகன சத்தங்களுக்கு இடையே ஓரளவுக்கு நன்று பராமரிக்க பட்ட அமைதியான பூங்கா ! பெரியவர்கள் பூங்காவினுள் அமர்ந்து வேகமாக ஓடும் நகர வாழ்க்கை சற்று மறந்து , தங்கள் கால நினைவுகளை அசை போட்டு கொண்டுருந்தனர். குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர் . உட்கார இடமில்லாவிட்டால் தரையில் உட்கார்ந்து இளசுகள் அரட்டை அடித்து கொண்டுருந்தனர். சில நடுத்தர வயது தம்பதியியனர் அமர்ந்து பட்ஜெட் போட்டு கொண்டிருந்தனர். சில காதலர்கள் கவலைகள் மறந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் . பூங்கா என்றால் பூக்கள் கூட இல்லாமல் இருக்கும் காதலர்கள் இல்லாமல் இருக்குமா ! நானும் சற்று நடந்து எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த கலாச்சார காவலர் இளம் வயது காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார். ஜோடியாக அமர்ந்திருந்த சுடிதார் பெண்களை எல்லாட் கிட்ட வந்து இவன் யாரு ! போய் கல்யாணம் பண்ணிட்டு வாங்க ! இல்லை லாட்ஜ்க்கு போங்க இங்கே எல்லாம் வரகூடாது என்று கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல் விரட்டினார். அந்த வழியிலே பார்தாலே ரிச் லுக்ல ஒரு ஜோடி இருந்தது. அந்த போலீஷ் அவர்களை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை . என் பக்கத்தில் இருந்த ஜோடிக்கு வந்து இந்த பொண்ணு யாருன்னு கேட்டாரா, அவ்வளுதான் அந்த பொண்ணுக்கு வந்துச்சு பாருங்க கோபம் "யாருனு கட்டகிற போற பொண்னு ஏன் கேட்கிறங்க..இங்க என்ன கட்டி பிடிச்சிட்டா இருக்கோம் பேசிட்டுதானே இருக்கும்" அப்படுனு கோபமா சொல்ல அவர் பேயரஞ்ச மாதிரி ஆயிட்டாரு ..அப்புறம் சுதாரித்துகிட்டு , என்னே போலீஷ்கிட்டே திமிரா பேசிறியா வாங்க ரெண்டு பேரும்னு கூட்டிட்டு போய்ட்டாரு ! அந்த பையன் தான் பயந்தான் , ஆனால் அந்த பொண்ணு வாங்க பார்த்திரலாம்னு தைரியமா பேசுனாங்க !
கடைசிக்கு யாரும் மறைவிடத்தில் போய் பேசலாம்.எல்லாரும் பண்பா பெஞ்சில்தான் உட்கார்ந்து பேசனாங்க !அந்த போலிஷ் ஏன் அந்த ரிச் லுக் ஜோடிய மட்டும் எதுவும் கேட்கல .கடைசிக்கு அவங்கதான் கொஞ்சம் நெருக்கமாய் இருந்தார்கள் .
எந்த சட்டத்தில் உட்கார்ந்து பேசுவது தவறு என்று தெரியவில்லை ! சட்ட பூர்வமாக இந்த காவல்துறை அதிகாரிய என்னே செய்யலாம்..
தெரிந்தவர்கள் சொல்லுங்க ! இல்லை இப்படி பட்ட சமயங்களில் இந்த மாதிரி அவமானங்களை, தொல்லைகளை தாங்கிதான் ஆக வேண்டுமா ?
~
Tuesday, July 28, 2009
சாவுங்கடா ! நான் தான் அடுத்த முதலமைச்சர் சொல்கிறார் மக்கள் இயக்கம் தொடங்கிய விஜய்
பின்னர் விஜய் பேசுகையில்,
என்னிடம் உள்ள சமூக சிந்தனை ரசிகர்களாகிய உங்களிடம் உள்ளது. உங்களிடம் உள்ள சமூக கண்ணோட்டம் என்னிடம் உள்ளது. நான் 50 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நீங்கள் 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறீர்கள்.
நான் 100 ஏழை குழந்தைகளுக்கு மோதிரம் போட்டால் நீங்கள் 10 குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். அதே போல் பள்ளி மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்.
ஏழை மாணவ, மாணவிகள் பயில இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் நல்ல காரியத்தால் எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்கிறீர்கள்.
எனது அப்பா லேசான கோடு கிழித்து ஒத்தையடி பாதை காட்டினார். நான் அதை தார் ரோடாக மாற்றினேன். பின்பு அதனை ஹைவே ரோடாக மாற்றினேன். மீண்டும் உழைத்து அதை 6 வழி சாலையாக மாற்றி உழைத்து வருகிறேன்
இந்த இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், ஒரு லட்சம் உறுப்பினர்களையும், நகர, வட்டங்கள் சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும், கிளை மன்றங்களின் சார்பில் 5 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.
இந்த இயக்கம் எப்படி வரும். எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும். அப்போது என் குடும்பம் என் தொழிலை விட இந்த கட்சியை பெரிதாக எண்ணி உழைப்பேன். அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.
எனக்கு தெரிந்த விஜய் ரசிகர் மன்றத்தை உதராணாமா வைத்துதான் இதை எழுதுகிறேன்.சில ஒழுக்க சீலர்கள் இருந்தால் மன்னிக்கவும் ! ஒக்கா மக்கா ஆனா ஊனா நலத்திட்ட உதவிகள் ஏண்டா இப்படி எத்தனை நாளைக்குடா செய்தித்தாள செய்திவர்ரதுக்காக சீன் போடுவீங்க !
இப்படிதான் கோடையில் தண்ணீர் பந்தல் பயங்கர செலவு பண்ணி , சீன் போட்டு ஆரம்பிச்சானுங்க ! ஆரம்பிச்ச நாள் அன்று செலவு செய்ததை வைத்து ஊருக்கே கோடையில் தண்ணீர் கொடுத்திருக்கலாம்..ஆனா ஆரம்பிச்சா 1 வாரத்துக்கு அப்புறம் பராமரிக்க ஆள் இல்லை ! இப்படித்தான் நடக்குது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்..3 மண்குடம் வச்சு தண்ணீ ஊத்த 1 லட்சம் செல்வு பண்றாங்க ! எல்லாம் பேப்பர்ல நியுஸ் வர்ர வரைக்கும் தான் ..ஏண்டா உங்களுக்கு எல்லாம் எங்கிருந்துடா காசு வருது ! அதை உருப்படியா செலவு பண்ணலாம்ல !
இலங்கை மக்களுக்காக 1 லட்சம் கொடுத்து புட்டு , லாரன்சே 10 லட்சம் கொடுத்தார், மேடையில் எதோ இவரை பற்றி எதோ சொல்ல அந்த image சரிவை சரி செய்ய காசு செலவு பண்ணாம ஒரு நாள் சாப்பாடை மட்டும் விட்டு கொடுத்துட்டு உண்ணாவிரதங்கிற பேர்ல உன் பாட்டை போட்டு டான்ஸ் ஆடுன கூட்டம் தானடா நீங்க ! இதுல வேற வாங்கின பிரியாணி பத்தலனா மேடையிலே உங்க அப்பன் சொன்னார்..உண்ணாவிரதம் ரொம்ப சந்தோசமாய் இருந்த்து நீங்க சொன்னப்ப எனக்கு வந்த ஆத்திரத்துக்கு தொலைக்காட்சி உடைத்திடலாம் போல இருந்தது !
இவர் அப்பா ஒத்தையடி பாதைய காண்பித்தார் , இவர் தார் ரோடா மாத்தினாராம்..இதை படிக்கும் போது இவர் ஆரம்ப காலத்தில நடித்த ரசிகன் ..போன்ற மிகச்சிறந்த படங்களும், சங்கவி இவங்க கிட்ட பட்ட பாடும் தான் நாபகம் வருது !
விஜய் அரசியலுக்கு வரவேண்டும்..காசை எல்லாம் விட வேண்டும்..வாடி மாப்ள இருக்குடி உனக்கு !
விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசுகையில்,
நான் பல புரட்சி படங்களை தயாரித்துள்ளேன். அதில் அநியாயங்களை தட்டி கேட்கும் கதை அதிகமாக இருக்கும். இதனால் நாடு மாறவில்லை. இதற்காக யாரும் என்னை பாராட்டியதும் இல்லை. இது என் மனதில் எழுச்சியாக இருந்தது.
இதனால் என் மகனை நடிக்க வைத்து அதன் மூலம் எழுச்சியை கொண்டு வந்தேன். இதற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தேன். அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.
உறுப்பினர்களை சேர்ப்பதை பொறுத்து தான் உங்களின் கனவு நினைவாகும். உண்மையான உணர்வு உள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம் என்றார்.
இவர் ஆதி போன்ற புரட்சி படங்களை தயாரித்து இருக்கிறார்..ஆனால் பாவம் பாருங்க இவர யாருமே பாரட்டல ! விஜய் TV ல போக்கிரி படத்தைவிட அதிகம் வரவேற்பு பெற்ற பேக்கிரி லொள்ளுசபாவுக்காக அவர்களை மிரட்டி அப்புறம் அவர்களே விஜய் பிறந்த நாள் கொண்டாடவைத்தவர் ! அதில் ஒருத்தன் பாண்டிசேரிலிருந்து, சென்னை வரைக்கும் பின்னாடியே நடந்த வந்தான்..விஜய் ரசிகனாம்..அப்பா எப்பேர் பட்ட பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் அவங்க பெற்றோர்களுக்கு ! மக்களே இந்த கொடுமை எல்லாம் தமிழ் நாட்டில் இருந்தா பார்த்துதான் ஆகனும் வேறவழியில்லை !
மகனை நடிக்க வச்சு எழுச்சியை கொண்டுவந்தாராம். முடிலடா சாமி ! ...உங்களுக்கு எல்லாம் மன்சாட்சி இல்லையா ~ கனவு நினைவாகுமா..என்ன கனவுடா ? முன்னாடியாச்சும் ஒரு பேச்சுகாவது மக்களுக்கு நல்ல செய்வோம்னு சொல்வாங்க ! இப்ப எல்லாம் அது கூட இல்லை !
நீங்க வாங்க அரசியலலுக்கு ! இப்ப தமிழ் நாட்டு மக்கள் உசாருடி ! விவேக் ஒரு படத்தில் லெஃப்ட ல இண்டிகேட்டர் போட்டுட்டு ,ரைட்ல கைய போட்டு, நேரா போய்டே இருப்போம்னு சொல்றமாதிரி ஒருத்தனே பத்து கட்சில உறுப்பினரா இருப்போம்..எவன் ஆட்சில இருக்காணோ அவன் கரை வேட்டி கட்டிப்போம்..உங்களுக்கு தான் வோட்டுனு காசு கொடுக்கிறவங்க எல்லாட் கிட்டயும் வாங்க்கிட்டி, எங்க விருப்படி ஓட்டு குத்துவோம் !
வாடி மாப்ள் வா !
Thursday, July 9, 2009
கரணம் தப்பினால் மரணம் - அந்நியன் !
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை சர்க்கஸ்லயோ , இல்ல எதோ சாதனை நிகழ்ச்சிகளிலோ அல்ல..நம்ம சென்னை வாழ் வாகன ஓட்டிகளுக்குதான் .(குறிப்பா இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷேர் ஆட்டோவில் புட் போர்டு அடிக்கரவர்களுக்கு தான்..பஸ்ஸில்தான் அப்படினா , ஷேர் ஆட்டோவிலுமா? ) வேகம் ,விதி மீறல்கள், ஹார்ன் என்று இவர்கள் செய்யும் அட்டூழியும் இருக்கே தாங்க முடியல ! நடைபாதை மேடா இருந்தால் கூட அதில் பைக்கை ஏத்தி ஓட்றாங்க ! இதில் வேற நடைபாதையில் போறவங்களை தன் பைக்கு வழிவிட சொல்லி ஹார்ன் அடிக்கிறாங்க ! கேட்டா அவசரம்..அவசரம்.எனக்கு இப்படி நடந்தது..வேற எங்கேயும் இல்லைங்க படித்த மக்கள் அதிகமாக் வாகனம் ஓட்டும் டைடல் பார்க் அருகாமையில். நான் அப்படியே திரும்பி பார்த்து, அங்கேயே நின்று அவரை முறைத்து பார்த்து பிறகு நடைபாதயில் இருந்து இறக்கி சாலையில் ஓட்டி சென்றார்.ஆனால் இந்த முரைப்பு எல்லாம் எத்தனை பேரு கிட்ட வேலைக்கு ஆகும்னு தெரியல !.
இதே மாதிரி எல்னெட்/டைடல் பார்க் வழியா வண்டிகள் செம வேகமா போகும். இவங்களாய் சாமளித்து உள்ளே போறதக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் போய் tidel and elnet secutiry roomla சொன்னேன் இங்க speed braker போடுங்கனு. அவர் தலை தலையா ஆட்டுனார். அதுக்கு அப்புறம் நான் ஒரு வருடம் வெளி நாடு சென்றுவிட்டென். போன வாரம் அங்கு போன போது speed braker இருந்தது. நான் பரவாயில்லையேனு என நண்பங்கிட்ட சொன்னபோது, அவன் சொன்னா இரண்டு மூனு தடவை விபத்து நடந்திருச்சு அதனால் தாண்டா போட்டாங்கனு.. இப்படி எதாவது நடந்தாதான் நம்மாளுங்க விழிக்கிறாங்க !
இதே மாதிரி cross junction singnalஅ ரெட் விழுந்தா கூட, எதிர்தரப்பில் வண்டி நெருங்கும் வரை சாலையை கடக்கிறாங்க..சிலபேர் கடைசி நொடி வரை முயற்சி செஞ்சிட்டு முடியல எனும் போது அப்படியே சாலை நடுவுல "பெப்பரே பேனு" நிற்பான் பாருங்க ! போறவன் வர்ரவன் எல்லாரும் அவனை திட்டுவான்..திட்டி புட்டு அடுத்த சிக்னல்ல அவனும் அதேதான் செய்வான் .
சாலையில் எல்லாரும் ரேஸ் ஓட்டுற மாதிரிதான் ஓட்றாங்க ..அதிலயும் சிக்னல் போட்டவுடன் பாருங்க ! ஏண்டா இவ்வளு வேகாம ஓட்றீங்கனு கேட்ட எனக்கு பின்னாடி வர்றவன் வேகமா வர்றான் அதனால் நான் வேகாம போறேன் சொல்றாங்க எனக்கு நெருங்கிய நண்பர்கள் ! வேகாம போய் குப்பறக்கு அடிச்சு விழுந்து உறுப்புகளை இழந்தவங்க எத்தனை பேர். இரண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி காந்தி நகர்ல் வேலை பார்த்துகிட்டிருந்தேன். ஒரு நாள் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன், அப்போ வண்டியில் வேகாம போனவன் வழியில் என்ன குறுக்கிட்டிச்சு தெரியல், தீடிர்னு பிரேக் போட்டு கிழே விழுந்தான். நல்லவேளை அவன் மண்ணில் விழுந்ததாலும், தலைகவசம் அணிந்திருந்தாலும் சிறு காயங்களுடன் தப்பித்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் போய் தூக்கிவிட்டோம். ஒருத்தன் கிழே விழுந்த அறிவுறை சொல்ல ஒரு கும்பல் கூடுவது வழக்கம் என்றாலும் ஒரு ஊனமுன்றவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் கேட்கிறது. "தம்பி கை, கால் எல்லாம் நம்மளோட விலை மதிக்க முடியாத சொத்து..அதை இழந்திடாதா.. அதோட அருமை இல்லாதங்களுக்கு தான் தெரியும்" .என்பதுதான்.
அப்புறம் பாதசாரிகள் , சிக்னலே இருந்தாலும் சாலை கடக்கிறதுக்குள்ளா செத்தொம் பிழைச்ச கதை தான். வெளி நாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை.ஆனால் நம்ம முதியவரா இருந்தாலும் அவர்களை மதிப்பதே இல்லை. என்னடா இவன் வெளி நாட்டு புகழ் பாடுறானு நினைக்க கூடாது. உண்மையை என்றைக்கு ஒத்துகனும். சும்மா நாங்க மூவாயிரம் வருசத்து முன்னாடியே நாகரீகம் போற்றினோம் கதை எல்லாம் வேலைக்கு ஆகாது. ( இதற்கு எது தமிழ் கலாசாரம்னு தனி பதிவு போடுறேன் )
ஏன்னு இபப்டி பண்றீங்கனு கேட்ட ஒரே பதில் "அவசரம் ,லேட் ஆயிடுச்சு".. தினமுமா லேட் ஆகுது ? அந்நியன் படத்தில விக்ரம் சொல்லும் போது கைதட்டும் நம்ம, நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியதா ? ஆனால் வெளி நாட்டுக்கு போன மட்டும் Rules சரியா பின் பற்றுவோம். இதை பத்தி என்னோட வெளி நாட்டு நண்பர் சொன்னார் Volumea face பண்ற அளவுக்கு infrastructure இருந்தா எல்லாரும் கடைபிடிப்பாங்க , அப்புறம் எல்லாரும் சொல்ற மாதிரி "ஊரொடு ஒத்து போ" பழமொழி சொன்னார். இங்க எல்லாரும் கடைபிடிக்கிறாங்க , அதனால்தான் இங்க வர்றவங்களும் கடைபிடிக்கிறாங்க அதுவும் மட்டும் இல்லாமல் அதுக்கு தகுந்த மாதிரி சாலை வசதிகள் மற்றும் infrastructure இருக்கு அப்புறம் Volumeம் கம்மியா இருக்கு, ஆனால் உங்க ஊரில் Volume அதிகம் அதனால் தான் அங்கே கடைபிடிக்கிறதில்லை. இதுவும் யோசிக்க வேண்டியதான் இருக்கு .
இப்படி நம்ம நாட்டில எந்த ஒரு பிரச்சனைக்கு , கடைசியா கடைசியா root cause மக்கள் தொகை அல்லது நம்ம தட்ப வெப்ப நிலை யாதான் இருக்கு.வெளி நாடுகளுக்கு நல்ல குளிரான தட்ப வெப்பனிலை, பரந்த நிலப்பரப்பு, குறைவான் மக்கள் தொகை, நல்ல வளம் என்று கொடுத்திருக்க ஆண்டவன் நம்மளை மட்டும் ஏன் சபிச்சிட்டானு தெரியல!
~
Tuesday, June 2, 2009
தேர்தல் என் கருத்துகள்
என்னதான் எல்லாரும் பணத்தால் தான் திமுக வெற்றி பெற்றதாக கூறினாலும், பணம் மட்டுமே வெற்றி தந்துவிட முடியாது..வேட்பாளர் தேர்வும், தேர்தல் களப்பணியும் முக்கியம்.இந்த தேர்தலில் திமுகாவிற்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற மாய மப்பில் எதிர்கட்சினர் இருந்தனர். இந்த தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். தோல்வியை ஒப்புகொண்டு , வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு , தவறுகளை ஆராய்ந்து திருத்தி கொள்ளாமல் மெசின் சரியில்லை, பண கொடுத்தாட்டாங்கே என்று சொல்லி கிட்டிருந்தா அடுத்த தேர்தலிலும் இதேதான் சொல்ல வேண்டியிருக்கும். பணத்தால் வெற்றி பெற்றதாக சொல்லும் அனைவரும் தமிழக மக்களை இழிவு படுத்துகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்..
அதை போல ஈழ பிரச்ச்னையில் தமிழக மக்களுக்கு அக்கறையில்லை என்று இந்த தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து கொள்ள கூடாது.. இங்கு நடந்த ஈழ போராட்களில் முக வை வசைபாடும் மேடையாகவே எதிர்கட்சினர் பயன்படித்தினர்.. அதை சாமானியன் ரசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்..
திமுக :- வேட்பாளர் தேர்வு , தேர்தல் களப்பணி , மக்களுக்கு நம்பிக்கை தரும் பிரபலமான முகங்களின் பிரச்சாரம், தேமுதிகவின் வாக்கு பிரிப்பு ஆகியவே வெற்றிக்கு காரணம்..பணம் என்று சொல்லுவது முட்டாள்தனம்.எல்லா கட்சிகளும் தான் செலவுசெய்தன...
அதிமுக :- அதிமுகாவை பொருத்தவரை அவர்களுக்கு வெற்றிதான்..9 இடத்தில் வெற்றி . அவர்களின் ஒட்டு மொத்த ஒட்டு சதவீதம் குறையவில்லை..என்ன ஒன்னு திமுக எதிர்ப்பு ஒட்டுகள் கிடைக்கவில்லை..எல்லாம் கருப்பு எம்ஜி ஆர் வந்த விளைவு ..
தேமுதிக :- எல்லா கட்சியினரையும் வசைபாடுவதை தவிர வேற எதுவும் உருப்படியான் திட்டம் எதையும் முன்வைக்காதது.. சொன்னா காப்பி அடித்திடுவாங்கனு சின்னபிள்ளைதனமாய் சொன்னது..அப்படியே காப்பி அடித்தா என்ன ! மக்களுக்கு நல்ல நடந்தால் போதாதா..அதை நீங்க தான் செய்யனுமா..என்ன லாஜிக் இது
காங்கிரஸ் :- singh is king ..இலங்கை பிரச்சனை தவிர , காங்கிரஸின் மீது மக்களுக்கு கோபம் இல்லை இளங்கோவன் தோற்றது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..ஆடியா ஆட்டம் என்ன ...
மதிமுக :- வைகோ தோற்றது அதிர்ச்சி ! நல்ல பேச்சாளர்..நல்ல தலைவனாக இல்லாமல் போய்விட்டார்..இல்லை அப்படி ஆக்கபட்டார். அரசியலில் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததின் விளைவு அம்மாகிட்ட அடைக்கலம் நாடி நிக்கிறார்.வீரவசனங்களை தவிர மக்கள் நெருக்கம் இல்லை..அம்மா பின்னாடியே கை கட்டி நின்னா வேலைக்கு ஆகாது.இதை வைகோ என்னைக்கு புரிந்து கொள்வாரோ ! இவருகு ராமதாஸ் பரவாயில்லை கூட்டணியில் இருந்த போது கூட அடிமையாக இருக்கவில்லை..
பாமக :- அனைவரும் அறிந்ததே ...அகந்தையால் தோற்றுபோனார்கள்.....இலங்கை பிரச்சனையில் முக வையும், காங்கிரசையும் வைத்து text book management style game ஆடி
வின் - வின் சூழ் நிலை உருவாக்கிட்டதா நினைத்தார்..இப்போது புரிந்திருக்கும் அது எல்லாம் கதைக்கு ஆகாது என்று
கம்யூனிஸ்ட் :- காத்து இந்த முறை அடிக்கவில்லை..கணிப்பு பொய்யா போச்சு...தாபாண்டியன் தோல்வி அதிர்ச்சியே..அமெரிக்காவா எதிர்க்கும் அளவுக்கு நம் நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்றே நான் கருதிகிறேன்..
கார்த்திக், சமக :- பாவம் பாஜக எத்தனை கோடி இவங்களுக்கு கொடுத்தாங்களோ !
பாஜக :- தமிழக பாஜக அதிமுகா நம்பி இருந்தது கடைசியில் அவமானபடுத்தபட்டது.. இன்னும் பயிற்சி தேவை..மற்றபடி நல்ல தலைவர்கள் அங்கு இல்லாமல் இல்லை..இல.கணேசன், திருநாவுக்கரசர் போன்றோர்கள் தோற்றது பரிதாபமே !
மமக, :- மதவாத கட்சிகள் தனித்து நின்று வெல்வது எல்லாம் கானல் நீர்தான்..இவர்கள் தமிழ்நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகளை எண்ணினால் கூட 1 லட்சம் தாண்டாதுதான் நினைக்கிறேன்..
கொங்கு கட்சி:- ஜாதிகட்சியும் தனித்து நின்று வெல்வது சாத்தியம் இல்லை இது அவர்களுக்கே தெரியும்.. இந்த தேர்தலில் எப்படி தங்கள் சாதிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர்கள் இன மக்களுக்கு "அன்பு" கட்டளை இட்டார்களே அதை போல கொங்கு மண்டல்த்தில் இன்னும் நடைமுறையில் இருக்கும் கொத்தடிமை, இரட்டை குவளை , தீண்டாமைக்கும் ஒரு கட்டளை இட்டார்களே ஆனால் அவர்களுக்கு கோடி புண்ணியம் ..(எல்லாரையும் குறிப்ப்டவில்லை ஒரு சில இடங்களில் ஒரு சிலரால் மட்டும் இது இன்னமும் இருக்கிறது )
லதிமுக :- அப்படினா ? ..
மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்றே காட்டுகிறது.ஒரே நாளில் மாற்றம் வராது..இது ஆரம்பம்..தான்
~~~~
Tuesday, May 19, 2009
வெள்ளை பூக்கள் மலரட்டும் ...
இப்போது சாந்தியா ராஜிவ் குடும்பம் மற்றும் காங்கிரஸ்காரர்களே, சுப்பிரமணிசாமி மற்றும் வட நாட்டு தொலைகாட்சி குழுமங்களே..இப்போது சாந்தியா?
தன் மகனை முதலவராக்கலாமா, பிரதமராக்கலாமா என்பவர்களிம் ம்த்தியில் தன் மகனை மாவீரனாக்கிய தலைவன்.
புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஒரே காரணத்திற்காக நடந்த இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்த உலக தலைவர்க்ளே., இந்திய வல்லரசின் ஆட்சியாளர்களே ...இதோ உங்கள் கண்ணோட்டத்தில் தீவிரவாதிகள் மாவீரர்களாகிவிட்டார்கள்..இனி காரணம் என்று தேடாமல் தமிழர் வாழ்வு சிறக்க உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.
தமிழினத்தலைவரே! இனியாவது தமிழ் மக்களுக்காக் குரல் கொடுங்கள். இனியாரும் உங்கள் ஆட்சியை விடுதலைப்புலிகள் பேரை சொல்லி கலைக்க முடியாது. நீங்களும் அவர்களுக்காக ராஜினாமா செய்ய தேவையில்லை.
நீங்கள் தவற இழைத்தாக நான் கூறதேவையிலை.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.இனிமேலாவது அதற்கு பிரச்சாயித்தம் தேடுங்கள்.
நடந்தவைகளை மறப்போம். வரலாறு நமக்கு வாழ்வழிக்காது சொந்தங்களே ! நடப்பவைகளை எண்ணுங்கள்.
இன்னும் 33 ஆண்டுகள் வேண்டாம் சொந்தங்களே. மாவீரர்கள் ஆனது போதும். இனிமேல் நம் குழந்தைகள் சமாதானமான் உலகத்தில் வாழட்டும்.
மாவீரர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். வெள்ளை பூக்கள் மலரட்டும் ..
வாழ்க தமிழினம் !
Wednesday, May 6, 2009
நானும் , சென்னை விமான நிலையமும் !
சிறு வயதிலிருந்தே மீனம்பாக்கம் போகனும், விமானங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசை.. அது 2003ல் தான் நிறைவேறிச்சு.நான் அப்ப சென்னையில் வேலை தேடிகொண்டுருந்தேன்
. எங்க அண்ணன் சிங்கைலிருந்து வரும் அவங்க நண்பரை வரவேறக ஊரில் இருந்து வந்தது. நானும் அண்ணணோடு விமான நிலையத்திற்கு சென்றேன்.
முதல்முறையா கலர் கலரான ஆடைகளில் விமான பணிப்பெண்களை பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது.. " சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் " என்ற பாட்டில் வரும் கொளதமிக்கு அப்புறம் முழுகாலுறை அணிந்த பெண்களை அப்போதுதான் பார்த்தேன்..அதென்னமோ தெரியல வெளி நாட்டு விமான பணிப்பெண்கள் தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தார்கள் ! :
அந்த நேரத்தில் ஒரு குவைத் விமானத்தில் இருந்து பயணிகள் வெளியில் வந்து கொண்டுருந்தார்கள் ..சொந்தமண்ணுக்கு வரும்போது முகத்தில் வருது பாருங்க ஒரு பூரிப்பு அப்ப அப்ப அது தனி ரகம்..ஒவ்வொருத்தர் மூஞ்சிலும் அவ்வளு சந்தோசம்..அவங்க சொந்தங்களை கண்டதும். ஒரு அம்மா தன் கைகுழந்தையோட நின்னுகிட்டு இருந்தாங்க.காதல் திருமணம்னு நினைக்கிறேன்.அவங்க மட்டும்தான் வந்திருந்தாங்க வேறயாரும் வரலை.அவங்க புருசன் வந்தவுடன் "என்னங்க. " .என்றவர் அதற்கு மேல் பேச்சு வரல..அந்த கைகுழந்தைய..வாங்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் அவர் அப்படியே அணைத்து கொண்டார்.இருவர் கண்ணிலிருந்தும் தாரை தாரையாக கண்ணீர் ! பாசப்பிணைப்பு..எனக்கு மறபடியும் உடம்பு சிலிர்த்த்து..
அப்புறம் என்பக்கத்தில் ஒரு வயதான பெற்றோர் நின்றனர்..அவர்களில் பெரியவர்." உன் பிள்ளை 5 வருசம் கழித்து வரான்..அவன் இப்ப எப்படி இருக்கானோ எதாவது அடையாளம் சொன்னானா? " அதற்கு அந்த அம்மா " அடப்போங்க எத்தனை வருசம் ஆனாலும் என் பிள்ளை எனக்கு தெரியாதா ! " என்றாள் . அதே மாதிரி கொஞ்ச தூரத்தில் வரும் போதே.."அதோ வந்துட்டான்..தம்பி...ராசா..." என்று ஆனந்த கண்ணீரொடு சத்தம் போட ஆரம்பித்து விட்டார். பெரியவர்.."சும்மா இரு அது வேறயாராவுது இருக்க போவுது.." என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த பையன் ஓடி வந்து "அம்மா" னு அவங்களை கட்டிபிடித்து கொண்டார்....இப்படி நிறைய பாசப் சந்திப்புகள் நடந்து கொண்டுருந்தன....சிங்கை விமானம் தாமதமானதால் நாங்க விமான நிலையத்தை சுத்தி கொண்டுருந்தோம்..
புறப்படும் மையத்திற்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டுருந்தேன்.. நான் சோகமான முகபாவம், சந்தோசமான் முகபாவம் பார்த்திருக்கேன்..முதன் முதல சோகம் கலந்த சந்தோசமான முகங்களை அங்கே தான் பார்த்தேன்..குறிப்பா ஒரு பொண்ணுகிட்டே..அந்த பொண்ணு கல்யாண ஆன புதுப்பெண்..அவங்களோட கணவரோட சிங்கைக்கு போறாங்க..அவங்களுக்கு முதல் விமான பயணம்னு நினைக்கிறேன்..அவங்க உறவினர்கள் எல்லாம் கிட்டதட்ட அழறாங்க..அந்த பொண்ணு முகத்தில முதல் முறை விமான பயணம், தனியா தன் புது கணவரோட என்ற சந்தோசமும்,உறவுகளை பிரியும் சோகமும்..அப்பப்பா சான்ஸே இல்லை...
அப்புறம் கொஞ்ச நேரத்தில் நாங்க திரும்ப வருகைக்கான மையத்திற்கு வந்தோம்..அப்ப ஒரு அழுகுரல் கேட்டிச்சு..என்னானு திரும்பி பார்த்தா ஒரு 35 வயது மதிக்க தக்க வாலிபர்.." போச்சே போச்சே இவ்வளு நாள் நாயா உழைத்த எல்லாம் போச்சே...." என்று பரிதாபமாக அழுது கிண்டுருந்தார்..என்னனு போய் விசாரிச்சா..அவர் குவைத்யிலிருந்து அவங்க தங்கை கல்யாணத்திற்காக நகை கொண்டு வைந்திருக்கார் அதை காணோமாம்..பெட்டியிலதான் வந்திருந்தாராம் . எங்க யார் எடுத்தானே தெரியலயாம்..அவங்க குடும்பத்தினர் அவரை சமாதான படுத்திறாங்க..இருந்தாலும் மனம் ஆறாமல் தொடர்ந்து அழுது கிட்டே இருந்தார்.."கல்யாணம் நின்னாலும் பரவாயில்லைனே நீதான் வந்திட்டீல" என்றது ஒரு குரல்..அது அவரது தங்கை என்று நினைக்கிறேன்.. அது வரை விமான நிலையம், பலதரப்பட்ட மக்களின் பாச சந்திப்புகள், பிரிவுகள்னு பார்த்து சந்தோசமாய் இருந்த நான் இந்த நிகழ்வை பார்த்தலிருந்து கிட்ட தட்ட அழுதிட்டேன்..
நம்மாளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்திற்காக ( பெரும்பான்மை குடும்ப காரணங்களுக்காக) வெளி நாட்டில் போய் எவ்வளவு கஸ்ட படுறாங்க ..இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலம் வருமோ !
( அடுத்த முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு சென்றது என் முதல் வெளி நாடு பயணத்திற்காக ..அந்த அனுபவத்தை இன்னொரு பதிவில் எழுதிறேன் ! )
~~~
Wednesday, April 22, 2009
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
தனிப்பட்ட சோனியாவின் ,ராகுலின் கோபம் நியாயமானது..என் கணவரை, அப்பாவை யார் கொலை செய்திருந்தாலும் எனக்கு கண்டிப்பாக கோபம் வரும். மன்னிப்பது சிரமம்.
ஆனால் ஒரு அரசாங்கத்தை,இந்த காந்தி தேசத்தை கட்டி ஆளூம் சோனியாவிற்கு பக்குவம் வேண்டும்.அதை அவரிடம் எடுத்து சொல்ல ஒரு நாதியில்லையே ! அவரின் அந்த கோவத்திற்கு தூபம் போட்டு அதன் மூலம் ஆதாரம் தேடும் மனிதாப மானம் அற்ற அதிகாரிகளும்,அரசியல்வாதிகளாலும்தான் ஈழத்திற்கு இந்த நிலைமை.
இந்தியா உதவி செய்யாட்டி வேறு நாடுகளில் இருந்து ஆயுதம் வாங்க மாட்டார்களா..இது எல்லா அறிவாளிகளின் கேள்வி. எப்படியும் அவர்கள் கொலைசெய்யபடுவார்கள் அதனால் நானே கொல்றேன் என்று சொல்கிறதா காந்தி தேசம் ? ஒ இதற்கு பெயர்தான் கருணை கொலையா ? மற்றும் ஒரு கேள்வி இந்தியா மட்டும் காஷ்மீர், அஸ்ஸாமில் தீவிரவாதிகளை எதிர்த்துவிட்டு ,திவரவாதிற்கு எதிராக போராடும் இலங்கைய கண்டிக்கலாமா? அடே அறிவாளிகளா காஷ்மீரிலும்,அஸ்ஸாமிலும் இந்தியா குண்டு மழை பொழிகிறதா.. ஒரு 2000 பேரை கொல்ல இரண்டு இலட்சம் பேரை கொன்றதா ? அத்தனை பேர கொன்ற கஸாப்பிற்கு வக்கீல் வத்து வாதாடும் தேசம் இல்லையா இந்தியா ? தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ? ஏன்னா எங்களுக்கு என்று ஒரு நல்ல தலைவன் இல்லை.
IPKF பத்தி எவனும் பேசறதில்லை.காந்திய கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.இந்திராவை கொன்றவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆனால் ஈழம் என்று வந்தவுடன் ராஜிவை கொன்றவர்கள்..அதனால் விடுதலைப்புலி களோடு மற்ற எல்லாரும் (குழந்தைகள் உட்பட) செத்து மடியட்டும். கேட்டால் இந்திரா, காந்தியை சுட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கபட்டது.ஆனால் ராஜிவை கொன்றவனுக்கு கொடுக்கபடவில்லை ( அப்போ ராஜிவை கொன்றவர்கள் சிவராசன் எல்லாம் தண்டிக்கபடலையா ? ) . தயவு செய்து பிரபாகரனை கொன்று விடுங்கள். அப்போதாவது எங்கள் ஈழ பிஞ்சுகள் சாகாமல் இருப்பார்களா என்று பார்ப்போம்.எங்கள் இளம் பிஞ்சுகள் காக்கபடும் என்றால் அவர் சந்தோசமாகதான் உயிர் இழப்பார். அவர் ஒன்னும் தமிழ் நாட்டு தலைவர்களை போல பிழைக்க தெரிந்தவர் அல்ல. தமிழ் நாட்டு தலைவர்கள் தான் பதவிக்காக தன்மானத்தை இழந்திருக்கார்கள். ஒரு ராஜிவிற்கு லட்சம் தமிழர்கள்..இன்னும் போதவில்லை..குடிங்க இன்னும் எவ்வளுவு ரத்தம் ராஜிவின் பெயரால்,புத்தரின் பெயரால் குடிக்கனுமோ குடிங்க.
நான் வல்லரசு நான் என்னனாலும் பண்ணுவேன் அப்படிங்கிறா இருமாப்பு. வல்லரசு மும்மையில் என்ன பண்ணிச்சு ? ம...ரை பிடிங்கிட்டு இருந்துச்சா? . ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் கொலைசெய்ய படுகிறார்கள்..ஆனால் அதைப்பற்றி கவலை மட்டும் தெரிவித்துவிட்டு பின்னாடி இலங்கை கிட்ட இன்னும் என்னடா பன்றீங்கனு கேட்கும் தலைவர்களை பெற்றிருக்கிறது காந்தி தேசம்.
இந்திய தொலைகாட்சிகள் எல்லாம் தொலைதூரத்தில் இருக்க எங்கோ ஒரு நாட்டில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தால் அன்று நாள் முழுக்க ஒப்பாரி வைக்க கூட்டத்தை கூட்டும் அவர்களுக்கு அருகில் நடக்கும் இனப்படுகொலை கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொது தேர்தல் வந்த உடனே எல்லாம் பிராபகரனை மட்டும் தான் ஈழம் போல அவரை பற்றியே பேசுகின்றன.அவர் தீவிரவாதியா,இல்லை பயங்கரவாதியா என்று பட்டிமன்றம் வேற.(இந்த தேர்தல் வராவிட்டால்..அவர்கள் இந்த செய்தியை கூட போட்டிருக்க மாட்டாகள்) அவர்கள் பார்வைக்கு அங்கு செத்துவிழும் பிணங்கள் தெரியவில்லை. விடுதலைப்புலி என்றால் உடனே ராஜீவ் கொன்றவர்கள் என்றுதான் சொல்கிறார்கள் வட இந்திய தொலைகாட்சிகள்.அது எதற்காக உருவாயிற்று ? அவர்களுக்கு தீலிபன் தெரியுமா? எட்டி எட்டி உதைத்தால் கடிக்க தெரியாத நாய் கூட திரும்ப பாயும்.இந்திய ஊடகங்களுக்கு இதயமே இல்லை . நீதி நசுக்க படுகிறது. அதை பார்த்து இந்த மனித நேயமிக்க உலகம் கை கட்டி வாய் பொத்தி மொளனம் காக்கிறது. தேசியபாதுகாப்பு சட்டம உலகம் முழுவதுமா இருக்கு?
ஈழ பிரச்சனையில் இன உணர்வு காட்டதேவையில்லை குறைந்த அளவு மனிதாபமானம் காட்ட முடியாதா காந்தி தேசத்து மக்களே ! . உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களுக்கு என்று ஆயிரம் பிரச்சனைகள். சிலருக்கு சோத்துக்கே வழியிலை இதுல அவங்களுக்கு நான் என்ன பண்றது என்பது எண்ணம் அவர்கள் பரவாயில்லை . (சில பேருக்கு இலங்கையவிட , IPL ல சென்னை தோற்றதுக்கும், விஜயின் வில்லு படம் ஊத்திகிட்டதுக்கும்தான் அதிகமாக கவலைபடுகிறார்கள்).ஆனால் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களிடம் ஈழ சோகம் இருப்பது உண்மை. ஆனால் அவர்களின் எண்ணத்தை வெளிபடுத்த தடம் இல்லை. (ஆமா நம்மால என்ன ஆகப்போது.. என்ற மனநிலைதான் நம்முடைய எதிரி. அந்த எதிரியை நாம் ஒரு நாள் வீழ்த்துவோம்). கொடுமையிலும் கொடுமை ஈழ பிரச்சனை வைத்து தமிழ் நாட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்..அடப்பாவிகளா அடப்பாவிகளா.. ராஜபக்சே பரவாயில்லை நேருக்கு நேர் மோதுகிறான்..நீங்கள் எல்லாம் முதுகில் குத்துவர்கள் தானே ? தமிழ் நாட்டு தலைவர்களுக்கெல்லாம் கருணாதியை தமிழின எதிரியாக சித்திரிப்பிதால் தான் குறியாக இருக்கின்றவே தவிர வேரு எதுவும் ஆக்க பூர்வமாக செய்வதில்லை.கருணாநிதிக்கு அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதில்தான் நேரம் போகிறது. உண்மையில் பிரிந்து கிடக்கும் தமிழ் நாட்டு தலைகளால் ஒன்றும் செய்ய இயலாது, ஓட்டுக்காக வேண்டுமானால் குரைக்கலாம்.
நாயாக இரு நக்கி பிழை ..இதுதான் உலகத்தார் தமிழனுக்கு சொல்லுவது .சக தமிழன் சாகும் போது எதுவுமே செய்யாமல் சகதமிழனுக்காக அழ மட்டுமே செய்யும் கோழை நான் என்று வெட்கி தலை குனிந்து ஒத்து கொள்கிறேன்.முதன் முறையா இந்தியாவில் அதுவும் தமிழனா பிறந்ததற்கு வெட்கபடுறேன். வேதனைபடுகிறேன். .. யாரையும் சொல்லியும் குற்றமில்லை நாம் அடிமையாக பிறந்ததுதான் குற்றம்... அடிமையாக இருப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே ! கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றவனுக்கும், ரசிகனாக சினிமா நட்சத்திரங்களும் , வருவாய் காரணமாக coraporate கம்பெனிகளுக்கும் , ஊழல் செய்யுபவரை தட்டி கேட்க வக்கில்லாதவராகவும் , எவன் எக்கேடு கெட்டுபோனா நமக்கென்னா என்று கிரிகெட்டுக்கும் அடிமையாகத்தான் இருக்கோம் நாம்.அடிமையாக இருப்பதில் கூட உயர்ந்த சாதி அடிமை, தாழ்ந்த சாதி அடிமை என்று வேறுபாடு வேர.. இந்த அடிமை தாழ்ந்தபட்ட அடிமை என்று நமக்குள் சண்டை வேறு ! சக அடிமைகளே இனிமேல் யாரும் தமிழன் பெருமை பேசாதீர்கள் !
நான் இந்த பதிவை எழுதுவதால் ஒன்றும் இலங்கையில் என் இனம் அழிக்கவடுதை தடுத்து விட முடியாது ..என் மனசாந்திக்காக எழுதுகிறேன். பாரதியின் சொன்ன வார்த்தைகளை (முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ) பாதியை நான் பின்பற்றினேன். ராஜபக்சே, சரத் பொன்சேகா , கருணா , நாராயணன் , சிவசங்கர் மேனன், தினமலர், கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, பிரணாப் முகர்ஜி, தங்கபாலு, இளங்கோவன்,ராமதாஸ் மற்றும் என்னையும் (இந்திய தேசத்து அடிமை) நினைத்து என் வாயில் எச்சில் வற்றும்வறை காரி காரி உமிழ்ந்தேன் கழிவறையில்.
~
Sunday, February 8, 2009
ரஜினி - எல்லாரையும் போல சாதாரண சுயநல மனிதர் தான் ...
ரஜினி..ஒரு நல்ல நடிகர் , உழைப்பால் சாதாரண நிலையில் இருந்து பிரபலமான நிலைக்கு உயர்ந்தவர் , ஊடகங்களில் இவர் புகழ் பாட வைத்தவர், சினிமாவில் அதிகம் சம்பாதித்தவர், அவரை வைத்து சிலர் சம்பாதிக்க உதவியவர்..மற்ற படி அவர் சாதாரண எல்லாரையும் போல சுய நல மனிதர் தான்..
அவர் அவர் அரசியலக்கு வர வேண்டும் , என்று சொல்லும் so called ரசிகர்கள் , அவரை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களே ! ஒரு சின்ன உதாரணம் .ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் "நாங்கள் வேற கட்சிகளில் சேர்ந்திருந்தால் எங்கள் நிலைமை வேற மாதிரி இருந்திருக்கும் ரஜினியை நம்மியதால் இப்படி இருக்கிறோம் ". இதில் இருந்து தெரியல..இவங்க ரஜினிய அரசியலக்கு வர வேண்டும் என்று சொல்லுவது , இவங்க நிலைமை மாறுவதற்கு , மக்களுக்கு சேவை செய்ய இல்லைனு....
ரஜினி சிறந்த வியாபாரிங்க , இவங்களுக்கு இப்ப வறேன் அப்ப வறேன்னு தூபம் போட்டு நல்ல தன் படங்களை வியாபாரம் பண்ணுகிறார். .. பாபா படம்னு நினைக்கிறேன்.. ஜெயா மேடம் சினிமா டிக்கேட் விலை எவ்வளவு வேணாம்னு இருக்கலாம்னு ஒரு சட்ட தளர்ச்சி கொண்டு வந்தாங்க ! அது வரைக்கும் ஜெயா மேடத்திற்கிட்ட பனிப்போரில் இருந்த வரு...உடனே பூங்கொத்து கொடுத்து நன்றி சொன்னாரு....ஏன்னா ,தன் படம் ரிலீஸ் ஆகுது...ஒரே வாரத்துல தமிழ் நாடு so called ரசிகர்கள் பணத்தை லம்பா அள்ளிட்டு இமய மலைக்கு போயிடலாம் தான். .டிக்கெட்டுக்கு எவ்வளவு வேணா செலவு பண்ணி வாங்க இந்த இழித்தவாயர்கள் இருக்கும் போது தனக்கென்ன..என்ற தைரியம் தான்..
இது தெரியாம இந்த இழித்தவாயர்கள் 400,500 என்று டிக்கெட்டுக்கு செலவு பண்ணி அந்த மொக்கை படத்தை பார்த்தானுங்க ! ரஜினி உண்மையிலே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருந்தால் தான் படத்துக்கு சாதரண ரேட்டிலே,அது கூட வேண்டாம் ஒரு reasonable ரேட்டில் ஆவது தன் ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கலாமே ..அவரை பொறுத்த வரை துட்டு தான் முதல்ல அப்புறம் தான் எல்லாம்...எங்க பக்கத்து டீக் கடையில் வேலை பார்த்த பையன் தன் 10 நாள் சம்பளத்தை சேர்த்து வைத்து 2.5 மணி நேரம் ரஜினி படம் பார்த்தான் 400 ரூபாய் கொடுத்து..அடுத்த நாள் அவன் கிட்ட காசு இல்லாததால் அவன் உடல் நிலை சரி இல்லாத அம்மாவுக்கு என் நண்பன் தான் மருந்து வாங்கி கொடுத்தான். இதே மாதிரி எத்தனை பசங்க அவங்க சம்பாதியத்தை கொடுத்தார்களே....
சிவாஜி பட வெளியீடப்ப ..ரஜினிய வைத்து english TV channels -உம் சம்பாதித்து கொண்டனர்.....அதில ஒருவர் பேட்டி.."நான் flight புடுச்சி வந்து1000 Rs ticket டிக்கெட்டு எடுத்தென் .."எனக்கு அது உண்மையா..இல்லை build up - ஆனு எனக்கு சந்தேகம் இருக்கு. உண்மையா இருந்த அவன் சத்தியமாய் On-Duty la வந்து இருப்பான்...தான் ஏமாறுவது தெரியாமல் பெருமையா பேட்டி வேற ! இழிச்சவாயன்.
அந்த சிவாஜி படம் so called கதை கருப்பு பணத்தை பத்தி...- ஆனா இந்த படத்தை வைத்து, இதில் சம்பந்த பட்டவர்கள் (ரஜினியும் சேர்த்துதான்) எவ்வளவு கருப்பு பணம் சம்பாதித்தார்களோ ! முதல்வர் வேற முதல் வேலையா preview பார்த்துட்டு பக்காவா பேட்டி கொடுப்பாரு..ரசிகர்களின் ஓட்டுக்காக ! 55 வயது நடிகருக்கு 16 வயதிலோ அல்லது உலக அழகி தான் கதா நாயகியாக வேணும்...எந்த நடிகைய போட்டாலும் இவரை சுத்தி சுத்தி காதல் பண்ண போறாங்க..யாரைப் போட்ட என்ன ! இவரோட படத்தில் பொண்ணுங்க அப்படி இருக்கனும்னு இப்படி இருக்கனும்னு ஆணாதிக்க வசனங்கள் நிறைய இருக்கும்....ஆனாலும் அதைப்பத்தி எல்லாம் எந்த பத்திரிக்கையும் விமர்சிக்காது.அவர் படம் நாளே அதிகபடியாக விமர்சனங்கள் எழுதும்...இல்லைனா அவங்க பத்திரிக்கை விற்காதே ! .ரசிகர்கள் இவர் கட் அவுட்ல பாலை ஊத்தி பூஜை பண்ணுவாங்க அவங்களை பொறுத்த வரை அது நாளைய அரசியலுக்கு investment. இவருக்கு இதில் உடன்பாடு இல்லைனா பால் ஊத்தும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்க வேண்டியதுதானே ! அது எப்படி இவரொட வியாபாரம் பாதிக்குமே ..இதை முன்மாதிரியா வைச்சு..இப்ப எல்லா ரசிகர்களும் பால் ஊத்துறான்..(சில் நடிகர்கள் இதுக்குனே ஒரு budget போடுறாங்க ! ).
இந்த ஊடகங்கள் ரஜினி பத்தி கொஞ்ச நாள் எந்த செய்தியும் வரலையா ,உடனே எதாவது ஒரு கட்டம் கட்டிஇதோ வரப்போறாரு அதோ வரப்போறானு செய்தி போட்டு ரசிகர்கள் பணத்தை சம்பாதித்து கொள்கின்றன.அவர் புத்திசாலியோ இல்லையோ அவரை சுற்றி உள்ள கூட்டம் புத்திசாலி..அதனால் அவர் கடைசி பட வெளியீடு வரை பிலிம் காட்டிட்டு தான் இருப்பார்..
அப்புறம் நம்ம பாலச்சந்தர் சோத்துக்கு வழியில்லாம போயிட்டாறாம், அதனால் அவருக்கு ரஜினி ஒரு படம் எடுத்து தன் இழித்தவாய் ரசிகர்கள் பணத்தை புடுங்கி கொடுத்தாராம்....கடைத் தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு கொடுத்த மாதிரி தான்..இதுல என்ன காமெடினா இவர் கொளரவ வேடத்தில் தான் படத்தில வர மாதிரி கதையாம்..ஆனா அதை இயக்குனர் வெளியில சொல்ல வேண்டாம்னாராம்..இவரும் ஒகே சொல்லிட்டாறாரம்..so ரெண்டு பேறும் சேர்ந்து யாரை ஏமாத்தீனீங்க ! நம்ம இழித்தவாயர்களைத்தான் ...இதுல இன்னொரு விசயம் ..இந்த படம் கர்னாடகாவில் ஓடனும் கிரத்துக்காக மன்னிப்பெல்லாம் கேட்டாரு இந்த வாய் சொல் வீரர்...என்னை கேட்டா அவர் பேசிய விதம் தவறு தான். அதற்கு அன்றே அவர் வருத்தம் தெரிவித்திருக்கலாம்..அப்ப பம்மாத்து காட்டியவர்..காசு போகப்போது என்று தெரிந்த உடன் காலில் விழுந்தார்...
ரஜினியை வைத்து ஒரு பொண்ணு latest-a oru book எழுதியிருக்கு அவர் நல்லவரு/ வல்லவருனு ...அவர் ரஜினி எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று தெரியவில்லை..சும்மாவே அடிச்சு விடுவது..புகழுக்காக !
அடுத்து அவுங்க பொண்ணு கிளம்மி இருக்கு இப்ப ரஜினி பேரை சொல்லி சம்பாதிக்க...அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்...english தான் பேட்டி கொடுக்கிறாங்க...நம்ம இழித்தவாயர்கள் சிலர் மொழிபெயர்த்து சொல்ல சொல்லி torture பண்ணியாதக என் நண்பர் சொன்னாரு. அவங்க தான் படித்த Animation-ya சோதித்து பார்க்க நினைத்தது...உடனே அப்பாவோட இழித்தவாயர்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை என்று நினைத்து ரஜினியை வைத்து Animation படம் எடக்குது..நம்மாளுங்க கண்டிப்பா அதை வெற்றி படம் ஆக்கிடுவாங்க..அப்புறம் என்ன அவங்க காட்டில மழை தான் !
ஆனா ரஜினியையும் , ரஜினியின் பேர சொல்லி சம்பாதிக்கும் கூட்டத்தையும் , ரஜினி அரசியலக்கு வருவார் சம்பாதிக்கலாம்னு invest பண்ற கூட்டத்தையும் அப்பாவி ரசிகர்களும், மக்களும் அடையாளம் காணும் தூரம் வெகு தொலைவில் இல்லை..
Saturday, January 24, 2009
ஒரு தோழியின் கவிதையும் ,என் பின்னூட்டமும் !
ஒரு தோழியின் கவிதையும் ,என் பின்னூட்டமும் !
கவிதை.. ( http://valarpiray.blogspot.com/2008/12/blog-post_12.html)
சுயநல வாதிகளின் கூடாறம்
இந்த மென்பொருள் துறை...
எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..??
ஏனென்றால் நானும் ஒரு சுயநலவாதிதான்...
கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும்,
முகவரி கொடுத்தவனை மறந்து... பறந்து இல்லை...
இல்லை... தாவிச் செல்லும்
இதயமற்றவனுக்கு பெயர் software engineer
விடியவிடிய வேலை பார்ப்பான், வெளிநாட்டினர் சுகமாய் வாழ!
சம்பாதித்ததை கொண்டுபோய் "சால்சா"வில் தொலைப்பான்..
மூளை இருந்தும்... முதுகெலும்பு இல்லாதவன்.
ஒருமுறை பறந்து சென்று வந்துவிட்டால் போதும்... 50 சவரனில் இருந்து 100 ஆக்கி அவனையே விற்றுக்கொள்வான்... ஆனால் வாங்கத்தான் ஆளில்லை... வேலை இல்லாதவனங்கள, யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???
என் பின்னூட்டம் :
மரியாதைக்குரிய நண்பரே!
//கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும், முகவரி கொடுத்தவனை மறந்து... பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும் இதயமற்றவனுக்கு பெயர் software engineer //
உங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் உலகத்தில் உள்ள 90 விழுக்காடு மக்கள் சுயநலவாதிகள் தான் !
ஒருவன் தன்னுடைய முன்னேற்றத்திற்காக ,அதற்கு தக்கவாறு முன் அறிவிப்பு செய்திவிட்டு அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ராஜினாமா செய்வதை நீங்கள் ஏன் குற்றமாக பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை ! இது எல்லா துறையிலும் நடப்பது தான். இந்திய அரசு சட்டப்படி, இது ஒரு தொழிலாளியின் உரிமை ! முன் அறிவிப்பு செய்யாமல் சென்றால் ,அது தவறு ,அப்படி ஒரு சிலர் செய்வதற்கு அனைவரையும் குற்றம் சொல்லுவதும் தவறு ! இதயமற்றவர்கள் என்று ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் இழிவு படுத்தாதீர்கள் !
நாரயணமூர்த்தியின் வார்த்தைகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் .." Love your work, not the company.because you never know when company would stop loving you " .
//விடியவிடிய வேலை பார்ப்பான், வெளிநாட்டினர் சுகமாய் வாழ!-----//
வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதனால்தான் இதற்கு பெயர் S/w ஏற்றுமதி.... ஏற்றுமதி அதிகரித்தால் தான் எந்த நாடும் உயர முடியும். இந்திய s/w துறையின் வளர்ச்சிக்கு காரணம் வெளி நாட்டு வாடிக்கையாளர்கள்..அவர்களின் $. அதானால் தான் அதிக லாபம் சம்மாதிக்க முடிகிறது...ஊழியர்களுக்கும் அதிக சம்மளம் குடுக்க முடிகிறது....இந்தியாவின் அன்னிய செலவாணியும் உயர்கிறது. .நீங்கள் செய்திதாள்களில் வாசித்தீர்ப்பீர்கள் ..உலக நாடுகளின் அதிபர்கள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வாங்க என்று வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் . உங்கள் கருத்து படி வெளிநாட்டினர் சுகமாய் வாழ இவர்கள் ஏன் அழைப்பு விடுக்கிறார்கள்? .
தற்போது இந்திய நிறுவனங்களும் (BSNL,AirTel,Relaiance,SBI.....) , இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களும் ( ICICI, HDFC, HSBC ,ESSAR..) s/w பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள், அதற்காக முதலீடு செய்கிறார்க்ள்.. ஆயிரக்கணக்கான software engineer இவர்களுக்காக வேலை பார்க்கிறார்கள். நம்புங்கள் அவர்கள் இந்தியர்களுக்காகவும் வேலை செய்கிறார்கள் !
//சம்பாதித்ததை கொண்டுபோய் "சால்சா"வில் தொலைப்பான்.. ......//
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் , எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! நீங்கள் அப்படியா ? உங்களின் நண்பர்களில் எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! 10% பேர் என்று ஒரு வாததிற்கு வைத்து கொள்வொம்..உங்களுக்கு வேற துறையில் வேலை செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? ! அவர்களிடம் கேட்டுபாருங்கள் இதைவிட அதிமாக/அல்லது ஒத்ததாக தான் இருக்கும் ! என்ன ஒரு வித்தியாசம், அவர்கள் டாஸ்மார்க்கில் குடிப்பார்கள், நம்மாளு பாரில் போய் குடிப்பான்.(நான் பெரும்பான்மையை வைத்து சொல்கிறேன், மற்ற துறை பார் குடிகாரர்கள் கோவித்து கொல்ல வேண்டாம்) குடி என்று பார்த்தால் எல்லாம் ஒண்ணு தான்.....சம்மாதித்த பணத்தில் அதிகமாக "சால்சா" வில் தொலைப்பது கண்டிப்பாக நம்மாளு கிடையாதுங்கோ ! (கட்டிட கூலி தொழிலாளர்கள், சம்மாதித்த பணத்தில் 60% குடிக்காக செலவு செய்கிறார்கள்...பாவம் உடல் வலி போக்க அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி )
//மூளை இருந்தும்... முதுகெலும்பு இல்லாதவன். ..//
இதை எதை வச்சு சொல்றீங்கனு எனக்கு புரியலைங்கே..! எனக்கு தெரிந்த வரை நம்ம துறை சார்ந்த வர்களுக்கு தன்னம்பிக்கையும்(சிலருக்கு தலைக்கணமும்) , சுயமரியாதையும் அதிகம் தான்..குறிப்பா பெண்களுக்கு !
//ஒருமுறை பறந்து சென்று வந்துவிட்டால் போதும்... 50 சவரனில் இருந்து 100 ஆக்கி அவனையே விற்றுக்கொள்வான்.......//
நமது சமூக சூழலில் ,திருமண வரதட்சணை என்பது ஒரு prestige issue - ஆக பார்க்க படுகிறது. நம்முடைய அன்புக்குரியவர்களே அவங்க பையனுக்கு இவ்வளவு செய்தார்கள், நம்ம பையன் வெளி நாட்டிற்கெல்லாம் சென்று இருக்கான் (வெளி நாட்டிற்கு சென்று வருவதைஒரு தகுதியாக நினைக்கிறார்கள் பெரும்பான்மையானோர்) அவனுக்கு இவ்வளவு செய்தால்தான் பெருமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்...பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் தான் இது அதிகமாக இருக்கிறது..பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் மணமகனின் பங்கு என்னவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும் ...so .விற்பது யார்?
(வரதட்சணை வாங்குவதை தவறு என்று தெரிந்தும், அன்புக்குரியவர்களின் குருட்டு பெருமைக்காக செய்ய வேண்டி செய்ய இருப்பதை நினைத்து வெட்கபடுகிறேன்..கண்டிப்பாக அடுத்த தலைமுறையில் இந்த வரதட்சிணை இருக்காது என்று மனப்பூர்வகமாக நம்புகிறேன்.. )
வியாபாரம் என்பது இரு புறமும் சம்மந்த பட்டது ! ஒரு பொதுவான வாதத்தை நான் வைக்கிறேன் நான் தவறா கூட இருக்கலம்..பெரும்பான்மையான பெண்கள்/அல்லது பெண்கள் வீட்டினர், ஏன் மணமகன் அதிக படித்தவர்களாகவோ,அதிகம் சம்மாதிப்பாதிப்போராகவோ ,அதிக உலக அறிவு உள்ளவராகவோ, வெளி நாட்டிற்கு சென்று வந்தவராகவோ ,அல்லது வெளி நாட்டில் வசிப்பராகவோ இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறார்கள் ? அதனால் தானே அவர்களின் சந்தை மதிப்பு உயர்கிறது ! (50 , 100-ஆவது யாரலே?)
பொற்காலம் என்று ஒரு படம் வந்தது ..அதில் முரளி தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை (நான் மேலே கூறியது போல ) தேடி கொண்டே இருப்பார்....இறுதியில் வடிவேல் ஒரு வார்தை சொல்லுவார் .."ஏன்பா உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் தேடினியா ...நான் வசதி இல்லாதவன் என்பதால் தானே என்னை மறந்துட்டேனு"..இதை வரதட்சிணையை ஒழிக்கும் வழியாக நான் பார்க்கிறேன் ...இன்றைய பெற்றோர்கள் பலர், ஊர் பெருமைக்காக தன் மகனை பெரிய இடத்திலோ, தன் மகளை வெளி நாட்டிலோ திருமணம் செய்து கொடுத்து விட்டு தன் பிள்ளை களை பிரிந்து வருத்தபடுகிறார்கள். (கையில் வெண்ணையை வத்து கொண்டு நெய் அலைவார்கள் சிலர் என்பது பழமொழி)
//ஆனால் வாங்கத்தான் ஆளில்லை... வேலை இல்லாதவனங்கள, யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...??? //
இதுவும் புரியலே...வேலை இல்லாதவனங்கள?? நீங்கள் s/w துறையில் வேலையிழ்ந்தவர்களை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறென் ! உங்களுக்கு தெரியமா,சமீபத்தில் நடந்த அமெரிக்க குழறுபடிகளில் வேலை இழந்தவர்களில் , s/w - துறையை சாராதவர்கள் தான் அதிகம்..
எந்த தனியார் துறையிலுமே, திறமை இல்லாதவர்கள் அதிக நாள் நீடிக்க முடியாது...திறமை உள்ளவர்கள் ,வேலை இழந்ததாலும் வேற வேலை கிடைக்க் ரொம்ப நாள் ஆகாது....
IT - துறையை பற்றி அறியாதவர்கள் தான், ஊடகங்களின் எதிர்மறையான விமர்சனத்தை படித்தும்,சிலர் படித்தவனுக்கெல்லாம் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கிறதே ..இனி நாம வேலை இல்லாத பட்டதாரிகள் அவர்கள் படிப்பிற்கேற்ற வேலையை எதிர் பார்க்காமல்..சுயதொழில் செய்ய வேண்டும்னு timepass அறிவுரை சொல்ல முடியாதே என்றும், சிலர் பொறாமையின் காரணமாகவும் நம்மை தவறாக சித்தரிக்கிறார்கள்..
IT- துறையை சார்ந்த நீங்களுமா ? ! நான் IT- துறையில் இருப்பவர்கள் எல்லாம் மகாத்மா என்று சொல்லவில்லை ..ஆனால் அவர்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பதை தான் எதிர்க்கிறேன். உங்கள் கவிதையின் பொருள் தவிர மற்றவை நன்று !
என்னுடைய பதிவின் பேரும் வளர்பிறை தான்..
வளர்பிறை என்று சொல்லிலே ஒரு positive இருக்கிறது.. positive -வா நினைப்போமே ...!..
நானும் IT - துறையை பற்றி எழுதி இருக்கிறேன்
(http://m-valarpirai.blogspot.com/2009/01/it.html) ...நேரம் இருந்தால் படியுங்கள்..உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்......
இப்படிக்கு உங்கள் நண்பன் .